7ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக பாராளுமன்ற தேசியபட்டியல் உறுப்பினர் தி.மு. ஜயரத்ன இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. தி.மு. ஜயரத்ன கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக வேண்டி 2010 நவம்பரில் சத்தியப்பிரமானம் செய்து கொள்வார். அதுவரை பிரதமர் உட்பட தற்போது அமைக்கப்படும் அமைச்சரவை செயற்படும் என கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இரண்டாவது தடவை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிறகு பிரதமர் பதவி உட்பட அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட இடமுண்டு என எதிர்பார்க்கப்படுகின்றன.