எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டில் வாழ்கின்ற மக்கள் எமது மக்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவது எனது நோக்கமாகும். இந்நிலையில் வடக்கு மக்களுக்கான ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஒன்றிணையுமாறு தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் 3/26/2009 நடைபெற்ற தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு ஜனாதிபதி மேலும் கருத்து வெளியிடுகையில்,
வடக்கின் தற்போதைய சமூக நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பலமுறை அழைப்பு விடுத்தபோதும் பயங்கரவாதிகளின் அழுதத்தம் காரணமாக அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவில்லை.
தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பு இருக்குமாயின் அவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ளவேண்டியது முக்கியமானதாகும் என்று நான் கருதுகின்றேன்.
தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பு இருக்குமாயின் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களை விடுதலை செய்து பாதுகாப்பு தரப்பினரை எதிர்கொள்ளுமாறு புலிகளுக்கு கூறுகின்றேன்.

பல்லி
இது உங்களுக்கும் தெரிந்து விட்டதா??