இலங்கை புரியும் சாதனையைத் தெரிந்துகொள்வதற்காக, இரவு 8.05 இற்குத் தொலைக்காட்சியைப் பார்க்குமாறு நேற்று முன்தினம் (30) விடுக்கப்பட்ட அறிவிப்புக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அது அரசாங்கத்தின் அறிவிப்பு அல்லவென்று மறுத்த அமைச்சர் யாப்பா, இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.
தாமோ அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரோ தொலைக்காட்சியைப் பார்க்குமாறு மக்களுக்கு அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லையென்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த மறுப்பைத் தெரிவித்தார்.