‘பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று’- தம்பா

பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று

கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன
பேச்சுக்கள்.
தலைக்குமேல் ’செல்’ போல் கூவிச் செல்கின்றன
அறிக்கைகள்.
’கிளஸ்தர்’ குண்டுகள் போல் சிதறி விழுகின்றன
உறுதி மொழிகள்.

கூத்தும் கரணமும்
இது ஒரு தேர்தல் காலம்;
இழப்பும் அவலமும்
எமக்கு யுத்தகாலம்.

நேற்றைய பேச்சு
இன்று இல்லை
இன்றைய உயிர்
நாளை இல்லை.

நாங்கள் இழப்பது
நீங்கள் பெறுவதற்கு
இழப்பதோ உயிர்கள்
பெறுவதோ வாக்குகள்.

போதும்!

எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்
எதிர்கொண்டு எழுவதே மேல்.

– தம்பா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    நல்ல கவிதை.
    ஆனால் வருத்தமாக இருக்கு
    மக்களை மட்டும் நினைத்து….

    Reply
  • Rohan
    Rohan

    தமிழர் எப்பாடு பட்டும் போகட்டும். புலியை தூஷிக்க இது தான் நல்ல சந்தர்ப்பம். கூட கூட மக்கள் சாக புலி வசையை உசாராகப் பாடலாம். தமிழன்நிரந்தர அடிமையாகத் தான் இருக்க வேண்டும் அன்பது தான் சிலர் அவா.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பொறுங்கோ , எல்லாம் முடிஞ்சதும் சனம் வாய் திறக்கும். இன்னமும் பித்து பிடிச்சுப் போய் சனம் நிக்குது. புலி மக்களை காத்தது என்டு கொண்டது வெளியில் வரயில்லை. இனி வரும். அப்ப இப்பவை விட அதிகமாக வாலை சுருட்ட வேண்டி வரும்.

    Reply