வவுனியா வில் இருந்து ஓமந்தை வரையான யாழ்தேவி ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகள் இன்னும் பூர்த்தியடையவில்லை எனவும் அவர் கூறினார்.முன்னாள் பிரதியமைச்சர் லயனல் பிரேமசிரி மன்றம் ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகளை மேற்கொள்கிறது.