அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நவராத்திரி விழா இன்று ஆரம்பம்

amman.jpgஅலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபடும் உலக வாழ் இந்துக்களின் புனித நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகின்றது.

இந் நவராத்திரி விழாவையொட்டி ஆலயங்களிலும் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்யப்படும். இன்று நவராத்திரியின் ஆரம்ப நாள் என்பதால் ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படும்.

முதல் மூன்று நாட்களும் வீரத்தை உணர்த்தும் விதத்தில் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாவது மூன்று நாட்களும் செல்வத்தை உணர்த்தும் விதத்தில் லக்ஷ்மி தேவிக்கும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை உணர்த்தும் விதத்தில் சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும். 10வது தினமான 28ம் திகதி விஜயதசமி தினம். அன்றைய தினம் ஆலயங்களில் வித்யாரம். நிகழ்வுகளும் நடைபெறும்.

குறிப்பாக அம்மன் ஆலயங்களில் தேவியின் மஹிமையை உணர்த்தும் நவராத்திரி உற்சவம் வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

அனார்கலிக்கு கொலை அச்சுறுத்தல் – வேட்பாளர் பிணையில்

150909anarkali.jpgதனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை அனார்கலி காலி மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதன் அடிப்படையில், அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தபடி, தென் மாகாணா சபைத் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு சுதந்திர ஐக்கிய முன்னணி வேட்பாளரான நிஷாந்த முத்துஹேட்டிகமவைக் கைது செய்யுமாறு காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இன்று நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்தார். இனிமேல் இது போன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபடக் கூடாது என அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார். 

லின் பஸ்கோ இன்று ஜனாதிபதியை சந்தித்தார்

170909-pascoe.jpgஇலங் கைக்கான் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ. நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி பொதுச்செயலாளர் லின் பஸ்கோ இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மளிகையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோர் உட்பட மற்றும் சிலர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, குறிப்பாக வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர் மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம்- கைவிட்டார் ஒபாமா

ஈரானை சமாளிப்பதற்காக என்று கூறி ரஷ்யாவை எரிச்சல்படுத்தும் வகையில் கடந்த புஷ் ஆட்சியின்போது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா அமல்படுத்த முனைந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை பாரக் ஒபாமா ரத்து செய்து விட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் வரவேற்றுள்ளார்.

பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள மின்டோரோ தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவுக்கு பயங்கரநிலநடுக்கம்ஏற்பட்டது.  மதியம் சுமார் 2.23 மணிக்கு ஏற்பட்ட இந்தநிலநடுக்கம்தென் சீன கடல் பகுதியில் கலின்டான் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் 50 கிமீ ஆழத்தில் மையமிட்டது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் புவியியல் ஆராய்ச்சியாளர் இஸ்மாயில் நாரக் கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரும் அலைகள் ஏற்பட்டது. ஆனால், சுனாமி ஏற்படவில்லை. சுமார் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம்  ஏற்பட்டால் தான் சுனாமி உருவாகும் என்பதால் அதற்கான எச்சரிக்கையும் விடப்படவில்லை

அகதிகள் என்ற பெயரில் விரும்பத்தகாத சக்திகள் நுழையாமல் கண்காணிக்க வேண்டும் – கருணாநிதி

karunanithi.jpgஅகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய குறைகளைக்களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயற்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கை

mullai-ga.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் நேற்றுத் தெரிவித்தார். இப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அங்குள்ள திணைக்களங்களிலும் கடமை புரியும் 119 உத்தியோகத்தர்களும் அங்கு சென்று கடமையாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செய லகத்திலும், கரைச்சி பிரதேச செயலகப் பிரி விலும் இம் மாதம் 25 ஆம் திகதி முதல் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப் பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவு கட்டடங் களையும், பிரதேச செயலாளர்களதும், உத்தியோகத்தர்களதும் தங்குமிடக் கட்டிடங்க ளையும் புனரமைக்கவென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 21.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட செயலகக் கட்டிடம், மாவட்ட செயலாளரின் தங்கும் விடுதிக் கட்டிடம், பூநகரி பிரதேச செயலாளர் தங்கும் விடுதி கட்டிடம், அரசாங்க அதிகாரிகள் தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றைப் புனரமைக்கவென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு 42.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந் நிதியூடான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக் கட்டட வேலைகள் பூர்த்தியானதும் சிவில் நிர்வாகப் பணிகளை அங்கேயே மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். தற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற் கொள்ளுகின்றனர் என்றார்.

வவுனியா முகாம்களுக்கு லின் பாஸ்கோ விஜயம்

180909lynnpascoe.gifஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கை சென்றுள்ள ஐ நாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ நேற்று வடக்கேயுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள முகாம்களின் நிலமைகளை அவர் நேரில் கண்டறிந்துள்ளார்.  நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதிலும், பாடசாலைகள் மற்றும் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்துவதன் மூலம் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும் சில முன்னேற்றங்கள் காணப்படுவதாக லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார். தான் சந்தித்த மக்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு செல்லவே விரும்புகிறார்கள் என்றும் ஆனால் அப்படி செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களிடையே தங்களது எதிர்காலம் குறித்த கவலை காணப்படுவதாகவும் அவர்கள் பொறுமையிழந்து வருகிறார்கள் என்றும் லின்பாஸ்கோ கருத்து வெளியிட்டுள்ளார்  இலங்கையில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தமான நிலையில் இருப்பதன் காரணமாக ஐ நா ஏமாற்றம் அடைந்திருப்பதாலேயே அவர் அங்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

நேற்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் பட்றீஷியா பூட்டனிஸ் – ஜனாதிபதி சந்திப்பு

170909us_ambassado.jpgஇலங் கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பட்றீஷியா பூட்டனிஸ் நேற்று  வியாழக்கிழமை 17 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமது நியமனம் குறித்து உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா,  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக இவரை நியமித்துள்ளார். பட்றீஷியா பூட்டனிஸ் அமைச்சர்களுக்கான ஆலோசகர் நிலையில் உள்ள அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவராவார். இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பங்களாதேஷின் அமெரிக்கத் தூதுவராக இவர் பணியாற்றியுள்ளார். பாக்தாத், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் பிரதி அமெரிக்க தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மாகாண முதலமைச்சர்களின் மாநாடு இன்று ஹபரணவில் ஆரம்பம்

cheif_ministers_meeting.pngமாகாண முதலமைச்சர்களின் மாநாடு இன்றும் (2009.09.18) மற்றும் நாளையும் (2009.09.19) ஹபரண ஜாயா விலேஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. மாகாண மட்டத்தில் நடைபெறும் 26 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு இதுவாகும்.

மாகாண சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளைத் துரிதப்படுத்தல், மாகாண சபை செயற்பாடுகளில் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றல் என்பன குறித்து இந்த மாநாட்டின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநயக்க தெரிவித்தார்.

தற்போது கலைக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை தவிர்ந்த, ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.