அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இரவு 8.05க்கு தொலைக்காட்சியைப் பார்க்கவும். – ‘அரசுக்கு எவ்விதத் தொடர்பு கிடையாது’ – யாப்பா

இலங்கை புரியும் சாதனையைத் தெரிந்துகொள்வதற்காக, இரவு 8.05 இற்குத் தொலைக்காட்சியைப் பார்க்குமாறு நேற்று முன்தினம் (30) விடுக்கப்பட்ட அறிவிப்புக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அது அரசாங்கத்தின் அறிவிப்பு அல்லவென்று மறுத்த அமைச்சர் யாப்பா, இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.

தாமோ அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரோ தொலைக்காட்சியைப் பார்க்குமாறு மக்களுக்கு அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லையென்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த மறுப்பைத் தெரிவித்தார்.

தெ.மா.சபை தேர்தல் – 90 வீதமானோருக்கு அடையாள அட்டைகள் அனுப்பிவைப்பு

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தேசிய அடையாள அட்டை இல்லாதோரில் 90 வீதமானோருக்கு அடையாள அட்டைகளை அனுப்பி வைத்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பணிப்பின்பேரில் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள பத்துவீதமானோருக்கும் அடுத்த வார இறுதிக்குள் அடையாள அட்டைகள் பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

தென் மாகாணத்திலுள்ள காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள 47 பிரதேச செயலாளர்கள் பிரிவிலிருந்து 18,464 விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ளதுடன் இவற்றில் 90 வீதமானவர்க ளுக்கு தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் பிரிவுகளுக் கூடாகவே விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அடையாள அட்டைகள் அனைத்தும் உரிய பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து பகுதி கிராம சேவகர்களுக்கூடாக இவை உரியோருக்கு விநியோகிக்கப்படுமென தெரிவித்த அவர், விண்ணப்பதாரிகள் விரும்பினால் தமது அடையாள அட்டைகளை பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அங்குலானை கொலையுடன் தொடர்புடைய பெண் கைது

பாணந் துறையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று மாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஹெரொயின் பக்கற்றுக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டிருக்கும் பெண் அங்குலானையில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார் கூறினர்.

பாணந்துறை பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த சிங்கப்பூர் அரசியல்வாதி கைது!

011009-singapore-police.jpgபுலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூரின் பிரபல அரசியல்வாதியும் கோடிஸ்வர வர்த்தகருமான பால்ராஜ் நாயுடு என்பவர் சிங்கப்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்தவாரம் தமது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் மீதான வழக்கு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் பால்ராஜ் நாயுடு அமெரிக்கா, பிரித்தானிய பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட பால்ராஜ நாயுடுவை தம்மிடம் கையளிக்குமாறு அமெரிக்கா சிங்கப்பூரை கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது

ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை பெற கெஞ்சப்போவதில்லை – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

240909gl.jpgநாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை நீடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரத்தியேகமாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய  போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்;. அவர் தொடர்ந்து கூறுகையில்.

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே அதற்காக வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் ஒருபோதும் இல்லை என்றும் இதற்காக கெஞ்சப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கறேன். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைக்கான காலத்தை மேலும் நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவை அமைச்சர்கள் நான்கு பேரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இநதக்குழு ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடாந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

இலங்கை தொடர்பான வெளிநாடுகளின் விமர்சனங்களை அரசாங்கம் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. விமர்சனங்களுக்கு ஏற்ற விளக்கங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நாம் வழங்கி வருகின்றோம்.

ஊதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். நாட்டில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் சட்டத்தில் சுயாதீனம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்ட விமர்சனத்துக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டன. இவ்விடயத்தில் தலையிட்ட உயர் நீதிமன்றம் அவற்றை நீக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி அரசாங்கம் உடனடியாக அவற்றை நீக்கிவிட்டன. அதன் மூலம் சட்டத்தை அரசாங்கம் கடைபிடிப்பதும் நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குவதும் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு பல விடயங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று வருட காலத்துக்கு இந்தச் சலுகையைக் கேட்டுள்ளோம் அது தொடர்பான விளக்கத்துக்கான தகவல்களை பிரஸல்ஸ்  நகரிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ஊடாக வழங்கி வருகின்றோம்.

வெளிநாடுகள் எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை நிலவச்செய்துள்ளதுடன் பாரிய அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளோம். இதனை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகையை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுள்ளோம்.

இந்த வரிச்சலுகையால் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நன்மை கிட்டுகிறது. கிராமப் புறங்களிலேயே இத்தொழிற்சாலைகள் உள்ளன. கிராமப் பெண்களே இதனால் கூடுதல் பயனடைந்து வருகின்றார்கள். அவர்களின் நன்மை கருதி ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தோனேஷிய பூகம்பத்தில் 1000க்கும் மேலானோர் பலி

01-indonesia.jpgஇந்தோ னேஷியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார்கள் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தோனேஷிய நேரப்படி நேற்று மாலை 5.16 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இதன் தாக்கம் சிங்கப்பூரிலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் உணரப்பட்டது. இதில் சுமத்ரா தீவின் பாடங் பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். சுமார் 100 முதல் 200 பேர் வரை பலியாகி இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், மேலும் பல கட்டிடங்களில் மக்கள் ஆயிரக்க்கணக்கில் சிக்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார துறையின் கீழ் வரும் இயற்கை சீரழிவு மேலாண்மை துறை தலைவர் ரஸ்தம் பகாயா, இறந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் கடும் மழை : கொட்டகலையில் மினி சூறாவளி

0000rain.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது.  காற்றுடன் கூடிய அடைமழையினால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது.

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் ஹரிங்டன் தோட்டப்பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஒன்று சேதத்துக்குள்ளாகியது. தெய்வாதீனமாக சிறுவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அமைச்சர் ஜோன் செனவிரத்தன தலைமையிலான குழு தன்சானியா பயணம்!

பொதுநலவாய நாடுகளின் 55 ஆவது பாராளமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன தலைமையிலான அமைச்சர்கள் குழு தன்சானியாவுக்கு பயணமானது.

‘எதிர்கால உலக சவால்கள்’ என்ற தொனிப் பொருளில்  நடைபெறவுள்ள   இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் பிரியங்க ஜெயரத்ன,  வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப்,  பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் கருணாரத்ன, சமன்சிறி ஹேரத், எட்வட் குணசேகர அடங்கலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன விசேட உரையாற்றவுள்ளார். 

கட்சிகளின் செயலர்களுடன் தேர்தல்கள் ஆணையர் சந்திப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாளை (2) தேர்தலில் போட்டியிடும் கட்சிக ளின் செயலாளர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் வன்முறைகளை தடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடையாள அட்டை தொடர்பில் முகம் கொடுக்கும் பிரச்சினை என்பன குறித்து இங்கு ஆராயப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கை பட்டினி ஒழிப்புத் திட்டம் மறுசீரமைப்பு

sirisena.jpgஇலங்கை பட்டினி ஒழிப்புத் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அதனை தேசிய உணவு அபிவிருத்திச் சபை என மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.