ஈழத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட்டத்தினருக்குப் படித்துக் காட்டினார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சமின்றி நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள். எங்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், நம் கைக்கெட்டிய தூரத்தில், கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாது மத்திய, மாநில அரசுகள் கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித்தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றி செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான் ஒன்றைச் சொன்னால் அதைச் செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழனம் நம்புகிறது என்று ஜெயலலிதா பேசினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    அம்மா தாயே 30 வருடமா பல ஆண்கள் போட்ட தெரு கூத்தால் எமது இனம் அகதியாய் போகாத நாடே இல்லை. இருந்தும் எமக்கு இப்போதுதான் விடுதலை என்போர் தறுதலை என்னும் உன்மை தெரிந்து அதில் இருந்து விடுபட முயற்ச்சிக்கிறோம். இந்த வேளையில் தாங்கள் ரிவால்வர் ரீட்டா போல் வந்து திரும்பவும் எம்மை பளய விளையாட்டுக்கே கூட்டி போக நினைப்பது சரியல்ல. ஆனாலும் ஒரு ஒற்றுமை. தங்களுக்கும் பிரபாவுக்கும். பிரபாவுக்கு பொட்டர் சொன்னால் அதுவே புலியின் சட்டம். அது போல் தங்களுக்கு சரிகலா சொல்லுவதே வேத வாக்கு. ஆகவே முதலில் உங்கள் காலில் உங்களால் (சரிகலா இல்லாமல்)நடக்க முடியுமா என பார்க்கவும். அதன் பின் இலங்கை தமிழரை தாங்க முடியுமா என தமிழகம் சொல்லட்டும்.

    Reply
  • somia
    somia

    தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையே காப்பாற்றமுடியாத செல்வியால் எப்படி ஈழத்தமிழருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியும்? எல்லாம் தேர்தலில் தோற்கும் வரைதான்.

    Reply
  • msri
    msri

    த.கூட்டணி தமிழ்ஈழக் கோரிக்கையை முன்வைத்தது> தேரதலுக்காகவே! செல்வியும் அதேபாணியே! இதை புலிகளின் ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன! இதை இன்றைய லண்டனில் உண்ணாவிரத நிகழ்விலும் வெளிப்படுத்தினர்!> செல்வி சொன்னதை செய்வார்! என்கினன்றனர்! புலிகளின் யி.ரி.வி. தொலைக்காட்சி மாலை நிகழ்ச்சியில் கருணாநிதியை பெரும் கிண்டலுக்குள்ளாகியுள்ளார்! அதுபிரச்சினை அல்ல! ஆனால் பிரித்தாணிய – பிரான்சு வெளிநாட்டு அமைச்சர்களின் இலங்கை விஐயத்தில் >பிரான்சு வெளிநாட்டு அமைச்சரின் வன்னி வீஐயம் சம்பந்தபட்ட விடயம்> மிக நகைச்சுவையாக்க்ப்பட்டுள்ளது! புலிகளின் புலம்பெயர்வுகள் > சர்வதேச சமூகத்திடம் எதைக் கோருகின்றனர்! அதன் பிரதிநிதிகள் அதே கோரிக்கையுடன் இலங்கைக்கு சென்று வன்னிககுப் போக மகிந்தா கோத்தபாயாவுடன் சண்டை பிடிக்கின்றனர் அது புலிகளுக்கே நகைச்சுவை ஆகியுள்ள்து! அதை புலிகளின் தொலைக்காட்சியே ஒளிபரப்புகின்றது! இதை என்னவென்று சொல்வது!

    Reply