உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அனுராதபுரத்து பெண்ணுக்கு குரல் கொடுக்கும் யாழ் பல்கலை தங்கள் கலைப்பீடத்துக்குள் நடப்பதற்கு குரல் கொடுக்க மறுக்கின்றது !

அனுராதபுரத்து பெண்ணுக்கு குரல் கொடுக்கும் யாழ் பல்கலை தங்கள் கலைப்பீடத்துக்குள் நடப்பதற்கு குரல் கொடுக்க மறுக்கின்றது !

 

சர்வதேச ரீதியாகவும் நாடு தழுவிய ரீதியிலும் மகளிர் தினம் தொடர்பான செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நாட்களில் ஒரு பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்ட செய்தி வெளிவந்திருந்தது. இது இலங்கை தேசத்துக்கு அவமானத்தை தருகிறது என அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலம் காலமாக இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை நிலவி வருகிறது. அரசுக்கு எதிரான நியாமான புரட்சிகளின் போதும் இன விடுதலைப் போராட்டத்தின் போதும் நூற்றுக்கணக்கான பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். பாலியல் துஷ்பிரயோகம் என்பது இனமுறுகலில் ஆதிக்கத்தனத்தை வெளிக்காட்டும் அங்கீகரிக்கப்பட்ட கருவியாக பயன்பட்டது. அதனால் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். அவற்றுள் வெளிவந்த கதைகளை விட சமூக கலாசார இரும்புக் கதவுகளைத் தாண்டி வெளிவராத செய்திகள் ஏராளம். இன்றும் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பது ஒரு பக்கமாக இருக்க, யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தமது விரிவுரையாளர்களின் மாணவிகள் மீதான பாலியல் சேட்டைகள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொடர்ந்து மௌனம் காத்து வருவது அண்மை காலமாக பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது.

கலைப்பீடாதிபதி உட்பட அரசறிவியல் துறைத்தலைவர் என பலர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் இந்த தகவல்கள் தெரிந்துள்ள போதிலும் அவர்கள் மௌனமாக இந்த சமூக சீர்கேடுகளுக்கு துணைபோகும் தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

பட்டலந்த படுகொலைகள் போல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் !

பட்டலந்த படுகொலைகள் போல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் !

பட்டலந்த படுகொலை முகாம் தொடர்பான அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஜசீரா நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை தன் மீது குற்றம்சாட்டப்பட்டவில்லை என அந்நேர்காணலில் ரணில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நேற்றையதினம் (14) காலை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஆணைக்குழு சமர்ப்பித்த 159 பக்க அறிக்கையின் இறுதி அவதானிப்புக் குறிப்புகளின் படி, 1988 முதல் 1990 வரையிலான காலகட்டம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட, மற்றும் வன்முறை நிறைந்த அத்தியாயங்களில் ஒன்றாகும் என்றும், தேசத்தையே சூழ்ந்த பயங்கரவாத சுழற்சியால் குறிக்கப்பட்டது என்றும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பரவலான கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், அதே நேரத்தில் அரசு மற்றும் அரசு சாரா சக்திகள் சட்டத்தின் எல்லைகளுக்கு வெளியே மிருகத்தனமான எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளித்ததாகவும் கூறுகின்றன.

பட்டாலந்தா ஆணைக்குழுவின் அறிக்கை, முறையான அரசாங்க கட்டமைப்பிற்கு அப்பால் செயல்படும் சக்திகள், நிழல் “தேடல் குழுக்கள்” உட்பட, சட்ட அமலாக்க முகவர் மற்றும் அரசாங்கத்திற்குள் உள்ள கூறுகளின் மறைமுக ஒப்புதலுடன் நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.

சில சந்தர்ப்பங்களில், இந்த குழுக்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் கிளர்ச்சியை அடக்குவதற்கான பிற சட்டவிரோத முறைகளில் ஈடுபட்டன, அரசாங்கம் கிளர்ச்சியை ஒழிப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், இந்த நோக்கத்தை அடையப் பயன்படுத்தப்படும் முறைகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அது சிறிதும் அக்கறை காட்டவில்லை என்று அறிக்கை மேலும் குறிப்பிட்டது. ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைத் தடுக்கத் தவறியதையும், பொறுப்பானவர்களைக் காப்பாற்றுவதில் அதன் தீவிரப் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

“ஜே.வி.பி.யின் வன்முறை நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தன, அத்தியாவசிய சேவைகளை கடுமையாக சீர்குலைத்தன, அதே நேரத்தில் அரசாங்கத்தின் பதில் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, அரசு பயங்கரவாதத்தின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்கொண்டது, சில சமயங்களில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் காவல்துறை நடவடிக்கைகளை வழிநடத்தி, அடக்குமுறைகளில் தீவிரமாக பங்கேற்றனர். படலந்தா சித்திரவதை முகாம் இந்த அதிகப்படியான செயல்களின் கொடூரமான அடையாளமாக நிற்கிறது” என்று அது மேலும் கூறியது.“

“ஜே.வி.பி.யின் தூண்டுதலின் அளவு எதுவாக இருந்தாலும், அரசாங்கம் ஒருபோதும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்திருக்கவோ அல்லது இயக்கவோ கூடாது. அரசு பயங்கரவாதத்தால் பயங்கரவாதத்தை அடக்குவதற்கான முயற்சி உண்மையான கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதில் மட்டுமல்ல, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாத பல அப்பாவி இளைஞர்களின் மரணத்திலும் விளைந்தது.” – என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பட்டலந்த அறிக்கை ஜே.வி.பியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வருவதாக காணப்படுகின்ற படியால் தேசிய மக்கள் சக்தி இது தொடர்பான பகிரங்கப்படுத்தல் மற்றும் விசாரணைகளை துரிதப்படுத்துவதாக தமிழ்தேசிய தரப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர். படலந்த படுகொலைகள் போலவே அரச பயங்கரவாதம் 2009 இறுதிப்போரில் மேற்கொண்டது எனவும் இது பற்றிய பொறுப்புக்கூறலில் இருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தப்பியோடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் !

 தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் !
அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நேற்றையதினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அனுராதபுரத்தில் பெண் மருத்துவரை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முன்னாள் இராணுவ வீரரின் வீட்டை பொலிஸார் சோதனை செய்த போது கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தாக உருவெடுக்கும் AI – முறையான வழிப்படுத்தல்கள் அவசியம் !

ஆபத்தாக உருவெடுக்கும் AI – முறையான வழிப்படுத்தல்கள் அவசியம் !

கண்டிப்பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் இணைந்து ஆபாசப்புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதில் தமது பாடசாலை இளம் ஆசிரியை ஒருவரின் முகத்தை இணைத்து தமக்குள்ளே பகிர்ந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் படி, மேற்படி மாணவர்களது மடிகணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் என்றும் தெரியவருகிறது.

இதேவேளை, இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகரித்த மன அழுத்தம் – தன் அம்மம்மா, பெரியம்மாவை வெட்டி படுகொலை செய்த 15 வயது சிறுமி – கிழக்கில் சோகம் !

அதிகரித்த மன அழுத்தம் – தன் அம்மம்மா, பெரியம்மாவை வெட்டி படுகொலை செய்த 15 வயது சிறுமி – கிழக்கில் சோகம் !

 

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 68 மற்றும் 74 வயதுடைய இரு பெண்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் பெண்ணின் வீட்டிலேயே கொலை இடம்பெற்றுள்ளது. இந்த பெண் மூதூர் வைத்தியசாலையில் வியாழக்கிழமை இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில், அந்த வீட்டில் 15 வயதான அவரது மகள், பெண்ணின் தாய், பெரியம்மா உறவுடைய மற்றுமொரு பெண் என மூன்று பேர் மாத்திரம் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை வேளை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் கொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர், அந்த சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அம்மம்மா தன்னை எப்போதும் திட்டுவதாகவும் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்றும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்துவிட்டதாகவும் பொலிஸாரிடம் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் – பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு !

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் – பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு !

 

வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலவசமாக தென்னங் கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, நீர் விநியோகித்துக்கும் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும்மென பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன நேற்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 30 ஆண்டுகால யுத்தத்தை எதிர்க்கொண்டு வடக்கு மாகாணத்துக்கு இதுவரை காலமும் குறைந்தளவான அபிவிருத்திகளே வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். 10 இலட்சத்து 24 ஆயிரம் தென்னை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாண மக்களுக்கு தெங்கு பயிர்ச்செய்கைக்கு இலவசமாக உரம் வழங்கப்படும். இதற்கு மாத்திரம் 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர்விநியோகித்தக்கும் ஏக்கர் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும். தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களை முறையாக பராமரிப்பதற்கு நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் ! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வேண்டும் !

ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் ! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வேண்டும் !

‘ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ முடக்கப்படக் கூடாது. பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

“ஊழல் ஒழிப்பு அணி வன்னி“ என்கின்ற பேஸ்புக் வலைத்தள கணக்கு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் நியாயமான முறையில் மக்களின் பிரச்சினைகளை பேசியதிலும், ஊழல் குற்றவாளிகளையும் பகிரங்கப்படுத்தியதிலும், அரசியல்வாதிகளின் ஊழல்களை பகிரங்கப்படுத்தியதிலும் அதன் பங்களிப்பு பாராட்டும் விதத்திலிருந்தது. ஆனால் மிகக்குறுகிய காலத்தில் அத்தளம் யாழ் சைவ வேள்ளாள ஆண்களின் அபிலாசைகளை நிறுவுவதற்கான தளமாக மாறியது.

வம்பன் நெற் போல ஆபாச செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊழலையும் – மக்கள் பிரச்சினைகளையும் பேசாமல் பகிரங்கப்படுத்தாமல் தனிநபர்களின் – தனிப்பட்ட வாழ்க்கை தவறுகளை பற்றி பேசுவதிலும், காலாதிகாலமாக தமிழர்களிடம் புதைந்து போயுள்ள ஆணாதிக்க மனோநிலையில் நின்றும் தனது பதிவுகளை பகிர ஆரம்பித்துள்ளமையானது பலரிடமும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தளத்தின் உண்மை முகத்தை தேசம்நெற் ஆம்பலப்படுத்தி இருந்தமையும் இவர்களை தமிழ் தலிபான்கள் என வர்ணித்து இருந்ததும் தெரிந்ததே.

இதேவேளை குறித்த முகநூல் பக்கத்தில் என்.பி.பி கட்சியினருக்கு ஆதரவான பல பதிவுகளும் அவ்வப்போது வெளியான நிலையில், இந்த முகநூல் பக்கமானது என்.பி.பியினரால் இயக்கப்படுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், ஊழல் ஒழிப்பு அணி வன்னி – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஊழல் ஒழிப்பு அணி வன்னி எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இப்பக்கத்தக்கு எதிராக நீங்களும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். ஊழல், மோசடிகள், அநீதிகள் இடம்பெறுமாயின் அதனை துணிவுடனும், நேர்மையுடனும் சுட்டிக்காட்டும் தைரியம் எமது தேசிய மக்கள் சக்தியினருக்கு உள்ளது. எனவே, போலி முகநூல் ஊடாக உலாவ வேண்டிய எவ்வித தேவைப்பாடும் எமக்கு கிடையாது. போலிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனினும், ஏதேனும் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை பதிவு என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !

 குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !
யாழின் சட்டத்தரணிகள் குருபரன் முதல் கௌசல்யா வரை சமூத்தைச் சீரழிப்பவர்களாக மாறியுள்ளனர். குறைவிருத்தியுடைய சமூகப் பிரஞையற்ற இவர்கள் யாழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறுவது யாழ் மக்களை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. கள்ளக் காணி எழுதுவது முதல் பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்குவது வரை அத்தனை சமூகப் பொறுக்கித் தனங்களையும் இவர்கள் மேற்கொள்கின்றனர். சமூகம் சார்ந்த அடிப்படை அறிவற்ற இச்சட்டத்தரணிகள் தற்போது சமூகம் சார்ந்து கருத்துத் தெரிவிக்குமளவுக்கு தமிழ் சமூகத்தின் நிலை தரம் தாழ்ந்துவிட்டது.
யாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சட்டத்தரணிகளின் குறைவிருத்தி நிலை மிகக் கீழ்நிலைக்குச் செல்கின்றது. இவர்களிடையே சமூகம் சார்ந்த எந்தச் சிந்தனையும் இல்லையென்பதை அவர்களின் செயற்பாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றது. கடந்த காலங்களில் கள்ளக்காணி எழுதுவதோடு தங்களை மட்டுப்படுத்திக்கொண்டிருந்த இந்தச் சட்டத்தரணிகள் தற்போது அரசியலிலும் சமூக விடயங்களிலும் தலையீடு செய்து தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை தங்கள் சுயவருமானங்களுக்காக சுயபுகழ்ச்சிக்காக பேரம் பேசி வருகின்றனர்.
குருபரன் தலைமையிலான கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகள் யாழ் நூலக எரிப்புடன் தொடர்புடைய, பட்டலந்த சித்திரவதைமுகாமுடன் சிக்குண்ட ரணில் விக்கிரமசிங்கவை தனியாகச் சந்தித்தது பற்றிய செய்தியை கடந்த ஆண்டு தேசம்நெற் வெளிக்கொண்டு வந்திருந்தது. ரணிலைச் சந்தித்த இச்சட்டத்தரணிகள் தங்கள் மீது பொலிஸார் கள்ளக் காணி தொடர்பில் பிரச்சினை எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டிருந்ததை தேசம்நெற் அன்றே தெரியப்படுத்தி இருந்தது.
தற்போது தமிழ் மக்களின் வறுமையை கேவலப்படுத்தி விடியோக்கள் போட்டு விழிப்பு நிலையில் உள்ள பெண்களை அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து கேவலப்படுத்தும் காணொலிகளை வெளியிட்ட எஸ் கே கிருஷ்ணாவுக்கு ஆதரவாக சட்டத்தரணி குரபரனும் களமிறங்கி இருந்தார். ஆனால் இவர்களுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்த பொலிஸ் அதிகாரி ராகவன் எஸ் கெ கிருஷ்ணாவை இரு வாரங்கள் தடுத்து வைக்க போராடி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தமிழ் தேசியவாதச் சட்டத்தரணிகள் அம்பலமாகி உள்ளனர்.
இந்தக் கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளில் கிருஷ்ணவேனி பெரும் கில்லாடி. மற்றும் மணிவண்ணன் போன்றவர்களும் சளைத்தவர்களல்ல.
தையிட்டி விகாரையை சட்டவிரோதம்மானது என்று கூவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணிகள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அதேசட்சியைச் சேர்ந்த சுகாஸ் போன்றோர் தையிட்டி விகாரை கட்டப்படுவதற்கு எதிராகவோ கட்டப்பட்டதற்கு எதிராகவோ எந்தவொரு வழங்கையும் இற்றைவரை பதிவு செய்யவில்லை.
ஆனால் யாழில் உள்ள போதைப்பொருள், ஆவா கும்பல்கள் மற்றும் வட்டுக்கோட்டை சாதிய வன்முறைக் கும்பல்களுக்காக வாதாடி அவர்களை வெளியே எடுத்து, தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
காலம்சென்ற மாவை சேனாதிராஜாவின் இறுதிநிகழ்வில் இவர்களதும் சிறிதரனதும் அடியாட்குழுக்களே மரணச்சடங்கிற்கு வருபவர்களை மிரட்டி இறுதிநிகழ்வை தங்கள் அரசியல் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினர்.
இவர்களுக்கு சளைக்காமல் அண்மையில் வன்முறையில் ஈடுபட்டு பட்டப்பகலில் கை விரலை வெட்டி எடுத்த வன்முறையாளனை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று பொலிசாரிடம் ஒப்படைத்து அவரைக் காப்பாற்றி வெளியே எடுத்துவிட்டவர் சட்டத்தரணி சர்மினி.
இந்தச் சட்டத்தரணிகள் குற்றவாளிகளுக்கு எப்படி சட்டத்துக்குள் மாட்டாமல் வன்முறையில் ஈடுபடுவது போன்றவற்றை கற்றுக்கொடுப்பதாகக் குற்றம்சாட்டுகின்றார். காலம்சென்ற முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்.
இவர்களோடு தற்போது சமூகத்துக்கு கருத்துச்சொல்ல சில சமூகம் பற்றிய அரிவரிப் புரிதலும் இல்லாத சில சட்டத்தரணிகள் களமிறங்கியுள்ளனர். உலகத்தின் அனைத்துத் தரப்பினராலும் ஒரு பாஸிஸ்ட் என்று அடையாளம் காணப்பட்ட கொலைவெறியனான, இனவெறியனான ஹிட்லரை சட்டத்தரணி வைஷ்ணவி, ஹிட்லர் ஜேர்மன் மக்களுக்காகப் போராடினார் என்று ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார். ஆனால் பெரியார் தமிழ் விரோதியாம். அந்தப்புரம் நடத்தும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் படித்து கலைப்பீடாதிக்கு வக்காளத்து வாங்கும் இந்த வங்குரோத்து சட்டத்தரணியிடம் அறிவை எதிர்பார்ப்பது மிகக் கஸ்டம்.
பாலியல் குற்றவாளியை கும்பிடும் பிரேமானந்தாவின் சீடன் சி வி விக்கினேஸ்வரனின் கட்சியில் உள்ள இன்னுமொரு சட்டத்தரணி இராசையா உமாகரன் என்ற சாதிமான். சாதியத்துக்கு எதிராகப் போராடிய பெரியரை கேவலப்படுத்தி, பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை 7 தடவை கருக்கலைப்புச் செய்வித்த சீமானுக்கு இவர் யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் முண்டுகொடுக்கின்றார்.
இந்த குறைவிருத்திச் சட்டத்தரணிகளின் வரிசையில் நேற்று சட்டத்தரணி கௌசல்யா நரேன் தன் பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார். பன்றியோடு சேர்ந்த பசுவும் பவ்வி உண்ணும் என்பது போல் அண்ணன் என்ற பெயரில் சுற்றும் பா உ அர்ச்சுனாவோடு சேர்ந்த கௌசல்யாவின் நிலையும் இது தான்.
ஆயிரம் பேரைக் காதலித்த நான் என்று பெருமை கொள்ளும் அர்ச்சுனா வயது குறைவாக இருந்தால் கௌசல்யாவையே திருமணம் செய்வேன் என்று, வாய்கூசாமல் சொல்கின்றார்.
இதன் தொடர்ச்சியாகவே தம்பி தம்பிராஜா போன்ற சமூகப் பிரஞை அற்றவர்கள், கௌசல்யாவை ‘தேவடியாள்’ என்றும் இன்னும் கேவலமாகவும் பல பதிவுகளை இட்டு வருகின்றார். தம்பி தம்பிராஜா இவ்வாறு எழுதுவது மிகக் கீழ்த்தரமான செயல். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் பாதிக்கப்பட்ட கௌசல்யா நரேன், இந்த ஆண் தமிழ் தலிபான்களான பா உ அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வம்பன்டொட்கொம், எஸ் கெ கிருஷ்ணா போன்றவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களான சாளினிக்கும், ஊடகவியலாளரான சங்கவிக்கும் விபச்சாரப் பட்டம் கட்டுகின்றார்.
ஒரு சட்டத்தரணியாக இருந்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தை அணுகும்படி சொல்லாமல் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை ஆதரிக்கின்றார். தம்பி தம்பிராஜா கௌசல்யாவை ‘தேவடியாள்’ எனக்கு குறிப்பிடுவது எவ்வளவு மோசமானதோ அதேயளவு மோசமானது, அண்ணாவும் தங்காவும் – அர்ச்சுனாவும் கௌசல்யாவும் சேர்ந்து சாளினியையும் சங்கவியையும் விபச்சாரிகள் என்று முத்திரை குத்துவது.
இந்தக் குறைவிருத்திச் சட்டத்தரணிகள் எந்த முதலீடும் இல்லாமல் மக்களைச் சுரண்டிப் பணம் பார்ப்பதை பொறுத்தக்கொள்ளலாம் ஆனால் அடிப்படைச் சமூக அக்கறையற்ற சமூக விழுமியங்களைப் புரிந்துகொள்ளாத இந்தக் கூட்டம் சமூகத்துக்கு கருத்துச் சொல்ல முற்படுவதை அனுமதிக்க முடியாது. இவர்கள் அடுத்த தலைமுறையையும் தங்களைப் போன்ற குறைவிருத்தி உடையவர்களாக்கி விடுவார்கள். ஆனால் தமிழ் மக்கள் மிக விழிப்பானவர்கள். இந்தக் குறைவிருத்தியாளர்களை விரைவிலேயே அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

முஸ்லீம் விவாக – விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்தாதது முஸ்லீம் சமூகத்தின் பலவீனம் !

முஸ்லீம் விவாக – விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்தாதது முஸ்லீம் சமூகத்தின் பலவீனம் ! நுனிப்புல் மேய்வதும் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்வதும் பா உ அர்ச்சுனாவினதும் ஹிஸ்புல்லாவினதும் பலவீனம் !

ஓய்வுபெற்ற சட்டத்தரணி அரசியல் செயற்பாட்டாளர் மொகமட் நிஸ்தாருடன் முஸ்லீம் சட்டம் தொடர்பான உரையாடல்

இருபது இராணுவ வீரர்கள் கைது !

இருபது இராணுவ வீரர்கள் கைது !

 

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நபரும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.