புதுச் சேரியில் இன்று டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திமுக கூட்டணியில் இருந்த நீங்கள் தற்போது அதிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்சாரம் எப்படி இருக்கும்?
1967க்கு பிறகு மாநில கட்சிகள் தான் வளர்ந்து வருகின்றன. ஒரு கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் தொடர்ந்து அதே கூட்டணியில் இருப்பது இல்லை. மாறி மாறி தான் கூட்டணி ஏற்படும். மாநில பிரச்சனைகளை முன்வைத்து தான் பிரச்சாரம் செய்வோம்.
நீங்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு உங்களை முதல்வர் கருணாநிதி அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறாரே?
அரசியல் லாவணி பற்றி அவர் தான் அதிகமாக பேசுவார். அதே சமயம் அரசியலில் அநாகரிகமாக பேசுவதிலும், எழுதுவதிலும் முதல் அரசியல் தலைவரும் அவர்தான்.
மதுவிலக்கு பற்றி நீங்கள் கூறியிருப்பது புதுச்சேரிக்கும் பொருந்துமா?
புகையிலையை தேசிய அளவில் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டோம். அதேபோல மதுவிலக்கையும் தேசிய அளவில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
புதுச்சேரி முன்னேற்ற காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.