யாழ். மோட்டார்வாகன திணைக்களத்துக்கு புதிய கட்டிடம்

rajitha_senarathna00jpg.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ். குடா நாட்டின் மோட்டர் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு புதிய கட்டிடம் ஒன்றை அமைக்க  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி நிர்மாணப் பணிகள் அரச அபிவிருத்திக்கான பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்தக் கட்டிட நிர்மானப் பணிகளுக்கு 19 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *