உச்ச நீதிமன்றம் வருண்காந்தி மீதான தேசிய பாதுôகாபபு சட்டத்தை ரத்து செய்தது . வருண்காந்திக்கு தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பரோலில் வெளியே வந்துதான் தேர்தல் பிரசாரம் செய்தார்.
பா.ஜ., வேட்பாளர் வருண் காந்திக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், வருண் காந்தி சுப்ரீம் கோர்ட்டில், தன் மீதான தே.பா. சட்டம் ரத்து செய்யவேண்டும் என்ற உ.பி. ஆலோசனை குழு பரிந்துரைத்தது படி அது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தா. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வருண் மீதான தே.ப., சட்டத்தை நீக்கி உத்தரவிட்டனர்.