தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை அனார்கலி காலி மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதன் அடிப்படையில், அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தபடி, தென் மாகாணா சபைத் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு சுதந்திர ஐக்கிய முன்னணி வேட்பாளரான நிஷாந்த முத்துஹேட்டிகமவைக் கைது செய்யுமாறு காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இன்று நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்தார். இனிமேல் இது போன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபடக் கூடாது என அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.
abeya singee
What a travesty of justice. You work for the people for years and finally you find an outsider out ranking you. AA must have weeped before the court who would no doubt have melted in front of her. What a disgraceful level politics in Sri Lanka is coming to