3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மும்பாய் செல்வதற்கு விமானக் கட்டணம் ரூ.4,000/- மட்டுமே. இது அதிகபட்சக் கட்டணம். ரூ.3,500க்கு கூட செல்லும் வசதி இருந்தது. இன்று விமானத்தில் சென்னையில் இருந்து மும்பாய் செல்ல குறைந்த பட்ச கட்டணம் ரூ.17,000
சென்னையில் இருந்து ஒவ்வொரு நாளும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு அதிக சேவைகளை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, அதன் விமானிகளின் வேலை நிறுத்தத்தால் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ஜெட்-ஏர்வேஸ் சார்பில் சென்னையில் இருந்து மட்டும் தினமும் 17 விமானங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த 17 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
ஜெட் விமானிகள் வேலை நிறுத்ததால் நாடு முழுவதும் ஜெட்-ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்பைஸ்ஜெட், ஏர்-இந்தியா, கிங்-ஃபிஷர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் விமான சேவைக் கட்டணத்தை ஒரே நாளில் பல மடங்கு வரை உயர்த்தியுள்ளன.