அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான மூவரும் விடுதலை – அன்புக்குரியவர்களை நினைவேந்தும் உரிமை உள்ளது – பாதுகாப்பு அமைச்சு!
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சமீபத்தில் மாவீரர்கள் நாள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிலரும் கைதாகியிருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு. தற்போதும் இதுவே எங்கள் நிலைப்பாடு ,தெற்கிற்கும் இந்த நிலைப்பாடு பொருந்தும். எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதால் நினைவுகூரலின் போது அவர்களின் கொடிகள் இலச்சினைகளை பயன்படுத்த அனுமதியில்லை. இதேவேளை சமூக ஊடகங்களை பயன்படுத்தி திட்டமிட்ட அடிப்படையில் தெற்கில் பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டது, இந்த பிரச்சாரத்திற்கு அவர்கள் 2018 – 2022 இல் எடுக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தினார்கள். இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இதனை செய்துள்ளனர். எனவும் அவர் குற்றச்சாட்டினார்.
இதனிடையே அண்மையில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்ற நேரத்தில் இனவாத கருத்துக்களை முன்வைத்து பயங்கரவாதத்தை தூண்டிய அடிப்படையில் கைதான தென்னிலங்கையை சேர்ந்த இருவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தமைக்காக கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.









