தமிழரசுக்கட்சி சார்பில் பேச்சுவார்ததையில் ஈடுபட பா உ சிறிதரனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – பா உ சாணக்கியன்

தமிழரசுக்கட்சி சார்பில் பேச்சுவார்ததையில் ஈடுபட பா உ சிறிதரனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – பா உ சாணக்கியன்

“பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் எந்தவொரு பேச்சுவார்ததைகளிலும் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை” என அக்கட்சியின் மட்டு பா உ இராசமாணிக்கம் சுhணன்னியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “கட்சி சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக இருந்தால் கட்சியினுடைய அனுமதி இருக்க வேண்டும். எனவே இது ஒரு பேச்சுவாரத்தையே இல்லை. அது மதிய உணவு இடைவேளை நேரத்தில் அவர்கள் சந்தித்ததே தவிர அது ஒரு அரசியல் சந்திப்பு அல்ல எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழ் கட்சிகள் மத்தியில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் இராசமாணிக்கம் சாணக்கியன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் மூவரும் சந்தித்து உரையாடி இருந்தனர். இது தமிழ் மக்களுக்கான அரசியல் வரைபை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சந்திப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் தேசம்நெற் நேற்று கேள்வியும் எழுப்பி இருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலோயே பா உ சாணக்கியனின் பதில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 25ஆம் திகதிஇ தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தும் மூன்று முக்கிய கட்சியினருக்கு இடையில் மற்றுமொரு சந்திப்புப் பற்றியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஊடகச் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே தேசம்நெற் இல் குறிப்பபிட்டது போல இது கட்சிகளின் சந்திப்பல்ல மூன்று தனிக்கட்டைகளின் சந்திப்பு என்பதை பா உ சாணக்கியனும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சிறிதரன்இ அடைக்கலநாதன் இடையேயான சந்திப்பு ஒரு உணவு நேரத்தில் பேசிக்கொண்ட சந்திப்பு எனவும் அதை பற்றி அலட்டிக்கொள்ள தேவவையில்லை எனவும் சாணக்கியன் கூறியுள்ளமையானது சைக்கிள் குழுவினரின் தலைமையேற்கும் திட்டமும் புஸ்வானமாகப்போகிறது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஜனவரி 8 பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவராகவும் நிதிக்குழவின் உறுப்பினராகவும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்னார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *