தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது !

தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் ஜனவரி 8, இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்படியால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மீனவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்இ ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்று முதலிட்டே கடலில் தொழில் செய்தேன். வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன்? வங்கிக் கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கிறேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வைக்கவேண்டும். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் எனக்கு இழப்பீட்டை வழங்கிஇ நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *