மாகாண முதலமைச்சர்களின் மாநாடு இன்றும் (2009.09.18) மற்றும் நாளையும் (2009.09.19) ஹபரண ஜாயா விலேஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. மாகாண மட்டத்தில் நடைபெறும் 26 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு இதுவாகும்.
மாகாண சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளைத் துரிதப்படுத்தல், மாகாண சபை செயற்பாடுகளில் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றல் என்பன குறித்து இந்த மாநாட்டின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநயக்க தெரிவித்தார்.
தற்போது கலைக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை தவிர்ந்த, ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.