நாளைய தினம் (22) பாராளுமன்றம் கூடும்போது கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத்பொன்சேக்கா பதவிப்பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் இராணுவ தளபதியான இவர் தற்போது இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் விசாரனைக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.