அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயன்று வருகிறது.

rajitha_senarathna00jpg.jpgதெற்கில் தேர்தல் நடைபெறுகிறபோதும் குருணாகலையில் அகிலா விராஜ் காரியவசத்தை காப்பாற்றும் போட்டியிலே ஐ.தே.க. தலைவர் இறங்கியுள்ளார். ஐந்து சதம் கூட பெறுமதியில்லாத மங்கள சமர வீரவை இணைத்துக் கொண்டதால் ஐ.தே.க. தலைவருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

தெற்குத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.தே.க. வுக்கு இரு ஆசனங்கள் வீதம்தான் கிடைக்கும் ஜே.வி.பி.க்கு முழு மாகாணத்தில் இருந்தும் ஒரு ஆசனம் கிடைப்பது கூட கஷ்டமான காரியமாகும்.மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித மேலும் கூறியதாவது

இது வரை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஐ.தே.க. வின் வாக்குகள் 19 இலட்சத்தினால் குறைந்துள்ளன. இந்தத்தொகை தென் மாகாண தேர்தலின் பின்னர் 23 இலட்சமாக அதிகரிக்கும். ஐ.தே.க. வில் இருந்த பெரும்பாலான மக்கள் இன்று ஐ.ம.சு.மு. உடனே கைகோர்த்துள்ளனர். அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயன்று வருகிறது. ஆனால் எவரையும் பிடிக்க முடியாது ஐ.தே.க. திண்டாடுகிறது.

உலகிலேயே மிகவும் சிறிய கிளி இனம் பபுவா நியுகினியாவில் கண்டுபிடிப்பு

parrot999.jpgஉலகி லேயே மிகவும் சிறிய கிளி இனம் பபுவா நியுகினியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பபுவா நியுகினியாவிலுள்ள வடக்கு தாழ் நில பகுதியில் வாழும் இந்தக் கிளிகள், 9 சென்ரிமீற்றருக்கு குறைவான உயரத்தையும் 11.5 கிராமுக்கு குறைவான நிறையையும் கொண்டுள்ளன.

அமெரிக்க கலிபோர்னிய விஞ்ஞான கல்விக்கூடத்தைச் சேர்ந்த கலாநிதி ஜக் டம்பச்சர் என்பவர் தலைமையிலான குழுவினரே இந்த அரிய பறவையை எதுவித பாதிப்புமின்றி பிடித்துள்ளனர்.

அகதிகளின் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டால் நிதியுதவி கிடையாது என்று ஐ.நா எச்சரிக்கை

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களின் தங்கியுள்ளவர்களுக்கான நடமாடும் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவியை தொடர்ந்து வழங்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு விரைவாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஐ. நா கூறியுள்ளது.

வன்னி மோதல்களால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் இந்த வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அங்குள்ளவர்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்கள் இருப்பதாக கூறும் இலங்கை அரசாங்கம், அவர்களை சோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டியிருப்பதாக கூறுகிறது.

ஆனால், இந்த முகாம்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற ஐ. நா அமைப்பு இவ்வாறு பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பொறுமையிழந்து வருவதாக தென்படுகிறது.

ஐ.நாவின் இலங்கை அலுவலக தலைமை பொறுப்பாளரான நீல் பூன் அவர்கள், இவ்வாறு அகதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த முகாம்களுக்கு தொடர்ந்து நிதி வழங்குவது முடியாது போகலாம் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து இதுவரை 19360 பேரை விடுவித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. அதேவேளை அடுத்தகட்டமாக மேலும் பத்தாயிரம் பேரை விடுவிக்கும் நடவடிக்கையும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

கட்டட அமைப்பு சட்ட மூலம் பாராளுமன்றத்தில்

rajitha_senarathna00jpg.jpgகட்டட அமைப்பு அபிவிருத்தி சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரனையை கட்டட பொறியியலாளர் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்திருந்தார். கட்டட நிர்மான பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கும் நோக்கில் இந்தச் சட்டமூலம் 1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்போது கட்டட நிர்மானத்துறையில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கௌ;ள வசதியாக இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிககப்படவுள்ளது.

விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

09-airways-99.jpg3  நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மும்பாய் செல்வதற்கு விமானக் கட்டணம் ரூ.4,000/- மட்டுமே. இது அதிகபட்சக் கட்டணம். ரூ.3,500க்கு கூட செல்லும் வசதி இருந்தது. இன்று விமானத்தில் சென்னையில் இருந்து மும்பாய் செல்ல குறைந்த பட்ச கட்டணம் ரூ.17,000

சென்னையில் இருந்து ஒவ்வொரு நாளும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு அதிக சேவைகளை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, அதன் விமானிகளின் வேலை நிறுத்தத்தால் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ஜெட்-ஏர்வேஸ் சார்பில் சென்னையில் இருந்து மட்டும் தினமும் 17 விமானங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த 17 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

ஜெட் விமானிகள் வேலை நிறுத்ததால் நாடு முழுவதும் ஜெட்-ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்பைஸ்ஜெட், ஏர்-இந்தியா, கிங்-ஃபிஷர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் விமான சேவைக் கட்டணத்தை ஒரே நாளில் பல மடங்கு வரை உயர்த்தியுள்ளன.

ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் – ராகுல் காந்தி.

100909-rahul.jpgதமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி. தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸாருடன் பேசினார். பின்னர் பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது..

உங்களிடமுள்ள எழுச்சி கட்சியை மேலும் வளர்ப்பதற்கான நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இளைஞர் காங்கிரசார் கையில் கட்சியை ஒப்படைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்றும், மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும் என்றும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறீர்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக இளைஞர் காங்கிரசார் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் அமைய வேண்டும்.

40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கமுடியவில்லை. இளைஞர் காங்கிரசார் மக்கள் நலப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஐந்தே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். கட்சியை பலப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள்.

கட்சிக்குள் எழுந்துள்ள கோஷ்டி பூசல்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். விரைவில் கோஷ்டி பூசல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் முடிந்ததும், பஞ்சாயத்து அளவில் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறைப்படியான தேர்தலுக்குப்பின் கோஷ்டி பூசல்கள் இருக்காது. இதேபோல், தலைவர்கள் பெயர்களில் தொடங்கப்பட்டு உள்ள பேரவைகளும் கலைக்கப்படும்.

திமுக, அதிமுக கட்சிகளின் பலத்தைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு  செயல்படுத்திவரும் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள பாமர மக்களும் உணரும் வகையில் இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்தால், நம் பலம் மக்கள் மத்தியில் பிரகாசிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்றார் ராகுல்.

பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை : இந்து நாளிதழ்

100909the-hindu.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை இன்னும் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சட்டவிளக்கங்கள் இடம்பெற்று கொண்டிருப்பதால் இன்னும் அது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளது.

அதேவேளை, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான வழக்கிலிருந்து முதலாம் இரண்டாம் பிரதிவாதிகளான பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி லோக்சபையில் கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஸ்ணா, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கையிடமிருந்து எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காத ராகுல்

karunanithi.jpgசென்னைக்கு வந்தும் கூட திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியை, ராகுல் காந்தி சந்திக்காமல் புறக்கணித்திருப்பதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகம்  வந்துள்ளார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரஸார் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசியுள்ளார்.

நேற்று சென்னைக்கு வந்து  இரவு சென்னையில் தங்கினார். ஆனால் முதல்வர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இது திமுகவினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. வழக்கமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சென்னை க்கோ அல்லது தமிழகத்திற்கோ வந்தால் மறக்காமல் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். சத்தியமூர்த்தி பவனுக்குப் போகிறார்களோ இல்லையோ, கோபாலபுரத்திற்குப் போகத் தவற மாட்டார்கள்.

ஆனால் மிக முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காதது திமுகவினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்க இதுவரை நேரம் கேட்டு காங்கிரஸ்  தரப்பில் தங்களை யாரும் அணுகவில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இன்றுடன் ராகுல் காந்தியின் தமிழக பயணம் முடிவடைவதால், கருணாநிதியை ராகுல் சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்வர்  கருணாநிதியை ராகுல் காந்தி  ஏன் சந்திக்கவில்லை என்று தெரியவில்லை. அதேசமயம், நேற்று பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு ராகுல் பேட்டி அளித்தபோது திமுகவுடன் நல்ல உறவு உள்ளது. மூத்த தலைவரான கருணாநிதியை நான் பலமுறை சந்தித்துள்ளேன். பல வழிகளில் என்னை அவர் வெகுவாக கவர்ந்துள்ளார் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித மடு தேவாயலயத்தைத் தரிசிக்க 750 பக்தர்களுக்கு படையினரும் பொலிஸாரும் அனுமதி

100909madu_church.jpgமடு மாதா புனித தேவாலயத்தைத் தரிசிக்க 750 க்கும் அதிகாமான பக்தர்களுக்கு  கடந்த செவ்வாய்க்கிழமை படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கியதாக தேசய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 8;00 மணி முதல் மாலை 6:00 மணிவரை இவர்கள் புனித தேவாயலயத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பிட்டதொரு இடத்திலிருந்து இவர்களுக்கன போக்குவரத்து வசதிகளை படையினர் ஏற்பாடு செய்தனர். அத்துடன் பக்தர்களுக்கு புத்துணர்வு பாணமும் வழங்கினர். 267 ஆண்கள்,  303 பெண்கள்,  86 சிறுவர்கள்,  98 சிறுமியர் மற்றும் இரு கைக்குழந்தைகள் இந்த பக்தர்கள் குழுவில் அடங்கியிருந்தாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த 6,833 பேர்; நாளை யாழ். செல்கின்றனர்.

101009displacedidps.gifஇடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6,833 பேரை நாளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 35,000 பேரின் விவரங்களை வவுனியா அரச அதிபர் யாழ்.செயலகத்துக்கு அனுப்பியிருந்தார்.

அந்த விவரங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. முதலில் கிடைத்த,  தகவல்களின் அடிப்படையில் 6,833 பேர் வவுனியாவில் இருந்து நாளை அழைத்துச் செல்லப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மக்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக உறவினர்களிடம் சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது