இடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6,833 பேரை நாளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 35,000 பேரின் விவரங்களை வவுனியா அரச அதிபர் யாழ்.செயலகத்துக்கு அனுப்பியிருந்தார்.
அந்த விவரங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. முதலில் கிடைத்த, தகவல்களின் அடிப்படையில் 6,833 பேர் வவுனியாவில் இருந்து நாளை அழைத்துச் செல்லப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மக்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக உறவினர்களிடம் சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது