இலங் கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பட்றீஷியா பூட்டனிஸ் நேற்று வியாழக்கிழமை 17 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமது நியமனம் குறித்து உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக இவரை நியமித்துள்ளார். பட்றீஷியா பூட்டனிஸ் அமைச்சர்களுக்கான ஆலோசகர் நிலையில் உள்ள அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவராவார். இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பங்களாதேஷின் அமெரிக்கத் தூதுவராக இவர் பணியாற்றியுள்ளார். பாக்தாத், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் பிரதி அமெரிக்க தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது