::விளையாட்டு
::விளையாட்டு
இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது
போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்திருந்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஷங்க 75 ஓட்டங்களையும் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற்று வெற்றியை உறுதி செய்ததது. இந்திய அணி சார்ப்பில் ஸ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் ரவீச்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் மற்றும் சஞ்சு சம்சுன் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் 2 – 0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
திமுத் கருணாரத்ன (தலைவர்)
தனஞ்சய டி சில்வா
பெதும் நிஸ்ஸங்க
லஹிரு திரிமான்ன
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மெத்திவ்ஸ்
தினேஷ் சந்திமால்
சரித் அசலங்க
நிரோஷன் டிக்வெல்ல
சாமிக கருணாரத்ன
லஹிரு குமார
சுரங்க லக்மால்
துஷ்மந்த சமீர
விஷ்வ பெர்னாண்டோ
ஜெஃப்ரி வென்டர்சே
ரவீன் ஜெயவிக்ரம
லசித் எம்புல்தெனிய
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 4ஆம் திகதி இந்தியாவின் மொஹாலியில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணி இன்று (25) காலை இந்தியா புறப்பட்டுச் சென்றது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.
இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய, அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் கேன் ரிசர்ட்சன் மற்றும் ஜெய் ரிசர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.
இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் கிளேன் மெக்ஸ்வெல் 48 ஓட்டங்களையும், ஜோஸ் இஞ்செல் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய, நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று அவுஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.

வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தமிழ் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், மேக்ஸ்வெல் – வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 164 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஜோஸ் இன்க்லிஸ் 48 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ஒட்டங்களை பெற்றுக் கொண்டதில் போட்டி சமநிலையில் முடிந்தது.
இதில் இலங்கை அணி சார்பில் பெதும் நிஸங்க 73 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் தசுன் சானக 34 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று பந்துகள் மீதமிருக்க 9 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.
அதன்படி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா ஏலம் போகவில்லை.
ஐபிஎல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரெய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலத்தில் எடுபடாத ஏனைய வீரர்களின் விபரம் ,
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டேவிட் மில்லர், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஷகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மொஹமட் நபி, அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மத்தியு வேட், இந்தியக் கிரிக்கெட் அணியின் விருத்திமான் சஹா, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சேம் பிளிங்ஸ் ஆகியோரும் ஏலத்தில் எடுபவில்லை.
இந்திய பிரிமியர் லீக் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பாரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார்.
அதன்படி, 1,075 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) அவர் ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாவில் இது 2,877 இலட்சம் ஆகும்.
பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி இவ்வாறு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் ஏலம் தற்போது பெங்களூரில் இடம்பெற்று வருகிறது.
ஐ.பி.எல் ஏலத்தின் ஏனைய வீரர்கள் விபரம் !
- இந்தியக் கிரிக்கெட் அணியின் ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்சை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 7.25 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
- தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் கார்கிஸோ ரபாடாவை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் ட்ரண்ட் போல்டை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 8 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் மொஹமட் ஷமியை குஜராத் டைடன்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் டு பிளெஸிசை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் குயிண்டன் டி கொக்கை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னரை டெல்லி கெப்பிடல்ஸ் அணி இந்திய மதிப்பில் 6 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் மணிஷ் பான்டேவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 4.6 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷிம்ரோன் ஹெட்மியரை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் ரொபின் உத்தப்பாவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது
- இங்கிலாந்து அணியின் ஜேஸன் ரோய்யை குஜராத் டைடன்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 7.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் நிதிஷ் ரணாவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
- மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேஸன் ஹோல்டரை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் ஹர்சல் பட்டேலை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் தீபக் ஹூதாவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 5.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இலங்கை கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்கவை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் வொஷிங்டன் சுந்தரை சன்ரைசஸ் ஹைதரபாத் அணி இந்திய மதிப்பில் 8.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் குர்ணல் பாண்ட்யாவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மிட்செல் மார்சை டெல்லி கெப்பிடல்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.5 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் அம்பத்தி ராயுடுவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் இசான் கிசானை மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய மதிப்பில் 15.25 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோனி பேயர்ஸ்டொவ்வை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் அணியின் தினேஷ் கார்த்திக்கை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 5.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
- மேற்கிந்திய தீவுகள் அணியின் நிக்கலோஸ் பூரானைசன்ரைசஸ் ஹைதரபாத் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.