கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

புலிகளின் முக்கிய தலைவர் உட்பட 70 பேர் பலி

SL_Army_in_Final_Phaseஇராணுவத்தைத் தாக்கும் நோக்கில் விரைவாக வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய தாக்குதல் காரணமாகப் புலிகள் தரப்பில் 70 பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் ஏரியில் இன்று (17) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போதே புலிகளின் முக்கிய தலைவரொருவர் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட 300 பேர் தற்கொலை? இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தள செய்திகள்

smoke_.jpgமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கியிருக்கலாமெனவும்; இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

ஒரு சதுரக் கிலோமீட்டருக்கும் குறைவான பகுதிக்குள் எல்ரிரிஈ தலைவர்கள் முடக்கம்

SL_Army_in_Final_Phaseவெள்ளை முள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400X600மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 72 மணித்தியாலத்துக்குள் 50,000 க்கும் அதிகமான சிவிலியன்களை விடுவித்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடிய நாணயக்கார தெரிவித்தார்.  புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும், இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

mahinda-rajapaksha.jpgபுலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் சூறை

indian-election.jpgசென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை சமூக விரோதிகள் சிலர் நேற்றிரவு சூறையுள்ளனர்.  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் இவரும், இயக்குநர் சீமானும் பேசியது வாக்காளர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் சில குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் சனிக்கிழமை இரவு 7.50 மணி அளவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்தது.

வந்தவர்கள் யார் என அங்கிருந்த ஊழியர்கள் விசாரிப்பதற்குள், அவர்கள் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவுகள், கம்ப்யூட்டகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

மக்களவைத் தேர்தலில் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் வெற்றி

indian-election.jpgஷூ மற்றும் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு, பொதுக் கூட்டம் போன்றவற்றில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம், பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் மீது காலணிகள் வீசப்பட்டன. இச்சம்பவங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பு வீசும் அளவுக்கு அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் காலணியால் குறி பார்க்கப்பட்ட சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் செருப்பு வீச்சுக்கு ஆளானார். ஆனால் கர்நாடகத்தில் அவரது மகன் ராகவேந்திராவும், அவர் சார்ந்த பாஜகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசையின் இன்றைய வேண்டுகோள்!!!

Susaiகடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை இன்று (May 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோள்.

”சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்து இருக்கின்றனர். படுகாயமடைந்த இந்த 25 ஆயிரம் பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டுவருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம்.

ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர். சுமார் இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிக்கின்றனர் இல்லை. அந்த மக்களை சுட்டுக்கொன்றுவிடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர்.

இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச் சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள். தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர்.

போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்”

முல்லைத்தீவில் பணியாற்றிய 3 வைத்தியர்கள்,மேலதிக அரசாங்க அதிபர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை?

mullivaikaal-02.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து வெளியேறி வவுனியா வந்து சேர்ந்த மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அது தாக்கியழிக்கப்படும் வரையில் பணியாற்றிய மருத்துவ அத்தியட்சகர் சண்முகராஜாவும் அவரது குடும்பத்தினரும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் வரதராஜா, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று சனிக்கிழமை வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது 

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்: இராணுவம்

mili.jpg72  மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது விடுதலை புலிகளின் நடமாட்டம் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் 400×600 சதுர மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்கப் படையினர் 140 பேரைக் கொன்றதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது

ஆப்கானிஸ்தானில் இந்த மாத முற்பகுதியில் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை ஆய்வு செய்த ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சு, அந்த தாக்குதல்களில் அமெரிக்கர்கள், 140 பொதுமக்களை கொன்றுள்ளதாக உறுதி செய்துள்ளது.

அமெரிக்க மரைன் படையினரும், ஆப்கான் படையினரும் தலிபான்களுடன் மோதலில் ஈடுபட்ட வேளையில், அமெரிக்க விமானங்கள் ஃபாரா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், அமெரிக்கா தனது வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரும் நிலை உருவானது.

இந்த சம்பவத்தின் பின்னர், ஆப்கானிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதைப் பார்க்கிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனாலும், புலன் விசாரணைகளுக்கு முன்னதாக பலரது சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டதால், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை.