அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத்தப்படவுள்ளதோடு அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து விளக்க மளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

உத்தேச திருத்தச் சட்ட மூலத்தை பிரதமர் டி. எம். ஜெயரத்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து வெளி விவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமைச்சரவைக்கு விளக்கமளித்தார். தற்பொழுதுள்ள யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி விரும்பிய போது பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்கலாம். ஆனால் புதிய திருத்தத்தின்படி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு தடவை கட்டாயம் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் நபராக ஜனாதிபதி பதவியை மாற்றும் நோக்கத்துடனே இந்த புதிய திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தவிர, ஜனாதிபதியாக 2 தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தற்போதைய யாப்பில் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் குறித்த நபர் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும். அதற்கேற்ப ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு அரசியல் யாப்பு திருத்தப்படவுள்ளது. இதனூடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

இதேநேரம் 17ஆவது திருத்தச் சட்டத்திலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணைந்து அமைக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்துவது மிக அவசியம். 1978ஆம் ஆண்டு யாப்பில் உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2001ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி அந்த அதிகாரம் ஜனாதிபதி, பிரமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுகட்சிகள் என கட்சி பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தாமதம் காரணமாக அரசியலமைப்பு சபையை இயங்க வைக்க முடியாமல் போனது.

இதனால் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாப்பினூடாக அமைச்சரவைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் தொகை 5ஆக குறைக்கப்படவிருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதியிடமே இருக்கும். புதிய திருத்தத்தின் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழுங்காக இயங்கும்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளை ஒழுங்காக முன்னெடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நாம் உறுதி அளித்தோம். அதன்படி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளம் படவிருக்கின்றது. உத்தேச அரசியலமைப்பு திருத்த மூலம் தொடர்பான விவாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்று அது நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் 160 எம்.பி. களை விட அதிகமானவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை பலம் எம்மிடமுள்ளது என்றார்.

இரு ஏஜென்சிகளின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்கு சென்றிருந்தபோது பல்வேறு இம்சைகளுக்கு உள்ளான ஆரியவதியை சவூதிக்கு அனுப்பிவைத்த இலங்கையின் வெளிநாட்டு வேலை முகவர் நிலையங்கள் இரண்டினது அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இந்தத் தீர்மானத்தை எடுத்து ள்ளது.

இதில் ஒரு நிறுவனம் ஆரியவதிக்கு விசாவைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் மற்றைய முகவர் நிலையம் ஆரியவதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத் துள்ளதாகவும் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சரும் சந்திப்பு

nerupama.jpgஇன்று இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவும் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் முதாலாம் திகதி சந்நித்துப் பேசவுள்ளார் என அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசியலமைப்பு திருத்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

logo.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தங்களின் முதற்கட்ட திருத்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அடுத்தமாம் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தங்களின் முதற்கட்ட திருத்த யோசனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

முகாமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம்

co-op-city.jpgமட்டக் களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தான்டியில் இயங்கி வந்த மினி கோப் சிற்றியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த முகாமையாளருக்கு மட்டகளப்பு நீதவான் நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

துன்புறுத்திய தம்பதியினர் கைது

ariyawathi_main.jpgஇலங்கை பணிப்பெண் மீது 24 ஆணி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் ஆணையும் அவரது மனைவியையும் சவுதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என சில வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யு.எஸ், ஓபன் டென்னிஸ் தொடரிற்கு தகுதி

saniya.jpgயு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா தகுதிபெற்றார். யு.எஸ், ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் சில நாட்களாக நடந்தது.

கிரிக்கெட் சூதாட்டம்! பாக். ஜனாதிபதி பிரதமர் அதிருப்தி

cricket.jpgபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கர்கள் சூதாட்டத்தில்  ஈடுபட்டு இருப்பது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரதமர் கிலாணி இருவரும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. லோர்ட்ஸ் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மஜீத் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.

பிரதமர் கிலாணி கூறுகையில் பாகிஸ்தான் வீரர்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். இதுதொடர்பாக விசாரனை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு உத்தரவூ இடப்பட்டுள்ளது. வீரர்கள் மீதான புகாரில் உண்மையாகும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள்

sb.jpgயாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த ஆண்டு முதல் ஆங்கில மொழியை ஒரு போதனா மொழியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்துவதுடன் இதற்கிணங்க எமது விரிவுரையாளர்களை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் பல்கலைக்கழகத்தின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களில் நிலவும் விரிவுரையாளர் வெற்றிடங்கள், கட்டிட நெரிசல்கள், உடற்பயிற்சிப் பீடத்தின் குறைபாடுகள் சம்பந்தமாக அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இதனைச் செவிமடுத்த அமைச்சர்; இக்குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு கட்டிடங்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை; போதனாசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பல்கலைக்கழக பீடங்களின் பிரிவுகளை ஒரே இடத்தில் நிர்மாணிக்காது காணி வசதிகளைக் கொண்ட பகுதிகளில் அவற்றை பரவலாக அமைக்க முடியுமெனவும் இதற்கென பெறப்படும் அரச காணிகளில் மாணவர்களுக்கான விடுதிகளையும் அமைக்க முடியுமெனவும் பல்கலைக்கழக மகளிர் அபிவிருத்தி நிதியப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் இதன்போது அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

கிளிநொச்சியில் 54,000 ஏக்கரில் நெற்செய்கை

paddy.jpgஇவ்வாண்டின் பெரும் போகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54,000 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ளது.