அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய குறைகளைக்களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயற்படுத்தி வருகின்றது.
abeya singee
This is another stupidity! Rajiv is Rahul’s and Priyanka’s father and Sonia’s husband but the convict is seeking pardon from Karunanidhi. The convict should approach Vaiko – for an immediate release! Silly goons.