மடு மாதா புனித தேவாலயத்தைத் தரிசிக்க 750 க்கும் அதிகாமான பக்தர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கியதாக தேசய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 8;00 மணி முதல் மாலை 6:00 மணிவரை இவர்கள் புனித தேவாயலயத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பிட்டதொரு இடத்திலிருந்து இவர்களுக்கன போக்குவரத்து வசதிகளை படையினர் ஏற்பாடு செய்தனர். அத்துடன் பக்தர்களுக்கு புத்துணர்வு பாணமும் வழங்கினர். 267 ஆண்கள், 303 பெண்கள், 86 சிறுவர்கள், 98 சிறுமியர் மற்றும் இரு கைக்குழந்தைகள் இந்த பக்தர்கள் குழுவில் அடங்கியிருந்தாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.