பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரதமர் கிலாணி இருவரும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. லோர்ட்ஸ் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மஜீத் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.
பிரதமர் கிலாணி கூறுகையில் பாகிஸ்தான் வீரர்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். இதுதொடர்பாக விசாரனை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு உத்தரவூ இடப்பட்டுள்ளது. வீரர்கள் மீதான புகாரில் உண்மையாகும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.