அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புதிய பிரதமர் தி.மு. ஜயரத்ன

dm-jayaratna.jpg7ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக பாராளுமன்ற தேசியபட்டியல் உறுப்பினர் தி.மு. ஜயரத்ன இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. தி.மு. ஜயரத்ன கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக வேண்டி 2010 நவம்பரில் சத்தியப்பிரமானம் செய்து கொள்வார். அதுவரை பிரதமர் உட்பட தற்போது அமைக்கப்படும் அமைச்சரவை செயற்படும் என கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இரண்டாவது தடவை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிறகு பிரதமர் பதவி உட்பட அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட இடமுண்டு என எதிர்பார்க்கப்படுகின்றன.

இலங்கையின் நலனை கருத்தில் கொண்டே கொழும்பில் இந்திய திரைப்பட விழா உலகைக் கவர கோலாகல ஏற்பாடு – அமிதாப்பச்சன்

amitabh-bachchan.jpgஇலங்கை யின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நடத்த முடிவு செய்ததாக பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்தார்.  இலங்கைக்கு நேற்று வருகை தந்த நடிகர் அமிதாப்பச்சன் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தென் ஆசியாவின் மிகப்பெரிய ஊடக நிகழ்வாக கருதப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவும் வார இறுதி களியாட்ட நிகழ்வுகளையும் இலங்கையில் நடத்துவதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். அனுபவங்களை உபசரிப்பதில் தலைசிறந்த எமது அயல் நாடான இலங்கைக்கு கொண்டு வருவதன் மூலம் திரையுலக அங்கத்தவர் என்ற முறையில் இன்னொரு வண்ணமயமான தசாப்தத்தை எதிர்பார்க்கிறேன்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் போது இந்திய திரை அசைவுகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும், அற்புத பொக்கிஷமான இலங்கைத் தீவை உலகத்தோடு பகிர்ந்து கொள்ள முடியுமென எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில் ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வார இறுதி நிகழ்வுகளின் போது நடைபெறவுள்ள குளோபல் பிஸ்னஸ் போரம் 2010 நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இச் சந்திப்பானது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே ஒரு தொடர்புப் பாலமாகவும் வர்த்தக மற்றும் சினிமா தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சியாகும். இருதரப்பு பொருளாதாரம், அரசியல், சினிமாத்துறை உட்பட பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் தளமாக இது அமையும்.

விருது வழங்கும் விழாவை நடத்துவதன் மூலம் எமது நாட்டிற்கே உரிய தனித்துவத்தையும் எழிலையும் உலகத்துக்கு எடுத்துக்காட்ட கிடைத்த இந்த மகத்தான சந்தர்ப்பத்திற்காக சர்வதேச இந்திய திரைப்பட அகடமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. ஏ. டி. ஜோர்ஜ் மைக்கல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல யாகொட இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜிட் கப்ரால், பிரபல நடிகர்களான ஜக்சன் அந்தனி, ரவீந்திர ரந்தெ னிய, அக்கடமியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சுபாஷ் ஜோசி ஆகியோரும் உரையாற்றினர்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை – சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு

parliament.jpgஇலங் கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர். இவர்களுள் சுமார் 70 பேர் வரையில் புது முகங்களாக உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும்.

யாழ்தேவி சேவை மே முதல் மீண்டும் ஆரம்பம்

train.jpgவவுனியா வில் இருந்து ஓமந்தை வரையான யாழ்தேவி ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகள் இன்னும் பூர்த்தியடையவில்லை எனவும் அவர் கூறினார்.முன்னாள் பிரதியமைச்சர் லயனல் பிரேமசிரி மன்றம் ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகளை மேற்கொள்கிறது.

ஐஸ்லாந்து எரிமலைக்குமுறல் – லண்டன், பாரிஸ், பிராங்க்பர்ட், ரோம் விமான சேவைகள் ரத்து

srilankan-airlines.jpgகட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய த்திலிருந்து நேற்று லண்டன், பாரிஸ், பிராங்க்பர்ட் மற்றும் ரோமுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் நேற்று 5வது நாளாகவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறலால் ஏற்பட்ட சாம்பல் தூசு காரணமாக கட ந்த சில நாட்களாக 64 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஐரோப்பிய மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்று ஐந்தாவது நாளாகவும் கொழும்பு – லண்டனுக்கிடையிலான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய முகாமையாளர் நேற்று தெரிவித்தார்.
 

நாளை சரத்பொன்சேக்கா பதவிப்பிரமாணம் செய்வார்.

sarath_fonseka-02.jpgநாளைய தினம் (22) பாராளுமன்றம் கூடும்போது கொழும்பு மாவட்டத்தில்  ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத்பொன்சேக்கா பதவிப்பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் இராணுவ தளபதியான இவர் தற்போது இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் விசாரனைக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அமிதாப்பச்சன் சந்திப்பு

pr-am.jpgஇலங்கை வந்துள்ள ஹிந்தி திரைஉலக சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது நினைவுக் கேடயம் வழங்கி ஜனாதிபதி அவரை கெளரவிக்கிறார்

Parliamentary Election 2010- Final District Result – Trincomalee District

   sandanaya.png 

    United People’s Freedom Alliance UPFA         59,784         42.78%         2 
     United National Party UNP  39,691          28.40%          1
     Ilankai Tamil Arasu Kadchi ITAK  33,268          23.81%         1 
     Democratic National Alliance DNA  2,519 1.80% 0 
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP  1,712 1.23% 0 
     Akila Ilankai Thamil Congress AITC  1,182 0.85% 0 
     Pathmanabha Eelam Revolutionary Liberation Front PERLF  279 0.20% 0 
     Sri Lanka National Front SLNF  170 0.12% 0
     United Socialist Party USP  150 0.11% 0 
     Jathika Sangwardhena Peramuna JSP  109 0.08% 0 
     Independent Group 11  IND11_D14 101 0.07% 0
     Independent Group 7 IND07_D14 98 0.07% 0 
     Akila Ilankai Tamil United Front AITUF  85 0.06% 0 
     United National Alternative Front UNAF  76 0.05% 0
     Independent Group 14 IND14_D14 62 0.04% 0 
     Independent Group 3  IND03_D14 55 0.04% 0 
     Independent Group 6 IND06_D14 41 0.03% 0 
     Independent Group 13 IND13_D14 39 0.03% 0
     Independent Group 12 IND12_D14 38 0.03% 0 
     Independent Group 5 IND05_D14 35 0.03% 0 
     Independent Group 1 IND01_D14 33 0.02% 0 
     Independent Group 10 IND10_D14 33 0.02% 0 
     Left Liberation Front LLF  31 0.02% 0 
     Muslim Liberation Front MLF  28 0.02% 0
     United Democratic Front UDF  27 0.02% 0
     Jana Setha Peramuna JSEP  23 0.02% 0 
     Independent Group 4 IND04_D14 19 0.01% 0
     Independent Group 9  IND09_D14 16 0.01% 0 
     Independent Group 2  IND02_D14 15 0.01% 0 
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP  14 0.01% 0 
     Independent Group 8 IND08_D14 9 0.01% 0
 
Valid 139,742                  93.17%
Rejected 10,240               6.83%
Polled 149,982                62.20%
Electors 241,133
 

அமைதியான மீள் வாக்களிப்பு: 55 சதவீத வாக்குப் பதிவு!

election_ballot.jpgநாவலப் பிட்டி தேர்தல் தொகுதியில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்திலும் இன்று நடைபெற்ற மீள் வாக்களிப்பு மிகவும் அமைதியாக இடம்பெற்றதாகவும் 55 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4:00 மணிக்கு வாக்களிப்பு முடிவுற்றது. இன்றைய வாக்களிப்பின்போது எவ்விதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் இடமபெறவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வாக்குச்சாவடிக்குள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட இரு அமைப்புகளுக்கு அனுமதி

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டியில் இன்று (20ம் திகதி) நடைபெறும் மீள் வாக்களிப்பை வாக்குசாவடிகளினுள் ஒரே நேரத்தில் இருந்தபடி கண்காணிக்கவென இரு கண்காணிப்பு அமைப்புக்களுக்கு தேர்தல் ஆணையாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் கண்காணிப்பு பணிகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன்படி மீள் வாக்களிப்பு இடம்பெறும் 38 வாக்குச் சாவடிகளினதும் உள்ளே இருந்தபடி இரு அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவிருக்கின்றனர். இப்பணியில் பெப்ரல் அமைப் பும், தேர்தல் வன்முறைகளைக் கண் காணிப்பதற்கான மத்திய நிலையமும் 76 பிரதிநிதிகளை ஈடுபடுத்தவுள்ளன.

இதேநேரம் மேற்படி 38 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் வாக்க ளிப்பைக் கண்காணிக்கும் பணியில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம், கபே ஆகிய அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்புக்கள் சுமார் 160 பிரதிநிதிகளை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளன.

இது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகையில் நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டியில் இன்று நடைபெறும் மீள் வாக்களிப்பை வாக்குச் சாவடியினுள் இருந்தபடி கண்காணிக்கவென 38 பிரதிநிதிகளையும், நடமாடும் ஐந்து வாகனங்களில் 20 பேரையும் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் இணைப்பாளர் டி. திஸாநாயக்கா குறிப்பிடுகையில், வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிக்கும் பணியில் 35 பிரதிநிதிகளையும் ஐந்து நடமாடும் வாகனங்களில் 10 பிரதிநிதிகளையும் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.