அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆணுறை குறித்த கருத்துக்களை போப்பாண்டவர் திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை

_pope_ap.jpgபோப் பாண்டவர் பெனடிக்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆணுறை பயன்பாடு குறித்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களைக் குலைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் விமானத்தில் ஆப்பிரிக்கா சென்ற வேளையில், செய்தியாளர்களிடையில் பேசிய போப்பாண்டவர் கூறியிருந்ததை ஆத்திரம் வரவழைக்கும் விதமான மிகவும் தவறான கருத்து என்று லான்செட் சஞ்சிகையின் தலையங்கம் கண்டித்துள்ளது.

இது முன்னெப்போதுமில்லாத வகையில் மிகக் கடுமையான ஒரு தலையங்கம் என்று பிபிசியின் ரோம் நகர செய்தியாளர் கூறுகிறார். ”பெரும் செல்வாக்குடைய ஒரு நபர், அறிவியல் ரீதியில் பிழையான ஒரு கருத்தை சொல்லும்போது ஏராளமானவர்கள் அதனால் பாதிப்படையக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்கள் தம்முடைய தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று லான்செட் தெரிவித்துள்ளது.

புலிகளிடம் மேலுமொரு சிறிய ரக விமானம்?

வன்னியில் விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு சிறியரக விமானம் இருப்பதாகவும் இதனால் கொழும்பு மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
செக் குடியரசு தயாரிப்பான “சிலின் சற் 143′ இலகு ரக விமானமொன்றே புலிகள் வசமிருப்பதாகவும், அண்மையில் கொழும்பில் தாக்குதல் நடத்திய இரு விமானங்களும் அழிந்து போனதால் வேறு விமானங்கள் இல்லையெனவும் கூறப்படுவதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பொதுமக்களதும் புலனாய்வுத் தகவல்களதும் அடிப்படையில், கொழும்பில் அழிக்கப்பட்ட இரு விமானங்களைப் போன்று இயங்கக்கூடிய நிலையில் ஒரு விமானம் மட்டுமே இருப்பதாகவும் படைத்தரப்பு கருதுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

குடிசை ஒன்றினுள் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருப்பதை பொதுமக்கள் பலரும் பலதடவைகள் பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து, புலிகள் விமானத் தாக்குதலை நடத்தலாமென்ற அச்சுறுத்தலால் அதி உயர் விழிப்புடனிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் குடிசைக்குள் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பவியலாளர்கள் விமானத்தின் திருத்த வேலைகளை மேற்கொண்டதையும் அந்த விமானம் இயங்கு நிலையிலிருந்ததையும் பொதுமக்கள் கண்டதாகவும் எனினும் அந்த விமானம் பறந்ததை அவர்கள் ஒரு போதும் பார்க்கவில்லையெனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

வன்னியில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் ஏழு விமான ஓடுபாதைகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விமானங்களின் பல உதிரிப்பாகங்களையும் அவற்றின் மொடல்களையும் வெவ்வேறு பகுதிகளில் வைத்து தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் முன்னர் படையினர் தெரிவித்திருந்தனர்.

புலிகளின் பெரும்பாலான விமானத் தளங்களைத் தாங்கள் கைப்பற்றி விட்டதாக படையினர் கூறிவந்த நிலையிலேயே புலிகள் இரு விமானங்களை கொழும்புக்கு அனுப்பி தாக்குதலை நடத்தியிருந்தனர். புலிகள் நவீனரக உதிரிப்பாகங்களை தருவித்து புதிய விமானமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது.

நிதி நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சி பெறுவதற்கான பேச்சுகளில் முன்னேற்றம் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் கடன் உதவி வழங்குவது தொடர்பாக ஆயத்தமான நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றபோதும் கொழும்பு கோரும் நிதித்தொகை தொடர்பாக இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லையென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் திகதி எதுவும் எம்மிடம் இல்லை.அல்லது எப்போது இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் சபைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கான திகதி குறித்தும் எம்மிடம் முடிவு எதுவும் கிடையாது. அத்துடன் எவ்வளவு தொகையை நிதியத்திடமிருந்து இலங்கை கோருகிறது என்ற தகவலும் இதுவரை எமக்கு தெரியாது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் வெளியுறவுகள் திணைக்களத்தின் தலைவர் கரோலின் அட்கின்சன் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பரின் பின்னர் நாட்டின் 2/3 பகுதி அந்நிய செலாவணி கையிருப்பை இலங்கை இழந்துவிட்டது. இதனையடுத்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனாக கோரியிருந்தது.

கையிருப்புகள் முடிவடைந்தால் அத்தொகையை ஈடுகட்ட கடன்உதவி வழங்குவது சர்வதேச நாணய நிதியத்தின் வழமையான நடைமுறை அல்ல. ஆயினும் நாட்டின் நிதித்தேவைகளையும் உள்ளூர் பண நிரம்பலின் அளவையும் கருத்தில் கொண்டு கடன் உதவி தொடர்பாக நாணய நிதியமானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள விடயமாகும்.

நாட்டிற்கு சர்வதேச நாணயநிதிய தூதுக்குழு வருகை தருவதற்கு முன்னராக ஏப்ரல் முதலாவது அல்லது இரண்டாவது வாரம் உடன்படிக்கை தயாராகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது பேச்சுவார்த்தையில் துரிதமாக முன்னேற்றம் ஏற்பட்டால் இது சாத்தியமாகும் எனக்கருதப்பட்டது.

செப்டெம்பரிலிருந்து ஜனவரிவரை இலங்கையின் கையிருப்புகள் 3.4 பில்லியன் டொலரிலிருந்து 1.4 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்தது. அந்நிய செலாவணி சந்தைத் தலையீடுகளுக்கு வலுவூட்டுவதற்காக உள்ளூர் பணச்சந்தைக்கு சுமார் 200 பில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டது.அல்லது அச்சிடப்பட்டது. ஆனால், நாணய கையிருப்பு ஜனவரி இறுதியில் 1.2 பில்லியன் என்று உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவித்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்உதவியால் பணம் அச்சிடப்படுவதை நிறுத்த முடியும். அத்துடன் அந்நிய செலாவணி கையிருப்புகளை மீள அதிகரித்துக்கொள்ளவும் இயலும். பரிமாற்ற விகிதம் சந்தை நிலைவரத்திற்கேற்ப தீர்மானிக்கக்கூடியதாக இருந்தால் அதனை மேற்கொள்ள முடியும்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு தீங்கு விளைவிப்பனவாக இருக்காது என்று இலங்கை அதிகாரிகள் லங்கா பிஸ்னஸ் ஒன்லைனுக்கு கூறியுள்ளனர்.

வீண் விரயத்தை குறைத்தல், நாணயம் அச்சிடுவதை குறைத்தல் என்பனவே நிதியமானது வழமையாக விதிக்கும் நிபந்தனைகளாகும். இது இவ்வாறிருக்க வியாழன் இறுதி மதுபானம்,சிகரட் என்பனவற்றுக்கான வரிகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வீதி வீதியாக பிரசாரம் வேண்டாம் மனித வெடிகுண்டு அபாயம் இருப்பதால் தலைவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

2009-india.jpgமனித குண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்ய வேண்டாம் என்று முக்கிய தலைவர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக சாலையோர பிரசார கூட்டங்களை தவிர்க்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களோடு மக்களாக மனித வெடிகுண்டுகளை ஊடுருவச்செய்து முக்கிய தலைவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலை மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பியது. இதையடுத்து, வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டாம் என்று முக்கிய தலைவர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சோனியாவும் ராகுலும், பொதுக் கூட்டங்களில் பேசுவதை விட சாலையோரங்களில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்போது, மக்களுடன் நெருங்கி பேசுவதும் கைகுலுக்குவதும் வழக்கம். சோனியா, ராகுல் ஆகியோருக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

‘சோனியாவும் ராகுலும் பாதுகாப்பு வளையத்தை மீறி கூட்டத்தினருடன் கலந்து விடுகிறார்கள். இதனால் பாதுகாப்பு அளிப்பதில் தங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது’ என்று உள்துறை அமைச்சகத்திடம் சிறப்பு அதிரடிப்படை இயக்குனர் வாங்கூர் தெரிவித்துள்ளார். மனித குண்டு தாக்குதல் அபாயம் இருப்பதால், கூட்டத்துக்குள் செல்வது, அவர்களுடன் கைகுலுக்குவது ஆகியவற்றை தவிர்க்குமாறு சோனியாகாந்தியையும் ராகுல் காந்தியையும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரசாரத்தின்போது, பாதுகாப்பு வளையத்தை மீறாமல், பாதுகாப்பு படையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏழை பெண்களுக்கு ரூ.1 லட்சம் திருமண உதவி; சிரஞ்சீவி வாக்குறுதி

shiranjeevi.jpgபிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி அந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி நகரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-ஆந்திராவில் இதுநாள் வரை தெலுங்கு தேசம்- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.அவர்களால் ஏழைகள் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் வறுமை ஒழிக்கப்படும்.
 
திருமணமாகாத ஏழை பெண்களுக்கு ரூ.1லட்சம் திருமண உதவித்தொகை வழங்குவோம். இத்திட்டத்திற்காக அரசு சார்பில் வங்கியில் ஒரு டெபாசிட் செய்யப்படும். அனைவருக்கும் இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படும்.
 
இதேபோல் கியாஸ் சிலிண்டர் ரூ.100-க்கு வழங்கப்படும்.மேலும் ஒரு வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்களை ரூ.100-க்கு வழங்கப்படும். கடன் எதுவும் வாங்காமல் நிம்மதியாக வாழ இத்தகைய திட்டங்கள் செயல் படுத்தப்பபடும். இவ்வாறு அவர் கூறினார்.

மன்னாருக்கு மேலதிக சிகிச்சைகாக அழைத்துவரப்பட்ட 102 பேரில் ஒருவர் உயிரரிழப்பு

navy_rescue_civil.jpg வன்னியில் இடம்பெரும் மோதல்களினால் காயமடைந்து புல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 102 பேரில் பஞ்சலிங்கம் சுபத்திரா என்ற 39 வயது தாய் சிகிச்சை பலனின்றி இன்று காலை மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 1300 பேர் வரை மன்னார் வைத்தியசாலிக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது 

டென்மார்க்கிற்கு போகொல்லாகம விளக்கம்

rohitha_bogollagama.jpgமுல்லைத் தீவு கரையோரப் பாதுகாப்புப் பகுதியில் படையினர் நேரடித் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளே படையினரை நோக்கி தொடர்ச்சியான ஆட்டிலறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் பெக்ப்ரிக் வோல்டருடன் தொலைபேசி மூலம் நடத்திய கலந்துரையாடலின் போதே அமைச்சர் போகொல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். காயமடைந்த படையினர் விடுதலைப்புலிகள் வசம் உள்ள பொதுமக்களுக்குப் பாதிப்புகளைத் தவிர்க்குமுகமாக பதில் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் அழுத்தத்தினாலேயே தமிழ் கூட்டமைப்பினர் பேச்சில் பங்கேற்கவில்லை – ஜனாதிபதி

con-pre.jpgஎந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டில் வாழ்கின்ற மக்கள் எமது மக்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவது எனது நோக்கமாகும். இந்நிலையில் வடக்கு மக்களுக்கான ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஒன்றிணையுமாறு தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில்  3/26/2009 நடைபெற்ற தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு ஜனாதிபதி மேலும் கருத்து வெளியிடுகையில்,

வடக்கின் தற்போதைய சமூக நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பலமுறை அழைப்பு விடுத்தபோதும் பயங்கரவாதிகளின் அழுதத்தம் காரணமாக அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பு இருக்குமாயின் அவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ளவேண்டியது முக்கியமானதாகும் என்று நான் கருதுகின்றேன்.

தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பு இருக்குமாயின் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களை விடுதலை செய்து பாதுகாப்பு தரப்பினரை எதிர்கொள்ளுமாறு புலிகளுக்கு கூறுகின்றேன்.

con-pre.jpg

ப.நோ.கூ. சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.55 கோடி கடனை ரத்துச் செய்ய அரசு முடிவு

கூட்டுறவுத்துறை கடன்களையும், வட்டி நிலுவையையும் ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 55 கோடி ரூபாய் கடன்களை ரத்துச் செய்வதற்கு கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக வர்த்தக நுகர்வோர் விவகார, கூட்டுறவுத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த கூட்டுறவுத்துறையில் 12 கோடி ரூபாய் பெறுமதியான கடன்களை ரத்துச் செய்யும் நடவடிக்கை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டுறவுத் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, “கூட்டுறவுத்துறைக்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையாளர்களை ஜனாதிபதி தமது மாளிகைக்கு அழைத்துள்ளார்.

நாட்டில் நிலவளமும், நீர்வளமும் நிறைந்த ஒரு பகுதியைப் பிரித்துத் துண்டாடுவதற்காக புலிகள் இயக்கத்தின் முயற்சி உக்கிரமடைந்த வேளையில், அதனை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் 177 பில்லியன் ரூபாய் யுத்தத்திற்காக செலவிடப்பட்டது.

இது மூன்று மகாவலித் திட்டங்களை மேற்கொள்வதற்கான தொகையாகும். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றார். உலகில் எந்தவொரு தலைவரும் இவ்வாறு ஒரே நேரத்தில் பல சவால்களை எதிர்நோக்கியதில்லை.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கூட்டுறவுக் கடன்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 363 கோப் சிற்றிகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கூட்டுறவுக் கடைக்கும் ஜனாதிபதி நிதி வழங்கியிருக்கின்றார். இலங்கையில் பாரிய விநியோக வலையமைப்பைக்கொண்ட நிறுவனமாக கூட்டுறவுத்துறை விளங்குகின்றது.

கூட்டுறவுக் கடனை ரத்துச் செய்வதற்கு கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கு 26800 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதுபோல், மகநெகும, கமநெகும உள்ளிட்ட அபிவிருத்திக்கென இவ்வருத்தில் 36800 கோடி ரூபாய் செலவிடப்படு கிறது. என்றாலும், கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்கு வரலாற்றில் முதற்தடவையாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றார்.

இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் இடையே உக்கிர மோதல்கள்

srilanka_army.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் உட்பட விடுதலைப்புலிகள் வசம் தற்போது உள்ள 21.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வியாழன்று இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 29 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக அது கூறியிருக்கின்றது.

கொல்லப்பட்டவர்களில் 13 விடுதலைப்புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து மேலும் 2000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இராணுவத்தினரிடம் வந்துசேர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.