வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து ஓமந்தைப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஞாயிறு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரபாகரனின் அடையாளம் தொடர்பாக பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கிளப்பப்படுகின்றன. இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மரபணுச் சோதனைக்கு அன்றேல் அதிலும் தெளிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதா? என இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், “இலங்கை அரசாங்கமானது பகிரங்கமான உறுதிமொழியை வழங்குகின்ற நிலையில் நாம் அதனை ஏற்போம். இருந்தும் நாம் இலங்கை அரசாங்கத்தின் மரணச் சான்றிதழுக்காக காத்திருப்போம். அதன் மூலமாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மூடிவிட முடியும். இதற்கு மேலாக எம்மால் எதையும் செய்யமுடியாது. இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுகளின் போதும் நாம் வினவியிருந்தோம். இலங்கை ஜனாதிபதியின் பிரசன்னத்தின் முன்பாக கூட நாம் இதனைக் குறித்து கேள்வியெழுப்பி இருந்தோம். இதன்போது பிரபாகரன் தொடர்பான உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்றார்.
பிரதமராக 2வது முறையாக இன்று மன்மோகன் சிங் பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டு நடைபெறுகிறது.
2வது முறையாக மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள். 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி , உள்துறைக்கு ப.சிதம்பரம், பாதுகாப்புக்கு ஏ.கே.அந்தோணி, வெளியுறவுத்துறைக்கு கமல்நாத், மனித வளத்துறைக்கு கபில் சிபல், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படக் கூடும்.
தாம் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து “உதயன்”,”சுடர் ஒளி”பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரனினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அசேõக சில்வா, சலீம் மர்சூக், பி.ஏ.இரத்னாயக்கா ஆகியோர் முன்னிலையில் இந்தமனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. தாம் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவைத் தொடர்வதற்குத் தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து மனுதாரர் அனுப்பிய கடிதம் அவரது சட்டத்தரணியால் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதித்தது.
இதேசமயம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வித்தியாதரனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து முற்றாகப் பரிசீலித்து முடிவு செய்யும் விவகாரம் பொலிஸ் மா அதிபரின் பரிசீலனையில் இருப்பதால், அதற்குத் தேவையான நடவடிக்கையை அவர் எடுப்பதற்கு இடமளித்து உயர்நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவின் அனுசரணையுடன் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.
![]()
காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வழமை போல் ஒன்று விட்ட ஒருநாள் நடைபெறவிருக்கிறது. யாழ். அரச அதிபர் கே.கணேஷ் இத் தகவலைத் தெரிவித்தார். இந்த நடைமுறை இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மாவட்டச் செயலகத்தில் இன்று பயணம் மேற்கொள்வதற்காக அனுமதிச்சீட்டினை பெற்றுக்கொண்டவர்களும் அவசர தேவையின் நிமித்தம் செல்ல இருப்பவர்களும் காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அரச அதிபர் கேட்டுள்ளார்.
தேசிய படைவீரர்களைப் பாராட்டும் விழா இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையில் பாரா ளுமன்றத்திடலில் இடம்பெற வுள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்வதுடன் பிற்பகல் மூன்று மணிக்கு இவ்விழா ஆரம்பமாகவுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து புறப்படும் மக்கள் பேரணி ஊர்வலம் பாராளுமன்றத் திடலைச் சென்றடைந்ததும் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிகழ்வையொட்டி கொழும்பு மற்றும் ஸ்ரீஜய வர்தனபுர கல்வி வலயத் திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள் ளதுடன் சில பாதைகள் மூடப்படுவதால் போக்குவரத் துக்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளில் விசேட போக்குவரத்து செயற்திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இதற்கிணங்க கொழும்பு பிரதேசத்தில் பேலியகொடையிலிருந்து பழைய களனி பாலம் ஊடாக ஊறுகொடவத்தை வழியாக பொரளைக்குச் செல்லும் சகல வாகனங்களும் பேஸ்லைன் வீதி ஹிங்கம் சந்தியூடாகச் செல்ல முடியும். அங்கிருந்து சந்தர்ம வீதியூடாக சங்கராஜ மாவத்தை சுற்றுவட்டத்திற்கு வருவதுடன் அங்கிருந்து பஞ்சிகாவத்தை, மருதானைச் சந்தி, டீன்ஸ் வீதியூடாகப் பயணிக்க முடியும்.
பேஸ்லைன் வீதி புல்லர்ஸ்வீதி கனத்தையூடாக பயணிக்க வேண்டிய வாகனங்கள் கனத்தை சந்தியிலிருந்து கிங்ஸ் வீதி கேரி கல்லூரிவீதியூடாக புஞ்சிபொரல்லை மருதானைச் சந்தியூடாக கொழும்பு வடக்குப் பகுதிக்குள் பயணிக்க முடியும்.
பேஸ்லைன் வீதி கனத்தைச் சந்தியிலிருந்து ஹிங்கம் சந்தி வரையிலான குடியிருப்பாளர்கள் வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட வீதியில் பயணிப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ள னர். கொட்டா வீதி ஆயுர்வேத வைத்தியசாலைச் சந்தியிலிருந்து பொரளைப் பக்கமாக எந்தவொரு வாகனமும் செல்வாக்கு அனுமதிக்கப்படமாட்டாது. அதேவேளை, கொட்டாவீதி பொரளைச் சந்தியிலிருந்து ராஜகிரிய அப்பகுதியில் குடியிருப்போரின் வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொல்துடுவ வீதியிலிருந்து பாராளுமன்ற வீதி ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையிலான வீதி இன்று பிற்பகல் ஒரு மணி முதல் மூடப்படவுள்ளது. பெலவத்தையிலிருந்து பாராளுமன்ற சந்தி வரையிலான வீதிகளும் முற்றாக மூடப்படுமெனவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, படையினரை வாழ்த்தும் வைபவங்கள் நேற்று பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களிலும் இடம்பெற்றதுடன் யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை முடக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துமென்று அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையின் கீழும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், கே. பீ. என்பவர், புலம்பெயர் தமிழர்களை ஒன்றுதிரட்டி, போராட்டத்தைத் தொடர்வார் எனக் கூறப்படுகிறதே” என்று செய்தியாளர் கேட்டபோது,
“கே. பீ.யைப் பற்றித் தெரியாது அவர் அவசியமும் இல்லை புலிகள் இயக்கம் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கே. பீ.க்கும் பிடிவிறாந்து உள்ளது. இலங்கையில் தீவிரவாதம் தோன்றுவதற்கான மூலாதாரமே அழிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாட்டை முடக்குவது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். குற்றவாளிகளைப் பரிமாறும் நடைமுறையும் உண்டு. இனி எவ்வகையிலும் தீவிரவாதம் வளர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது” என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
மலேஷியாவில், தற்போது அங்குள்ள பெரும்பான்மை மலாய் இனமக்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை நடைமுறைகளை கைவிடப்போவதாக அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரஜாக் தெரிவித்துள்ளார். அங்கு பெரும்பான்மை மலாய் மக்களுக்கு முன்னுரிமை என்பது நவீன மலேஷியாவின் ஒரு முக்கிய விடயமாக இருந்து வருகிறது.
மலேஷியர்கள் மேலும் சமத்துவம் மிக்க ஒரு சமுதாயத்தை பலமாக ஆதரிக்கிறார்கள் என்று சிங்கப்பூர் பிஸினஸ் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே இந்தக் கருத்தை நஜீப் ரஜாக் வெளியிட்டுள்ளார்.
மலாய் இன மக்களுக்கு ஒதுக்கீடு என்பது அங்கு வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மலேஷியாவில் பெரும்பான்மை இன மக்களுக்கு ஆதரவாக தனித்துவமான கொள்கை இருந்து வருகிறது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான ஒரு நடைமுறை காலாவதியாகிப் போன ஒரு நடைமுறை என்றும், இது ஊழலுக்கு வழிவகுக்கிறது என்றும் சீன மற்றும் இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் விஷேட பிரதிநிதி கே.டி. நம்பியார் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசாமி மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களில் வசிக்கும் மக்களை சந்தித்து தற்போது அரசாங்கம் வழங்கி வரும் நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின்பு அங்கு கருத்துரைத்த நம்பியார் கூறுகையில்:
இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன் தனது இன்றைய விஜயம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு தற்போதைய நிலவரம் குறித்து அறிவிப்பதாகவே அமைந்துள்ளது எனவும் கூறினார்.
இங்கு வருகை தந்த விஷேட பிரதிநிதியை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றதுடன் இடைத்தங்கல், நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களின் கல்வி, சுகாதாரம் உட்பட தற்போதைய நிவா ரணப் பணிகள் குறித்தும் அமைச்சர் நம்பியாருக்கு சுட்டிக்காட்டினார்.