முல்லைத் தீவிலிருந்து கடல்மார்க்கமாக வியாழக்கிழமை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 488 பொதுமக்களில் 188 பேர் பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்களில் 76 பேர் நோயாளர்கள் (பெரியவர்களில் 32 பேர் ஆண்கள், 07 பெண்கள், சிறுவர் 8, சிறுமியர் 5) மற்றும் உதவியாளர்களாக வந்தவர்கள் 112 (பெரியவர்களில் 26 ஆண், 36 பெண், சிறுவர் 23, சிறுமியர் 28) வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு 200 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 129 பேருக்கு சிகிச்சை அழிக்கப்பட்டது.
தற்போது புல்மோட்டை கள வைத்தியசாலையில் தற்போது 100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் ஆவர். அவர்களில் பெரியவர்கள் 37 (ஆண்13, பெண்24) சிறார்கள் 10 (ஆண் 7, பெண் 3) உதவியாளர்கள் 53 பேர் (பெரியவர்களில் 10 ஆண்கள், 22 பெண்கள், சிறார்கள் 12, சிறுமியர் 10)
முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் இன்னொரு தொகுதி நோயாளர்கள் இன்று சனிக்கிழமை மாலை புல்மோட்டைக்கு அழைத்து வரப்படவிருப்பதாக மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.