அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் விவகாரம் – கடற்கொள்ளையர்களுடன் பேச்சு நடத்த நடவடிக்கை

cargo-ship.jpgஏடன் வளைகுடாவில் வைத்து கடந்த திங்கட்கிழமை சோமாலிய கடற்கொள்ளையர் களால் கடத்தப்பட்ட சவூதி அரேபிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் கடத்தப்பட்டது. இக்கப்பலில் இருந்த 14 சிப்பந்திகளில் 13 பேர் இலங்கையராவர்.

இக்கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்க ளுக்கும் சவூதி அரேபிய நிறுவனத்துக்கு மிடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வைக்கும் நோக்கத்துடன் லண்டனில் நிலைபெற்றுள்ள காப்புறுதி நிறுவனமொன்றின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று ஜித்தா சென்றுள்ளார்.

கப்பலில் சிபந்திகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று கடல் கொள்ளையர்கள் கூறியுள்ளபோதிலும் அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் காப்புறுதி நிறுவன அதிகாரியின் வருகையை அடுத்து சாதகமான நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் கவுன்ஸிலர் தாயக மான சபாருல்லா கான் கூறியு ள்ளார்.

கடற்கொள்ளையருடன் செய்மதி தொலைபேசி மூலம் கப்பலுக்கு சொந்தமான சவூதி அரேபியன் நிறுவனம் தொடர்புகொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சோமாலிய கடற் பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலை விடுவிக்கக் கடற்கொள்ளையர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை கப்பமாக கோரி வருகின்றனர்.

ஐ. தே. க உட்பூசல் வலுக்கிறது – மத்தும பண்டார விவகாரம் நாளை செயற்குழுவில் முடிவு

unp-logo.jpgஐ. தே. க.  பட்டியலில் இருந்து திஸ்ஸ குட்டியாரச்சியின் பெயர் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ. தே. க மொனராகலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ரஞ்சித் மத்துகம பண்டாரவிடம் ஐ. தே. க. விளக்கம் கோரியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. ஒன்பதாம் திகதிக்கு விளக்கமளிக்குமாறு கட்சி தலைமைப் பீடம் இவரை கேட்டுள்ளது. ஐ. தே. க. செயற்குழு நாளை (9) கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்தாவில் கூட உள்ளது.

இதன் போது மத்தும பண்டாரவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. மத்தும பண்டாரவை மொனராகலை மாவட்ட முதன்மை வேட்பாளர் பதவியில் இருந்தும் மற்றும் பதவிகளில் இருந்தும் நீக்க உள்ளதாகவும் அறிய வருகிறது. இதேவேளை சு. க. மக்கள் பிரிவு சார்பாக நிறுத்தப்பட்ட திஸ்ஸ குட்டியாரச்சியை ஐ. தே. க. பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கியதால் ஐ. தே. க. கூட்டுக் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

கூட்டுக் கட்சிகளை திருப்தி ப்படுத்து வதற்காக கட்சியின் சிரே ஷ்ட உறுப் பினரான மத்தும பண்டாரவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தயாராவ தையடுத்து ஐ. தே. கவுக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளதாக அறியவருகிறது.

தற்கொலை அங்கிகள், சக்திமிக்க குண்டுகள் மீட்பு – வவுனியா கந்தசாமி நகரில் சம்பவம்

prasard.jpgவவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தசாமி நகரிலிருந்து அதி சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டிரு ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த இரு தினங்களாக முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பயனாகவே இவை மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேடுதலின் போது நான்கரை கிலோ கிராம் நிறைகொண்ட குண்டு, 06 – கிரனேற் கைக்குண்டுகள், ஒன்றரை கிலோ கிராம் மற்றும் ஒரு கிலோவும் 200 கிராம் நிறையும் கொண்ட இருவேறு தற்கொலை அங்கிகள், 04, டெட்டனேட்டர்கள், 02 டோச்கள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பி. ரி. ஐ. பக்டீரியா இறக்குமதி: குழுவின் அறிக்கையை புதன் கையளிக்க திட்டம்

டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு பி. ரி. ஐ. பக்டீரியாவை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராயவென நியமிக்கப்பட்டி ருக்கும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் கையளிக்கப்படவிருக்கின்றது.

இந்த அறிக்கை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படுமென குழு வின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கேள்வி மனுக்கோரல் சபைக்கு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பி.ரி.ஐ. பக்aரியாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு ஒழிப்பு பணியைத் துரிதப்படுத்துவதற்காக பி.ரி.ஐ. பக்aரியாவை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.ஐ. பக்aரியாவை பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வருடம் டெங்கு ஒழிப்புக்கென அரசாங்கம் ஐநூறு (500) மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதில் 80 மில்லியன் ரூபா பி.ரி.ஐ. பக்aரியாவை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப் படவிருக்கின்றது.

சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதம்

sarath_fonseka-02.jpgதமது பிள்ளைகளுடன் தொலைபேசி ஊடாக உரையாட அனுமதி தருமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது பாரியார் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள தமது மகள்மாருடன் உரையாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எனவே இக்கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஜெனரல் சரத் பொன்சேகா தொடரவுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

பொருட்களை ஏற்றி இறக்க அறவிடும் கட்டணம் உடன் நீக்கம்

ஏ-9 பாதையூடாக தென் பகுதியிலிருந்து யாழ். குடா நாட்டுக்குப் பொருட்களைக் கொண்டுவரும் போதும், யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்களைத் தென் பகுதிக்குக் கொண்டு செல்லும் போதும் பாதுகாப்பு கருதி பொருட்களை ஏற்றி – இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணம் உடனடியாக நீக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு கட்டணம் அறிவிடப்படுவது தொடர்பாக ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், அதனை நீக்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து இக்கட்டண அறவீடு நீக்கப்பட்டுள்ளது.

இக்கட்டண அறவீடு நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி ஆகியோருடனும் கலந்துரையாடினார். இதன் பயனாக பாதுகாப்பின் நிமித்தம் பொருட்களை ஏற்றி இறக்கவென அறவிடப்பட்ட கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

ஒரு தொன் பொருட்களை ஏற்றி இறக்கவென ரூபா 4150.00 கட்டணமாக அறவிடப்பட்டது தெரிந்ததே.

இக்கட்டண அறவீடு காரணமாக யாழ். குடா நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும், நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் யாழ்ப்பாண உற்பத்திகளுக்கு தென் பகுதியில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும், இது விடயமாக யாழ். குடா நாட்டு விவசாய மற்றும் கடலுணவு உற்பத்தியாளர்கள் தம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இக்கட்டண அறவீடு நீக்கப்பட்டதன் பலனாக யாழ். குடா நாட்டில் நியாய விலையில் சகல பொருட்களையும் கொள்வனவு செய்யக்கூடிய வசதியை நுகர்வோர் பெற்றிருப்பதாகவும் யாழ்ப்பாண உற்பத்திகளுக்குத் தென் பகுதியில் போட்டியின்றி சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் அரச மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் எவ்வித பாதிப்புகளுமின்றி பொருட்களைத் தாராளமாக யாழ். குடா நாட்டுக்கு எடுத்து வரக் கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

he_the_president.jpgஇலங் கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சேபனையைத் தெரிவித்தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை நியமிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது விரும்பத்தகாத நடவடிக்கையென ஜனாதிபதி, ஐ. நா. செயலருக்கு எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை மூலம் பெருமளவிலான மக்கள் ஏனைய சில நாடுகளில் கொல்லப்படுவதோடு, பாரிய மனித உரிமை மீறல்களும் நடந்த வண்ணமுள்ளன. அத்தகைய நாடுகள் மீது இப்படியான நடவடிக்கைகளை ஐ. நா. எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகம் எந்தவிதமான கருத்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் விடயங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கவேண்டியுள்ளதாக ஐநாவின் தலைமைச் செயலர் இலங்கை அரசிடம் கூறியுள்ளதாக பான்கீமூனின் பேச்சாளர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.  இது பற்றி அறிவிக்கப்பட்டவுடனயே தாமதமின்றி கருத்து வெளியிட்டுள்ளது
 

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு

sarath_fonseka-02.jpgஇராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இதேபோன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்புடைய தனுன, அசோக்கா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன் சேகாவின் விசாரணைகள் நடைபெறும் போது ஊடகங்களை அனு மதிப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது?

அவ்வாறான ஒரு நடைமுறை உலகில் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. எனினும், விசாரணைகளின் முடிவுகள் குறித்து இராணுவப் பேச்சாளர் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றார். அத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோக்கா ஆகியோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்க கொலை விசாரணை: 6 இராணுவ வீரர்கள் தடுப்புக் காவலில்; வாக்கு மூலங்கள் 18ம் திகதி நீதிமன்றில்

lasantha.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக இதுவரை பதியப்பட்ட வாக்கு மூலங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

லசந்தவின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 17 பேருள் 11 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீண்டும் இராணுவ சேவைக்கு உள்வாங்கப்பட்டும் உள்ளனர். எஞ்சியுள்ள 6 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த 4ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் லசந்தவின் படுகொலை தொடர்பான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 18ஆம் திகதியும் இதே போன்று சாட்சியங்கள் சமர்ப்பிக்கப் படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளின் ஊடாக குற்றவாளி யார் என்பதை கண்டறிவதற்கு சான்றுகள் ஏதேனும் கிடைத்துள்ளனவா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,

இதுவரை கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிவதற்குரிய சரியான விசாரணைகளையே பொலிஸார் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை

cargo-ship.jpgசோமாலியா கடற்பரப்பில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 13 இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக கடத்தப்பட்ட கப்பல் கொம்பனி அறிவித்துள்ளது.

ஜப்பானிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சவூதி சென்று கொண்டிருந்த கப்பல் சோமாலியக் கடற்பரப்பில் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலின் கப்டன் உட்பட 14 சிப்பந்திகள் இருந்தனர். கப்டன் கிரேக் நாட்டைச் சேர்ந்தவர். ஏனைய 13 பேரும் இலங்கையர்கள். அவர்களின் பெயரை கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாக்கூப் சேவியர், வீனஸ் ரொபின்சன், ஹேவா பதகே ரங்கா ஜயசிங்க, விஜயமுனி எல்மோ அன்சலாம் சொய்சா, செல்வராசா ராஜவேல், பால கிருஷ்ணன் ஜயரஞ்சன், ரொபேட் ஜோசப், கனகசபாபதி துஷ்யந்தன், அருமைசேகரம் பசில்ராஜா, லக்ஷ்மிகாந்தன் கஜேந்திரன், ஆரோக்கியசாமி பிள்ளை பிரிட்டோ லோரன்ஸ், சவரிமுத்து அற்புதராஜா, ராஜகோபால் ஜெயக்குமார் ஆகியோரே கப்பலில் உள்ளவர்களாவர்.

இவர்களை மீட்டெடுப்பதற்காக கடத்தல்காரர்களுடன், கப்பல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.