அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் சரணடையவேண்டும் – கோஹன

palitha_koahana.jpgவிடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே பாலித்த கோஹன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடையவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது.

தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி அரசாங்கப் படையினரிடம் சரணடையவேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்படியே அரச தரப்பைப் பற்றியும் ஒபாமா கொஞ்சம் சொல்லியிருக்கிறார். அதை நீங்களும் கண்டுக்கலை போல.

    Reply
  • chen
    chen

    I always read your web site because I had the impression that your neutral, not one sided when you come to sri lankan news but after reading the above news I have no respect for you lot. I cannot see good journalism.
    This is simply another brain wash group. I am wondering why you could not put the full story of the Obama’s speech and let others to comment. What you are doing is absolutely disgraceful by giving a Sri Lankan ministers speach,….

    You have no rights to talk about democracy . GOOD bye.

    Reply
  • accu
    accu

    Chen, Don’t be childish. Presedent Obama accused both government and ltte. but both parties censored the portion of Obama’s comment whih is against them. thesam only published how the government and ltte react on Obama’s comment. what’s wrong with that. read the news “ltte thanked Obama” on same page. thank you.

    Reply
  • மாயா
    மாயா

    chen please watch this,

    http://www.vakthaa.tv/play.php?vid=4241

    Reply
  • palli.
    palli.

    தேசத்தின் பின்னோட்டம் போல் அமெரிக்காவின் அதிபர் ஓபாமாவின்பின்னோட்டமும் இரு மிருகங்களாலும் நிராகரிக்கபடும். அரசு ஆயுதத்தை கைவிடுவது சாத்தியமல்ல. ஆனால் அந்த ஆயுதத்தை இன படுகொலை செய்ய பாவிக்காமல் விடலாமே. புலி ஆயுதத்தை கை விடாது. வலிப்பு உள்ளவர்களுக்கு இரும்பு எப்படி அவசியமோ அதே போல் புளிப்பு உள்ள புலிகளுக்கும் இரும்பு மிக அவசியமே.

    எங்கோ வாசித்தேன் கிட்லர் தனது மெய்பாது காவலரிடம் சொன்னாராம். நீ இறக்குமுன் நீயே என்னை அழித்து சாம்பல் கூட எதிரியின் கையில் கிடைக்காத வகையில் செய்து விடு என. இதில் உன்மை பொய் பல்லிக்கு தெரியாது. ஆனால் அப்படி ஒரு வார்த்தையை புலி தலமை உடன் இருப்பவர்களிடம் சொன்னால் எப்படி இருக்கும். தமிழரும் நின்மதியாய் இருக்க வாய்பல்லவா??

    Reply
  • நண்பன்
    நண்பன்

    Chen,
    மேலே உள்ள தலைப்பு கோகணவின் கருத்து. அதற்குள் இன்னொரு கருத்தை நுழைப்பது சிறுபிள்ளைத் தனமானது.

    இரு சாரார் கருத்துகளும் ஒரே நேரத்தில் வருமானால் அதை செய்தியாக அல்ல கட்டுரை வாயிலாக கொண்டு வரலாம். செய்திகளுக்குள் கொண்டு வருவது திணிப்பாகிவிடும். அது Chenக்கு புரியுமோ தெரியாது.

    புலிகளின் கருத்து ஏற்கனவே வந்திருக்கிறது. இதோ அது:
    //இலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ……மேலும்:
    http://thesamnet.co.uk/?p=11512 //

    ஒபாமா என்ன சொன்னார்? இதோ அது:-

    http://www.youtube.com/watch?v=gahJwnMLwtE&feature=player_embedded

    Reply