கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் புத்தளம் மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்கள்

sri-lanka-election-01.jpgவடமேல் மாகாண சபைத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கிங்ஸ்லி பெர்னாண்டோ உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் கிடைத்துள்ள வாக்குகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி ஐந்து ஆசனங்களையும் பெற்றுள்ளன.
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ;

1. அருன்திக பெர்னாண்டோ 45,837
2. அன்டனி விக்டர் பெரேரா 42,944
3. இந்திராணி தசநாயக்க 33,487
4. அசோக வடிகமங்காவ 32,277
5. பியசிறி ராமநாயக்க 30,637
6. சனத் நிசாந்த பெரேரா 29,416
7. சுமல் திசேரா 26,739
8. ஜனக சொய்சா 24,153
9. குமார ராஜபக்ச 18,812
10.மல்ராஜ் பீரிஸ் 17,756
11.மொஹமட் தாஹிர் 14,733

ஐக்கிய தேசியக் கட்சி:

1. சாந்த சிசிர குமார 17,876
2. சுகத் சந்திர சேகர 14,117
3. கிங்ஸ்லி லால் பெர்னாண்டோ 14085
4. டொன் ஹெக்டர் 13,435
5. ஆப்தீன் யஹ்யா 12,724

புதிய விசா தடைகள்; விரைவில் அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன்

uk.jpgபிரிட்டனில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளிலிருந்து தொழில் நிமித்தம் வந்து குடியேறுபவர்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.  வேலை வாய்ப்புகளில் உள் நாட்டவர்களுக்கு முதலிடம் வழங்கும் பொருட்டே தொழில்சார் நிமிர்த்தமான குடியேற்றத்துக்கான இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படவிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான குடியேறுதல் முறையின் முதலாவது வரிசைப் படுத்தல் பகுதியின் கீழ் பிரிட்டனில் குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் உயர்த்தப்படவிருக்கின்றன.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவமல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் தற்போது நடைமுறையிலிருக்கும் தகைமை மற்றும் குறைந்தப்பட்ச சம்பள மட்டங்களாக இருந்த பட்டதாரி கல்வி கற்பவர் மற்றும் 17 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் புதிய விதிமுறைகளின் பிரகாரம் முழுநிலை பட்டதாரி மற்றும் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸாக உயர்த்தப்படவிருக்கிறது.

பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜெக்கியூ ஸ்மித் வெகு விரைவில் இந்த புதிய நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார். அடுத்த வருடம் முதல் அனைத்து மட்டங்களிலுமான குடியேற்றங்களையும் மட்டுப்படுத்தும் நோக்கத்திலான திட்டத்தின் கீழேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரிட்டனுக்கு வேலைக்கு வருபவர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டியது முக்கியமென நாம் எப்போதுமே கூறி வந்திருக்கிறோம். ஐரோப்பாவிற்கு வெளியிலிருந்து தகைமை குறைவானவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று பிரிட்டன் வருவதை நாம் ஏற்கனவே நிறுத்தியிருந்தோம். எனினும், தற்போது ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார வீழ்ச்சி பிரிட்டன் தொழிலாளர்களை பாதிப்பதால், நாம் எமது தெரிவு நடவடிக்கையை எப்படி மேலும் இறுக்கப்படுத்துவது என்பது பற்றி செயற்பட்டு வருகிறோம்’ என்று பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஸ்மித் சண்டே ரெலிகிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.

புதுக்குடியிருப்புப் பகுதியில் 2 நாள்களாக கடும் சண்டை

SL_Army_in_Killinochieமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புக்கு மேற்குப் பகுதியிலும் அம்பலவன்பொக் கணைக்குக் கிழக்குப் பகுதியிலும் நேற்று முன்தினம் தொடக்கம் இராணுவத்தினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சண்டை இடம்பெற்று வருகிறது எனப் படைத்தரப்பு நேற்றுச் செய்தி வெளியிட்டது. இச்சமர்களில் நேற்று முன்தினம் வரை 36 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். அவர்களின் 11 சடலங்களைத் தாங்கள் மீட்டனர் என்று இராணுவத்தினர் நேற்றுக் கூறினர்.

புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சண்டையில் விடுதலைப் புலிகள் 20 பேர் உயிரிழந்தனர். 18 பேர்வரை காயமடைந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளில் இருவரின் சடலங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

அதேவேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்மைப்புத் தளம் ஒன்றையும், ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றையும் இதேவேளை 57 படையணியால் விசுவமடுவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கிளைமோர்க்குண்டுகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆவது டிவிசனின் படையணி கைப்பற்றியது என்றும்  அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதேசமயம், அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சண்டையில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

பிந்திய செய்தி: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் -ஏகாந்தி

ar-rhman.jpgஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 81ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் வைபவமாகும். இதுகாலவரை இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு திரைப்படக் கலைஞருக்கும் இந்த ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்த அடிப்படையில் இந்தியரைச் சேர்ந்த ஒருவர் முதல் ஆஸ்கர் விருது வென்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

ஸ்லம்டாக் மில்லினர்’திரைப்படம் 10 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் இதுவரை இரண்டு விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொததம் 8 விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிறந்த திரைக்கதை தழுவல் (Best Adapted Screenplay) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லம்டாக் பெற்றுள்ள 8 ஆஸ்கர் விருதுகள்:

சிறந்த படம்
சிறந்த இயக்குனர்-டேனி போயல்
பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் – ஏ.ஆர்.ரஹ்மான்
“ஜெய் ஹோ…” பாடல் – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
சிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை: சைமன் பியூஃபாய்
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

”எல்லாப் புகழும் இறைவனுக்கே”: ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது. இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது (‘ஜெய் ஹோ’) வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள். எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

டாகுமெண்டரி- இந்திய சிறுமியின் கதைக்கு ஆஸ்கர்:

அதே போல இந்தியாவைச் சேர்ந்த பிங்கு சோங்கர் என்ற 8 வயது சிறுமி குறித்த குறும்படமான ஸ்மைல் பிங்கி (Smile Pinki) படத்துக்கு இநத ஆண்டுக்கான சிறந்த டாகுமெண்டரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மிர்ஸாபூரைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் உதடு பிளந்த தோற்த்தால் (cleft lip) சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். அந்தச் சிறுமி படும்பாடு தான் இந்தப் படம். 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரிக்கப்பட்டதாகும். இதை இயக்கியவர் மேகன் மைலன்.

ஏ.ஆர்.ரஹ்மான் சில குறிப்புகள்

இன்று இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைற்கல்லை ஏற்படுத்தியுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி சில குறிப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர் அவர்களது புதல்வனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார். இவரின் பெயர் ஏ.எஸ்.திலீப் குமார். 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் இவரின் குடும்பம் பல நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு தன்சுயவிருப்பின் பேரில் இஸ்லாம் சமயத்துக்கு மாறினார். தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக தன்னை வளர்த்துக் கொண்டார் ரஹ்மான். இவரது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார். கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார். பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார். எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார். இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.

ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக 1992ம் ஆண்டு அமைந்தது. இவ்வாண்டில் தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை ரஹ்மான் ஆரம்பித்தார். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் ஆரம்பித்தார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது. இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் ஆரம்பித்த பின் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று மணிரத்தினம் ரஹ்மனைக் கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பை ரஹ்மானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற நிலையை ரஹ்மான் ஏற்படுத்திக் கொண்டார்.

ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார். இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான் மாறினார். அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான். குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறியிருந்தார் என்றால் பிழையாகாது.

திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் தந்துள்ளார் ரஹ்மான். இவரது இசையில் உருவான வந்தே மாதரம் இன்று இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட இசை வடிவமாக உள்ளது. 1997ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின பொன்விழாவையொட்டி வந்தே மாதரத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான். 2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான். இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.

அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார். கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான். 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அலாதிப் பிரியம். ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது. அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.

ரஹ்மானின் முதல் படங்கள்

தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது. இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா. மலையாளத்தில் முதல் படம் யோதா. தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ். ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.

ரஹ்மானை அலங்கரித்த விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கலவிக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்

ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது

தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)—–

மன்மோகன் சிங் பூரண குணம்: பணிக்கு திரும்ப டாக்டர்கள் அனுமதி

india-man-mogan.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த ஒருமாதமாக ஓய்வில் இருந்து வரும்  பிரதமர் மன்மோகன்சிங் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், பணிக்கு  அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடந்த மாதம்,  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு வாரமும் அதனைத் தொடர்ந்து வீட்டிலும் அவர் ஓய்வு பெற்று வந்தார். டாக்டர்கள் குழு ஒன்று பிரதமர் வீட்டில் தங்கி அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மருத்துவ ஆலோசனை அடிப்படையில் ஒரு சில உடற்பயிற்சிகளை மன்மோகன் சிங் செய்துவந்தார்.

மேலும் வீட்டில் இருந்தபடியே பைல்களையும் பார்க்க தொடங்கினார்.  இந்நிலையில் பிரதமரின் உடல்நிலை நன்கு தேறிவிட்டதாகவும், முழுநேர பணிக்கு திரும்ப  அவர் தயாராகி விட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் விஜய் டி சில்வா  நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காயங்கள் அனைத்தும் முழுமையாக குணமடைய 4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறுவை சிகிச்சை முடிந்து 4 வாரங்கள் முடிந்து விட்டன.

அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் தனது பணியை தொடங்கலாம் என்றார்.

அமெரிக்க மக்களிடையில் யேசுவைவிட ஒபாமாவுக்கே உயர்ந்த இடம்

obama.jpgஅமெரிக்க மக்கள் மத்தியில் யேசு கிறிஸ்துவைவிட முக்கியமானதொரு இடம் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கிடைத்துள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 2 ஆயிரத்து 634 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன்படி ஜனாதிபதி ஒபாமா முதலாம் இடத்திலும் யேசு கிறிஸ்து இரண்டாம் இடத்திலும் மார்ட்டின் லூதர் கிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

தொடர்ந்து 4 ஆம் இடம் ரொனால்ட் றீகன், 5 ஆம் இடம் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், 6 ஆம் இடம் ஆபிரகாம் லிங்கன், 7 ஆம் இடம் ஜோன் மெக்கெய்ன், 8 ஆம் இடம் ஜோன் எப்.கென்னடி, 9 ஆம் இடம் செஸ்லி சுல்லென் பேர்கர் மற்றும் 10 ஆம் இடத்தில் அன்னை தெரேசாவும் உள்ளனர்.

2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இதே வாக்கெடுப்பில் யேசு கிறிஸ்து முதலாம் இடத்திலும் மார்ட்டின் லூதர் கிங் இரண்டாம் இடத்திலும் கொலின் பவல் மூன்றாம் இடத்திலும் கென்னடி 4 ஆம் இடத்திலும், அன்னை தெரேசா 5 ஆம் இடத்திலும், இருந்தனர்.

ஆனால் அந்த வாக்கெடுப்பில் 19 ஆம் இடத்திலிருந்த ஜோர்ஜ் புஷ் தற்போது 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை 2001 ஆம் ஆண்டில் முதல் இருபது பேருக்குள் வராத மெக்கெய்ன் 7 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய மருத்துவர்களை அனுப்புமாறு கருணாநிதி கோருகிறார்

karunanithy.jpgதமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் மோதலின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க இந்தியாவிலிருந்து மருத்துவர்கள் போர் பிரதேசத்திற்குச் செல்லவேண்டும் என்றும், தமிழகமும் அவ்வாறு மருத்துவர்களை அனுப்பத் தயார் என்றும் கூறி இருக்கிறார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் இன்று எழுதி உள்ள கடிதத்தில், ”கடந்த ஜனவரி 15ஆம் நாளிலிருந்து இதுவரை 36,000 தமிழர்கள் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்து, அவர்களெல்லாம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர், பலர் காயமுற்றிருக்கின்றனர், மற்றவர் உடல்நலக்குறைவுற்றிருக்கின்றனர். தற்போது போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள 1 லட்சம் மக்களில் மேலும் பலர் வெளியேறக்கூடும் என பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்கள் கூறி இருக்கின்றன, இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும், எனவே மத்திய அரசு உடனடியாக இலங்கையுடன் தொடர்புகொண்டு இந்தியாவிலிருந்து தேவையான மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் மருந்துகள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரை சென்றடைய ஆவன செய்யவேண்டும்” என்று பாக்ஸ் மூலம் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரி இருக்கிறார்.

முல்லைத்தீவிலிருந்து வெள்ளிக்கிழமை திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் விபரம்

puthumaattalan-hospital.gifமுல்லைத் தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கப்பல் மூலம் திருமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நோயாளர்களின் விபரம் வருமாறு:-

01. ஆர். நசந்தநாயகி, முல்லைத்தீவு, (வயது 57).
02. இராசரத்தினம், முல்லைத்தீவு, (வயது 58).
03. யு. சஜீவன், தேவிபுரம், (வயது 04).
04. யு. கஜீவன், தேவிபுரம், (வயது 06).
05. யு. ராகினி, தேவிபுரம், (வயது 28).
06. யு. பூமிகா, தேவிபுரம், (வயது 18).
07. தவராசா உதயகுமார், கிளிநொச்சி, (வயது 26).
08. மேரி ரீட்டா, மாத்தளன், (வயது 55).
09. ஆர். சுப்பிரமணியம், கிளிநொச்சி, (வயது 77).
10. எப். ஜோர்ஜ், கிளிநொச்சி, (வயது 63).
11. எம். ஜெயமலர், கிளிநொச்சி, (வயது 59).
12. ஜே. அன்னமலர், புதுக்குடியிருப்பு, (வயது 52).
13. ஏ. அற்புதமலர், இரணைப்பாலை, (வயது 30).
14. ரி. யதுர்ஷன், கோம்பாவில், (வயது 07).
15. ரி. வனிதா, கோம்பாவில், (வயது 27).
16. ரி. அர்சிகா, கோம்பாவில், (வயது 03).
17. எஸ். சிவகாமி, முத்தையன்கட்டு, (வயது 03).
18. எம். பொன்னம்பலநாதன், கிளிநொச்சி, (வயது 83).
19. எஸ். நல்லையா, மாத்தளன், (வயது 49).
20. கே. கருணேஸ்வரன், தேவிபுரம், (வயது 41).
21. எஸ். வடிவாம்பாலி, கிளிநொச்சி, (வயது 63).
22. நிரோஜன், மாத்தளன், (07 மாதம்).
23. பிரிங்கி, மாத்தளன், (வயது 29).
24. ஆர். சுந்தரி, நடுகானி, (வயது 47).
25. ஏ. வசந்தி, நாச்சிக்குடா, (வயது 33).
26. ஏ. அனேஜா, நாச்சிக்குடா, (வயது 03).
27. எம். பெரியசாமி, முழங்காவில், (வயது 60).
28. எஸ். சிவதர்சனி, மாத்தளன், (வயது 32).
29. எஸ். பவித்ரன், மாத்தளன், (வயது 01).
30. எஸ். டோசிகா, மாத்தளன், (வயது 04).
31. இராஜரத்னம், (வயது 31).
32. எம்.தயானந்தன், திருகோணமலை, (வயது 34).
33. சிவநாதன், யாழ்ப்பாணம், (வயது 09).
34. எம். இராமன், முள்ளியவளை, (வயது 26).
35. ஐ. நீரஜா, முள்ளியவளை, (வயது 21).
36. எம். தங்கமணி, முள்ளியவளை, (வயது 56).
37. எஸ். கதிரவெளி, பரந்தன், (வயது 80).
38. சந்தசரோஜினி, முள்ளியவளை, (வயது 49).
39. என். பரமேஸ்வரன், விஸ்வமடு, (வயது 59).
40. எஸ். விபுலா, முல்லைத்தீவு, (வயது 08).
41. எஸ். மகாலட்சுமி, மணியங்குளம், (வயது 82).
42. கே. பிரியா, மாத்தளன், (வயது 03).
43. கே. பரமலோஜினி, மாத்தளன், (வயது 38).
44. கே. சுப்பிரமணியம், மாங்குளம், (வயது 64).
45. எம். சீதாதேவி, யாழ்ப்பாணம், (வயது 66).
46. கே. கத்திரினா, ஆண்டான்குளம், (வயது 66).
47. எம். சக்திவேல், பாண்டியங்குளம், (வயது 71).
48. கே. நாகமுத்து, பரந்தன், (வயது 73).
49. பி. செல்லக்கண்டி, பொக்கணை, (வயது 67).
50. கே. சுரேஷ், கிளிநொச்சி, (வயது 33).
51. பி. நிதர்சன், முள்ளியவளை, (வயது 26).
52. ஆர். கவிதா, வற்றாப்பளை, (வயது 35).
53. ஆர். மதுசுதன், வற்றாப்பளை, (வயது 04).
54. ரி. கார்த்திகா, வற்றாப்பளை, (வயது 02).
55. எஸ். பாலசுந்தரன், கிளிநொச்சி, (வயது 53).
56. சி. கோவிந்த பிள்ளை, வட்டக்கச்சி, (வயது 70).
57. ரி. கீர்த்திகா, பூநகரி, (வயது 12).
58. தமிழ்நேசன், கிளிநொச்சி, (வயது 42).
59. என். நந்தகுமார், கிளிநொச்சி, (வயது 17).
60. எஸ். கிருபாஜினி, இரணைப்பாலை, (வயது 31).
61. எஸ். லக்ஷணா, இரணைப்பாலை, (வயது 2.5).
62. ரி. கனகசபை, முத்தையன்கட்டு, (வயது 82).
63. பி. இராமன், முத்தையன்கட்டு, (வயது 70).
64. எஸ். விஸ்வரூபி, பாலமோட்டை, (வயது 18).
65. எம். மதிவதனி, கிளிநொச்சி, (வயது 26).
66. லிகிர்தன், கிளிநொச்சி, (வயது 40).
67. யு. விச்சன், புதுக்குடியிருப்பு, (வயது 04).
68. யு. நிசாதினி, புதுக்குடியிருப்பு, (வயது 24).
69. ஐ. புவனலோஜன், யாழ்ப்பாணம், (வயது 29).
70. ஐ. கீர்த்திகா, புதுக்குடியிருப்பு, (வயது 03).
71. ஐ. கோகிலா, புதுக்குடியிருப்பு, (வயது 26).
72. தர்சிகன், புதுக்குடியிருப்பு, (வயது 4.5).
73. கணேஸ்வரி, கொக்குத்தொடுவாய், (வயது 29).
74. பி. நாகலிங்கம், வட்டக்கச்சி, (வயது 72).
75. ஆர். பிரியா, புதுக்குடியிருப்பு, (வயது 10).
76. ஆர். ரேஷ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 35).
77. ஆர். குமரன், புதுக்குடியிருப்பு, (வயது 11).
78. ரி. சுப்பிரமணியம், முள்ளியவளை, (வயது 48).
79. எஸ். மனோரஞ்சிதம், பாலமோட்டை, (வயது 46).
80. எம். சரோஜினி, முள்ளிக்குளம், (வயது 55).
81. கே.சீதாவிப்பிள்ளை, வட்டக்கச்சி, (வயது 60)
82. ஜே.ராகல், கிளிநொச்சி, (வயது 06)
83. சாந்தி, கிளிநொச்சி, (வயது 37)
84. ஆர். தனுஷன், கிளிநொச்சி, (வயது 1.5).
85. ஆர். தனுஷன், கிளிநொச்சி, (வயது 10).
86. ஆர். அபிஷா, (வயது 13).
87. எஸ். ரவிராசன், கிளிநொச்சி, (வயது 38).
88. எஸ். கௌரி, கிளிநொச்சி, (வயது 33).
89. எஸ். வசந்தாதேவி, கிளிநொச்சி, (வயது 50).
90. அனோஜா, கிளிநொச்சி, (வயது 1.5).
91. பி. புஷ்பலதா, திருகோணமலை, (வயது 14).
92. என். நாகல காண்டீபன், மல்லாவி, (வயது 23).
93. என். தனலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 53).
94. சிவமயம், கிளிநொச்சி, (வயது 70).
95. சிந்துஜன், கொடிகாமம், (வயது 09).
96. சிரஜீவி, கொடிகாமம், (வயது 07).
97. எஸ். ரங்குமார், வற்றாப்பளை, (வயது 40).
98. எம். சிவகரன், கொடிகாமம், (வயது 38).
99. சிவசெந்தூரன், கொடிகாமம், (வயது 05).
100. ஆர். கமலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 58).
101. எம். விகேஸ்வரி, முறிகண்டி, (வயது 28).
102. எஸ். கமலாதேவி, கிளிநொச்சி, (வயது 65).
103. கனகதுரைசிங்கம், நீர்வேலி.
104. ஐ.நாகதர்ஷினி, கிளிநொச்சி, (வயது 26).
105. கே.தர்சன், நீர்வேலி, (வயது 07).
106. ரி. விஜயகுமார், வவுனிக்குளம், (வயது 33).
107. வி. விதுர்ஷிகா, வவுனிக்குளம், (வயது 03).
108. வினாயகமூர்த்தி, மல்லாவி, (வயது 63).
109. வி. சுகிர்தா, வவுனிக்குளம், (வயது 30).
110. ரி. சுபாஷினி, (வயது 35).
111. எஸ். சிவாஜினிதேவி, விஸ்வமடு, (வயது 35).
112. எஸ். சிவச்செல்வம், விஸ்வமடு, (வயது 03)
113. எஸ். தனபாலசிங்கம், தேவிபுரம், (வயது 62).
114. தங்கமுத்து, இரணைப்பாலை, (வயது 67).
115. கொரிஸா,
116. ஐ. ரவீந்திரா, கருயுக்கேணி, (வயது 43).
117. ஆர். ரதன், கருயுக்கேணி, (வயது 02).
118. எம். உதயசந்திரா, கொழும்பு, (வயது 42).
119. வி. உமா, கொழும்பு, (வயது 16).
120. கே.சிவபாலன், புதுக்குடியிருப்பு, (வயது 60).
121. ஆர்.ராஜன், மல்லாவி, (வயது 25).
122. ஆர்.திலக்ஷி, மல்லாவி, (வயது 1.5).
123. ஆர்.மலர்விழி, திருகோணமலை, (வயது 19).
124. எம்.தியாகராஜன், புத்தூர், (வயது 64)
125. கே.வட்டியம்மா
126. பெயர் குறிப்பிடப்படவில்லை.
127. வை.இமிலியான் பிள்ளை, மன்னார், (வயது 53).
128. ஐ.எலிசபத், மன்னார், (வயது 50).
129. பி.சசிதரன், புதுக்குடியிருப்பு, (வயது 31).
130. ரி.பேரின்பநாதன், புதுக்குடியிருப்பு, (வயது 58).
131. பி.சுதர்ஷன், மல்லாவி, (வயது 05).
132. பி.ஜானி, மல்லாவி, (வயது 04).
133. பி.சுசீலாதேவி, மல்லாவி, (வயது 30).
134. பி.ரேணுகா, மல்லாவி, (வயது 03).
135. ரி.பரமலிங்கம், இறைப்பைக்குளம், (வயது 30).
136. வி.நிகதன், ஜெயந்திநகர், (வயது 11).
137. வி.வினாதா, ஜெயந்திநகர், (வயது 26).
138. எஸ்.ஸ்ரீவதனி, புதுக்குடியிருப்பு, (வயது 36).
139. எஸ்.யதீஷன், புதுக்குடியிருப்பு, (வயது 15).
140. எஸ்.தமிழ்க்குமரன், மாத்தளன், (வயது 10).
141. ஜே.ஜெயலட்சுமி, மாத்தளன், (வயது 56).
142. எஸ்.அன்புக்குமரன், மாத்தளன், (வயது 06).
143. எம்.சண்முகராஜா, அக்கராயன்குளம், (வயது 47).
144. உமாசங்கர்.
145. ஜே.திவ்யன், (வயது 07).
146. ஜே.திலக்ஷன், (வயது 02).
147. ஜே.புஷ்பலதா, மல்லாவி, (வயது 36).
148. ஜே.திலக்சிகா, மல்லாவி, (வயது 05).
149. கே.பூலோகநாயகி, முள்ளியவளை, (வயது 67).
150. எஸ்.டி.ஐராங்கினி, வங்காலை, (வயது 32).
151. எல்.சந்திரதேவி, சம்பூர், (வயது 43).
152. எல்.பிரவீன், சம்பூர், (வயது 06).
153. எஸ்.ராஜவதனி, கிளிநொச்சி, (வயது 29).
154. எஸ்.அருண்கீரன், கிளிநொச்சி, (வயது 07).
155. வி.மதுஷன், கிளிநொச்சி, (வயது 05).
156. வி.விதுஷன், கிளிநொச்சி, (வயது 07).
157. வி.யதுஷன், கிளிநொச்சி, (வயது 04).
158. வி.ஜெயரூபா, மாத்தளன், (வயது 25).
159. ரி.அருள்சோதிநாதன், யாழ்ப்பாணம், (வயது 45).
160. ரி.தருஷன், திருகோணமலை, (வயது 04).
161. ரி.வினுஷன், திருகோணமலை (வயது 3).
162. ரி.தரணி, திருகோணமலை, (வயது 30).
163. பி. நடராஜா, கிளிநொச்சி, (வயது 53).
164. பி. தர்மராஜா, மஸ்கெலியா, (வயது 29).
165. கே.பிரதீபன், புத்தூர், (வயது 33).
166. கே.சரஸ்வதி, கிளிநொச்சி, (வயது 66).
167. ஐ.சின்னத்துரை, கோம்பாவில், (வயது 60).
168. எஸ். சத்தியபாமா, நடுகானி, (வயது 28).
169. எஸ். அங்கணி, நடுகானி, (வயது 03).
170. என். கார்த்திகேசு, இரணைப்பாலை, (வயது 67).
171. ஏ.நடேசகுமார், புதுக்குடியிருப்பு, (வயது 40).
172. ரி.ரேஷ்வரன், பாயக்குளம், (வயது 75).
173. ரி.பாகமன், திருகோணமலை, (09 மாதம்).
174. ரி.தனிநாயகம், கொழும்பு, (வயது 73).
175. என். தயாபாலன், நடுகானி, (வயது 50).
176. ரி. யோகநாதன், புதுக்குடியிருப்பு, (வயது 76).
177. எஸ். மனோன்மணி, கிளிநொச்சி, (வயது 71).
178. பி. பிருந்தா, புத்தூர், (வயது 27).
179. பி. கதிரிச்சில்யன், புத்தூர், (வயது 01).
180. ஜெ. துவராஜன், புதுக்குடியிருப்பு, (வயது 1.5).
181. என். டினோயா, புதுக்குடியிருப்பு, (வயது 08).
182. எம். வசந்தநாயகி, புதுக்குடியிருப்பு, (வயது 31).
183. எஸ். யசோதரன், முத்தையன்கட்டு, (வயது 31).
184. கே. கணேசமூர்த்தி, முல்லைத்தீவு, (வயது 61).
185. ஜே. பானுயா, கிளிநொச்சி, (வயது 06).
186. ஜே. புஷ்பஜீவா, கிளிநொச்சி, (வயது 30).
187. ஜே. பூமிகா, கிளிநொச்சி, (வயது 05).
188. ஜே. பவித்ரா, கிளிநொச்சி, (வயது 09).
189. எஸ். ஜெயரூபன், யாழ்ப்பாணம், (வயது 35).
190. என். செல்லையா, யாழ்ப்பாணம், (வயது 60).
191. எம். விமலகுரு, இரணைப்பாலை, (வயது 56).
192. சின்னையா, கிளிநொச்சி, (வயது 83).
193. என். நடேசமூர்த்தி, முழங்காவில், (வயது 42).
194. எஸ். முத்துலிங்கம், முல்லைத்தீவு, (வயது 78).
195. ஆர். பூரணம், கிளிநொச்சி, (வயது 56).
196. சிவகணநாதன், இரணைப்பாலை, (வயது 65).
197. எஸ். கந்தசாமி, சாவகச்சேரி, (வயது 63).
198. எஸ். பூபதி, கிளிநொச்சி, (வயது 63).
199. எஸ். கந்தசாமி, சாவகச்சேரி, (வயது63).
200. பெயர் தரப்படவில்லை.
201. சர்வேஸ்வரன், முல்லைத்தீவு, (வயது 26).
202. ஜெயமலர், முல்லைத்தீவு, (வயது 25).
203. எஸ். தனுஜன், முல்லைத்தீவு, (வயது 02).

204. சரஸ்வதி, மாங்குளம், (வயது 51)
205. கே.தங்கசொரூபி, சாவகச்சேரி (வயது 55)
206. பி.வசந்தமலர், இராமநாதபுரம் (வயது 31)
207. பி.நிவேதா, இராமநாதபுரம் (வயது 06)
208.பி.ஜிதுஷன், இராமநாதபுரம் (வயது 05)
209. வை.தர்மசீலன், தர்மபுரம், (வயது 16)
210. வை.விக்னேஸ்வரி, தர்மபுரம் (வயது 33),
211. ஆர்.யோகேஸ்வரி, மாங்குளம் (வயது 50)
212. ஏ.பெர்னாண்டோ, கிளிநொச்சி, (வயது 54)
213. ஏ.பாக்கியம், கிளிநொச்சி, (வயது 67)
214. எஸ்.கனகாம்பிகை, முத்தையன்கட்டு (வயது 63)
215. ரி.செல்வரஞ்சிதம், தாளையடி (வயது 60)
216. எஸ்.சின்னம்மா, உடையார்கட்டு (வயது 68),
217. எஸ்.சிவராணி, உடையார்கட்டு (வயது 50),
218. வி.ராசமலர், மல்லாவி (வயது 55),
219. எஸ்.சண்முகம், உருத்திரபுரம், (வயது 54),
220. பெயர் தரப்படவில்லை
221. பெயர் தரப்படவில்லை
222. ஆர்.பொன்னுத்துரை, யாழ்ப்பாணம், (வயது 70),
223. பெயர்தரப்படவில்லை.
224. பெயர் தரப்படவில்லை.
225. பி.கனகமணி, முள்ளியவளை (வயது 62)
226. வி.சிவகுரு, நெடுங்கேணி, (வயது 57),
227. வி.சிந்துஜன், மல்லாவி (வயது 1.5)
228. ஆர்.சிவஞானம், மல்லாவி (வயது 57)
229. வி.மிர்துளா, இரணைப்பள்ளி (வயது 44),
230. பி.அபிஷங்கா, இரணைப்பள்ளி (வயது 09)
231. எம்.சின்னத்தம்பி, முத்தையன்கட்டு (வயது 72)
232. வி.பேச்சிமுத்து, முழங்காவில், (வயது 69),
233. சின்னராசா, ஆனந்தபுரம் (வயது 36),
234. எஸ்.விஜயதர்சினி, ஆனந்தபுரம் (வயது 27),
235. கே.சசிகுமார், முல்லைத்தீவு (வயது 34)
236. பி.கடம்பஜனனி, இரணைப்பாலை (வயது 36)
237. பி.அபினியா, இரணைப்பாலை, (வயது 03)
238. பி.காந்திமதி, வவுனிக்குளம் (வயது 69)
239. சங்கராசா யாழ்ப்பாணம் (வயது 39),
240. செந்துஜன், விசுவமடு (வயது 17)
241. எஸ்.தயாநதினி, ஆனந்தபுரம், (வயது 31),
242. தமிழரசி, ஆனந்தபுரம், (9 மாதம்)
243. தனுஷாந்தன், ஆனந்தபுரம், (வயது 09)
244. கே.அஸின்திரா, விசுவமடு, (வயது 1.5)
245. கே.தர்ஷினி, விசுவமடு, (வயது 30)
246. கே.ஆதித்யா, விசுவமடு (வயது 04)
247. பி.மதுயன்னை, வவுனிக்குளம் (வயது 35)
248. ரி.விமலாதோவி, கிளிநொச்சி, (வயது 61)
249.சிவபாக்கியம், கிளிநொச்சி (வயது 84)
250. கமலசிங்கம், யாழ்ப்பாணம், (வயது 56)
251. சூரியகுமார், கிளிநொச்சி, (வயது 32)
252. கே.விமலா, விசுவமடு, (வயது 24)
253. எம். நிரஜனி, மிருசுவில், (வயது 31)
254. எஸ். அனுஸ்டன், மிருசுவில், (வயது 01)
255. எஸ். தினோஷன், கிளிநொச்சி,
256. சந்திரவதனி, கிளிநொச்சி, (வயது 34)
257. ஏ.பிரகாஷ், உடையார்கட்டு, (வயது 14)
258. ஏ.வாசுகி, மூங்கிலாறு,(வயது 30)
259. ஏ.சனுஜா, மூங்கிலாறு,(வயது 02)
260. ஏ.பிரதீபன், மூங்கிலாறு, (வயது 07)
261. ஜெயபாலன், முழங்காவில், (வயது 30)
262. எஸ். சசிகுமார், (வயது 37)
263. எஸ். சனோஜ், (வயது 05)
264. கணபதிப்பிள்ளை, முள்ளியான், (வயது 58)
265. புஷ்பலதா, யாழ்ப்பாணம், (வயது 38)
266. சதீஷ், கோண்டாவில், (வயது 7.1/2)
267. எஸ். அபிநிலா, கோண்டாவில்,
268. சதீஷ் கொட்வின், யாழ்ப்பாணம்,
270. தனுஷன், ஆனந்தபுரம்
271. எம். கௌரிநாதன், வவுனியா, (வயது 26)
272. சிவராணி, கிளிநொச்சி, (வயது 29)
273. குகப்ரியா, கிளிநொச்சி,
274. குபேந்தன், கிளிநொச்சி, (வயது 06)
275. குகப்ரியன், கிளிநொச்சி, (வயது 09)
276. லூர்தம்மா, (வயது 55)
277. குணபாலசிங்கம், வட்டக்கச்சி, (வயது 34)
278. பி. செல்வராணி, முல்லைத்தீவு, (வயது 51)
279. தர்ஷினி, கனகபுரம், (வயது 30)
280. எஸ். சயந்தன், கிளிநொச்சி, (வயது 02)
281. ஸ்ரீவித்தியா, புதுக்குடியிருப்பு, (வயது 30)
282. உதயகுமார், கிளிநொச்சி, (வயது 40)
283. கணபதிப்பிள்ளை, விசுவமடு, (வயது 52)
284. கணகப்பிள்ளை, மருதங்கேணி, (வயது 57)
285. யோகேஸ்வரி, தாளையடி, (வயது 56)
286. கே.சதாசிவம்,
287. பெயர் தரப்படவில்லை
288. தர்மரட்ணம், கிளிநொச்சி, (வயது 87)
289. விநாயகரன், கிளிநொச்சி, (வயது 21)
290. தினுஷன், முல்லைத்தீவு, (வயது 15)
291. சந்திரசேகரம், யாழ்ப்பாணம், (வயது 31)
292. கேதீஸ்வரன், ஸ்கந்தபுரம், (வயது 57)
293. கே.ஜெயந்தன், இரணைப்பாலை, (வயது 60)
294. நாகேஸ்வரி, இரணைப்பாலை, (வயது 56)
295. யதுர்ஷனா, இரணைப்பாலை, (வயது 5)
296. ஜயந்தன், கிளிநொச்சி, (வயது 5)
297. கிருஷ்ணபிள்ளை, கிளிநொச்சி, (வயது 62)
298. துஷித்ரா, கிளிநொச்சி, (வயது 12)
299. தொம்சன், கிளிநொச்சி, (வயது 03)
300. எம்.அன்ரனி, முள்ளியவளை, (வயது 50)
301. நவரத்னராசா, முல்லைத்தீவு, (வயது 50)
302. புஷ்பவதி, கிளிநொச்சி, (வயது 47)
303. துஷ்யந்தன், கிளிநொச்சி, (வயது 06)
304. லில்லி அக்னேஸ், புதுக்குடியிருப்பு, (வயது 62)
305. மதுஷாந்தி, புதுக்குடியிருப்பு, (வயது 13)
306. இசைக்கீதன், கிளிநொச்சி, (வயது 08)
307. எம்.நதீஷ்கலா, கிளிநொச்சி, (வயது 17)
308. எம். சுஜீவன், கிளிநொச்சி, (வயது 14)
309. வசந்தராணி, கிளிநொச்சி, (வயது 43)
310. பி.தயாபரன், கிளிநொச்சி, (வயது 31)
311. திருமதி.சின்னத்துரை, நெடுங்கேணி, (வயது 36)
312. குமாரசாமி, நெடுங்கேணி, (வயது 58)
313. ராசேந்திரன், யாழ்ப்பாணம், (வயது 31)
314. என்.சமோதா, முல்லைத்தீவு, (வயது 27)
315. ரி.குமாரதேவி, கிளிநொச்சி, (வயது 42)
316. கௌசிகன், முல்லைத்தீவு, (வயது 13)
317. எவறெஸ்டா, முல்லைத்தீவு, (வயது 43)
318. அருள்சேகரம், முல்லைத்தீவு, (வயது 29)
319. பேதுருப்பிள்ளை, முல்லைத்தீவு, (வயது 51)
320. கதிரமலை, வெள்ளாங்குளம், (வயது 46)
321. ஜெயந்தினி, முல்லைத்தீவு, (வயது 31)
322. சசிகரன், ஆனந்தபுரம், (வயது 20)
323. தவதர்ஷன், முல்லைத்தீவு, (வயது 16)
324. ராசையா, மருதங்கேணி, (வயது 63)
325. அசோகமாலா, ஓமந்தை, (வயது 30)
326. அன்னலட்சுமி, பரந்தன், (வயது 53)
327. இந்திகா, வெள்ளாங்குளம், (வயது 13)
328. சுஜாதா, பரந்தன், (வயது 27)
329. சிவபாக்கியம், புங்குடுதீவு (வயது 66)
330. விதுஷன், செம்பியன்பற்று (வயது 9)
331. தயானி, செம்பியன்பற்று (வயது 13)
332. ஜெயலட்சுமி, செம்பியன்பற்று, (வயது 42)
333. அடையாளம் காணப்படவில்லை.
334. பிரதீக், முல்லைத்தீவு, (வயது 15)
335. தேவராஜ்சிங்கம், ஓமந்தை, (வயது 52)
336. உதயகுமார், ஓமந்தை, (வயது 46)
337. சிந்துஜன், ஓமந்தை, (வயது 10)
338. புஷ்பலதா, முல்லைத்தீவு, (வயது 59)
339. செல்வராணி, வட்டுக்கோட்டை, (வயது 49)
340. செந்தில்வேல், முல்லைத்தீவு, (வயது 32)
341. பிரியங்கா, செம்பியன்பற்று (வயது 16)
342. வள்ளிப்பிள்ளை, முள்ளியவளை, (வயது 69)
343. விஜயகுமாரி, புதுக்குடியிருப்பு, (வயது 46)
344. வள்ளியம்மா, உவர்மலை, திருகோணமலை, (வயது 36)
345. லோகவர்ஷனி, உவர்மலை, திருகோணமலை, (வயது 02)
346. வன்னியசூரியன், செம்பியன்பற்று, (வயது 06)
347. ராசபாலன், இலாச்சி, (வயது 59)
348. நாகேஸ்வரி, (வயது 51)
349. அரவிந்தன், முல்லைத்தீவு, (வயது 31)
350. ஏ.ரத்தனியா, முல்லைத்தீவு, (வயது 29)
351. ஏ.அனுஷன், முல்லைத்தீவு, (வயது 08)
352. ராசமணி, அராலி, (வயது 60)
353. மங்களேஸ்வரி, சுன்னாகம், (வயது60)
354. அனுஷியா, இலாச்சி, (வயது 15)
355. அனுஷாந்த், சின்னவராயன்குளம், (வயது 07)
356. அர்ச்சனா, சின்னவராயன்குளம், (வயது 09)
357. மனுராஜா, செம்பியன்பற்று, (வயது 14)
358. செல்லம்மா, பொன்னாலை, (வயது 65)
359. ஸ்ரீகண்டி, வள்ளிபுனம், (வயது 30)
360. ரி.கஜீவன், சுன்னாகம், (வயது 11)
361. விஜயலட்சுமி, முல்லைத்தீவு, (வயது 45)
362. ரஜனி, சின்னவராயன்குளம், (வயது 32)
363. சுரேஷ்குமார், தாளையடி, (வயது 22)
364. தபோதினி, முள்ளியவளை, (வயது 04)
365. ரஜனி, முல்லைத்தீவு, (வயது 36)
366. சங்கீதன், முல்லைத்தீவு, (வயது 08)
367. கார்த்திகேஸ்வரி, இரணைப்பாலை, (வயது 40)
368. விஜிதரன், மல்லாவி, (வயது 23)
369. தினேஸ்கரன், மல்லாவி, (வயது 05)
370. சரோஜினிதேவி, முள்ளியன்கா, (வயது 61)
371. கிரிஷாந்த், ஆனந்தபுரம், (வயது 11)
372. விதுஷா, இயக்கச்சி, (வயது 06)
373. நவரத்தினம், இயக்கச்சி, (வயது 35)
374. என். திலுஜன், இயக்கச்சி, (வயது 09)
375. புவனா, தெல்லிப்பழை, (வயது 05)
376. சசிகரன், கிளிநொச்சி, (வயது 12),
377. கிருஷ்ணகுமாரி, கிளிநொச்சி, (வயது 10)
378. சுலஜா, முழங்காவில், (வயது 23)
379. உமாசங்கர், கிளிநொச்சி, (வயது 05)
380. புவனேஸ்வரி, இயக்கச்சி, (வயது 08)
381. திவ்யா, இயக்கச்சி, (வயது 02)
382. யோகநாதன், வவுனியா (வயது 49)
383. பிரதீபா, மடு, (வயது 04)
384. வளர்மதி, மடு, (வயது 28)
385. அழகர், கிளிநொச்சி, (வயது 53)
386. எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா, இணுவில், (வயது 41)
387. விமலாதேவி, முள்ளியவளை, (வயது 57)
388. பொன்னம்மா, இயக்கச்சி, (வயது 53)
389. சாகித்யா, மாங்குளம், (வயது 07)
90. நாகேஸ்வரி, மாங்குளம், (வயது 60)
391. தவம், புதுக்குடியிருப்பு, (வயது 50)
392. பாலசிங்கம், மாங்குளம், (வயது 52)
393. ஐங்கரன், புதுக்குடியிருப்பு, (வயது 24)
394. பாமினி, மாங்குளம், (வயது 27)
395. பெயர் தரப்படவில்லை.
396. அனடநீதன், மடு, (வயது 28)
397. செல்வநாயகம், யாழ்ப்பாணம், (வயது 52)
398. தவனேஸ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 14)

திருவனந்தபுரத்தில் ஏரோசற் ராடர்களை பொருத்துகிறது இந்திய விமானப்படை

பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்திற்கொண்டு திருவனந்தபுரத்திலுள்ள தென்பிராந்திய விமானப்படை கட்டளைத் தலைமையகத்தில் தாழ்ந்த மட்ட வீச்சுகளை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள ஏரோசற் ராடர்களை பொருத்துவதற்கு இந்திய விமானப்படை திட்டமிடுவதாக பி.ரி.ஐ.செய்திச்சேவை நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.

விடுதலைப்புலிகள் ஆச்சரிய மூட்டும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் இந்திய விமானப்படையின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு தென்பிராந்திய விமானப் படை கட்டளை தலைமையகத்தில் இருவிடங்களுக்கு தாழ்ந்த மட்ட வீச்சைக் கொண்ட ஏரோசற் ராடர்கள் பொருத்தப்படுமென இந்திய விமானப் படை அதிகாரி ஏயார்மார்ஷல் எஸ்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு புலிகள் நடத்திய விமானத்தாக்குதல்களுக்கு சிலமணிநேரத்திற்கு முன்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, கடல்வழி, வான் மார்க்க நடவடிக்கைகள் தற்போது மேற்குப்பிராந்திய விமானப்படை கட்டளை தலைமையகத்தின் பொறுப்பில் இருப்பதாகவும் அது திருவனந்தபுரத்திலுள்ள தென்பிராந்திய விமானப்படை கட்டளை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

2007 இல் விடுதலைப் புலிகள் முதலாவது விமானத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்பகுதி கரையோரம் இடத்துக்குகிடம் கொண்டு செல்லும் ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ராடர்களும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகளும் நாள் முழுக்க இயங்கிவருகின்றன.

மும்பைத் தாக்குதல்களைத் தொடர்ந்து வான்வழியிலும் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எதிர்பார்த்து இந்திய விமானப்படை வான்வழிப் பாதுகாப்பு முறைகளை நாடளாவிய ரீதியில் செயற்பட வைத்திருக்கிறது.

வரலாறு படைப்பாரா ரஹ்மான்?

ar-rhman.jpgஉலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா இன்றிரவு நடைபெறும் நிலையில், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதை வென்று புதிய வரலாறு படைப்பாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருது உட்பட பல்வேறு விருதுகளை இந்தப்படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் வென்றுள்ளனர்.
.
ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட்டின் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.