இஸ்லாமிய மத அவமதிப்பு : சர்ச்சைக்குரிய ஞானசார தே ரருக்கு 9 மாத சிறை !
இஸ்லாமிய மதத்தை அவதூறுசெய்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன 9 மாத சிறைத்தண்டனையும் 1இ500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரால் ஜூலை 16இ 2016 அன்று கிருலப்பனையில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில். “இஸ்லாம் ஒரு புற்று நோய்… அதை ஒழிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.