சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காத ராகுல்

karunanithi.jpgசென்னைக்கு வந்தும் கூட திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியை, ராகுல் காந்தி சந்திக்காமல் புறக்கணித்திருப்பதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகம்  வந்துள்ளார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரஸார் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசியுள்ளார்.

நேற்று சென்னைக்கு வந்து  இரவு சென்னையில் தங்கினார். ஆனால் முதல்வர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இது திமுகவினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. வழக்கமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சென்னை க்கோ அல்லது தமிழகத்திற்கோ வந்தால் மறக்காமல் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். சத்தியமூர்த்தி பவனுக்குப் போகிறார்களோ இல்லையோ, கோபாலபுரத்திற்குப் போகத் தவற மாட்டார்கள்.

ஆனால் மிக முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காதது திமுகவினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்க இதுவரை நேரம் கேட்டு காங்கிரஸ்  தரப்பில் தங்களை யாரும் அணுகவில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இன்றுடன் ராகுல் காந்தியின் தமிழக பயணம் முடிவடைவதால், கருணாநிதியை ராகுல் சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்வர்  கருணாநிதியை ராகுல் காந்தி  ஏன் சந்திக்கவில்லை என்று தெரியவில்லை. அதேசமயம், நேற்று பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு ராகுல் பேட்டி அளித்தபோது திமுகவுடன் நல்ல உறவு உள்ளது. மூத்த தலைவரான கருணாநிதியை நான் பலமுறை சந்தித்துள்ளேன். பல வழிகளில் என்னை அவர் வெகுவாக கவர்ந்துள்ளார் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    இது ஒன்றும் “SURPRISE” அல்ல!,பிரபாகரன் மறைந்தது எப்படி ஒரு ” கணிப்பு கட்டுக்குள்” எதிர்வு கூற முடியுமோ,அது போல்தான் இதுவும்!.முத்த தலைவாரானாலும் அனுபவம் மட்டுமே அவர் தகுதி,கால மாற்றங்களுக்கு இடங்கொடா!.”AVALANCHE” ஏற்பட்ட பிறகுதான் பலருக்குத் தெரியும்,ஆனால்,ஒரு “கல் உருண்டு” பனிக்கட்டியை சேகரித்த பின்புதான் அது “ஆரம்பமாகிறது” என்பது எதார்த்தம்!.”டீ” சாப்பிட்டுக் கொண்டு,கட்சிக் கொடி கட்டினவனை உதைத்துத் தள்ளி விட்டு,”வாரிசு அரசியலை” திட்ட்ம்போட்டு “வித்திட்டவர்” கலைஞர் கருணாநிதி!,”அவர் பாலூற்றி வளர்த்த பாம்பே அவரைக் கடிக்கிறது”.”பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு சிரித்தது,கருடா சவுக்கியமா?,ஆனால் அந்த பரம சிவனே கடித்தால் ஒன்றும் செய்ய முடியாது!”.

    Reply
  • uma maheswaran
    uma maheswaran

    what a stupid democracy we are on dont we?the great poet and tamil nadu cheif may not care about ragul behaviour but we do,the young man need to learn more things in life.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்தியாவில் வாரிசு அரசியலை கலைஞர் ஆரம்பித்து வைக்கவில்லை. அதுபோல் இந்தியாவில் வாரிசு அரசியல் செய்யாத கட்சிகள் எவை உண்டு. இன்று ராகுல்காந்தி எப்படி அரசியலுக்கு வந்தார்? ராகுலுக்கு உண்மையில் அரசியல் அனுபவம் போதாது. அவர் டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களையே மதி்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிறையவேயுள்ளது. அதனால் ராகுல் காங்கிரஸ் தலைமைக்கு வரும்போது, கட்சியில் பல பிளவுகள் ஏற்படலாம். முன்பு ராஜீவ்காந்தியும்; இந்திரா காலத்திலிருந்த அனுபவமிக்க அரசியல் ஆலோசகர்களைப் புறந்தள்ளிவிட்டு செயற்பட்டதாலேயே, இலங்கைப் பிரைச்சினை உட்பட பல விடயங்களில் பிரைச்சினைகளைச் சந்தித்தார். அதே போன்றதொரு செயற்பாடுகளையே ராகுலும் முன்னெடுக்கின்றார். இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் நிலைவராது, காங்கிரஸ் மேலும் உடையும் நிலையே உருவாகும். ஒருவேளை எதிர்காலத்தில் பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் தலைமையேற்கும் நிலையேற்பட்டால், நிலைமை மாறலாம். அந்தத் தகுதி பிரியங்காவிடம் நிறையவேயுண்டு.

    Reply
  • BC
    BC

    பார்த்திபன், பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் தலைமையேற்கும் நிலையேற்பட்டால், நிலைமை மாறலாம் என்றும் பிரியங்காவிடம் தகுதி நிறையவேயுண்டு என்றும் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    BC,
    அரசியல் விடயமாக பிரியங்கா கையாளும் நடைமுறை, மற்றும் அவரது செவ்விகள் பலவற்றை அவதானித்துள்ளேன். பொதுமக்களிடம் இவரது அணுகுமுறையும், ராகுலின் அணுகுமுறையும் நேரெதிரானது. தனது தந்தையின் கொலைக்குற்றவாளியாக இருந்தாலும் நளினியைச் சென்று சந்தித்து அவரது பக்கத்தையும் ஆராய முற்பட்டது பிரியங்காவின் மனிதாபிமானம். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலில் மக்களைக் கவரக் கூடிய வசீகரமான தோற்றம் பிரியங்காவிடம் நிறையவேயுள்ளது. குறிப்பாக இந்திராவின் சாயல் பிரியங்காவிடம் நிறையவேயுள்ளது. அதனால்த் தான் சொன்னேன் பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் தலைமையேற்கும் நிலையேற்பட்டால், ராகுலை விட நிறையவே சாதிக்க முடியும். ஆனால் பிரியங்காவின் கணவரும் அவரது குடும்பத்தினரும் பிரியங்கா அரசியலீடுபடுவதை விரும்பவில்லை. நாளை அரசியலில் எதுவும் நடக்கலாம்.

    Reply