செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மிலிபேண்ட்டின்; பிரதிநிதியாக சேர் பீட்டர் ரிக்கெட்ஸ் இன்று இலங்கை வருகை.

david-miliband.jpgபிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபேண்ட்டின்; பிரதிநிதியாக அந்த அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர்சேர் பீட்டர் ரிக்கெட்ஸ் இன்று இலங்கை வருகிறார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர் இன்று காலை 10:30 மணிக்கு வெளிவிவகார அமைச்சர்  ரோஹித்த போகொல்லகமவைச் சந்தித்து பேச்சு நடத்தவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பில் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்த கருத்து பற்றியும் பேசப்படும்; என அறிவிக்கப்பட்டுள்ளது

வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – கட்டளைத் தளபதியிடம் பதிவு செய்ய வேண்டுகோள்

kishor.jpg வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

மக்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வன்னி கட்டளைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா கக் கூறிய கிஷோர் எம்.பீ. வாகனங்களின் உரிமையாளர்கள் வன்னி கட்டளைத் தளபதியிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதும், குறித்த உரிமையாளர்களுடன் சென்று உரிய ஆதாரங்களைக் காண்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் கிஷோர் எம்.பீ. தெரிவித்தார்.

வன்னி மக்களின் வாழ்க்கையை பழைய நிலைக்குக்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், அரசியல் கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதே பொருத்தமான நடவடிக்கையாகுமென்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்குவதுடன், முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை கட்டங்கட்டமாக மீளக்குடியமர்த்துவது அரசியல் கைதிகள் அனைவரையும் மூன்று கட்டங்களாக விடுவித்தல்.

அதாவது பிணையில் விடுவிப்பது, விடுதலை செய்வது, வழக்குத் தொடர்வது என இந்தக் கைதிகளை விடுவித்தல் புனர்வாழ்வளி க்கப்பட்டு வரும் பதினோராயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களை சமூகமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படு த்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகக் கூறினார். வன்னி பல்கலைக்கழகம்

மேலும் வன்னிக்கெனத் தனியான ஒரு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்ப டுகின்றது. நெலுக்குளத்தில் 150 ஏக்கர் காணியில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் முழுமையான ஒரு தனியான பல்கலைக்கழகமாகும்.

அதுபோல் தாதியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்பவற்றை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவநாதன் கிஷோர் எம்.பீ, கடந்த 33 வருட காலமாக சொல்லொணாத் துக்கங்களை அனுபவித்த மக்கள் இன்று தெளிவை அடைந்துள்ளார்கள். எனவே, இனியும் வீராவேசம் பேசினால் மக்களின் நிலைமை மேலும் அதளபாதாளத்தைச் சென்றடைந்துவிடும். எமக்குக் கொள்கை உண்டு.

வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் உறுதியாக உள்ளோம். அதற்கான முழு ஆதரவையும் பெற்றுக் கொடுப்பேன். போராட்டம் நடந்த காலத்தில் அதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தோம். இன்று நிலைமை மாறிவிட்டது. பசியில் வாடிக் கொண்டிருப்பவர்களுடன் தமிbழத்தைப் பற்றிப் பேச முடியாது என்றும் கிஷோர் மேலும் தெரிவித்தார்.

‘எந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல’ – மக்களை வாட்டி வதைக்க எந்தச் சட்டத்தையும் அரசு அமுல்படுத்துவதில்லை

rathnasiri_wicremanayake.jpgஎமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்ட வேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது.

பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார். பிரதமர் தொடர்ந்தும் பேசும் போது :- அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பெரும் சுமையிலிருந்து விடுபட்டதைப் போன்று உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சுமையை மீண்டும் மக்களின் தலையில் சுமத்த நாம் விரும்பவில்லை.

நாட்டையும், சமுதாயத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த புலிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளின் ‘உறுமல்கள்’ ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சற்று மாறுதலாக புலிகளின் புள்ளிகளின் நிறம் மட்டும் இன்று மாறியிருக்கிறது.

மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்பதன் ஊடாக எமது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறார்கள். நாம் எந்தவொரு நாட்டினதும் அடிமையல்ல. எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடும் அல்ல. நிலைமை இவ்வாறு இல்லாவிடினும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கி றார்கள்.

நாட்டின் நன்மைக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் பொது இணக்கப்பாடு இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளவர்கள் என நீங்கள் நினைப்பீர்களா னால் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பீர்களா? என்பதை கேட்க விரும்புகிறேன்.

இந்த நாட்டின் துரதிஷ்டம் என்னவெனில், கட்சி, நிறம், கொள்கை என்பவற்றால் நாட்டிற்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு பொது உடன்பாடு காண முடிவதில்லை. இவ்வாறான குறுகிய நோக்கங்களால் எமது நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் பலமடைந்து வருகின்றன. எனினும், நாம் இன்னும் பிரிந்து நிற்கி றோம். இவைதான் நாம் முகம் கொடுத்து வரும் துரதிஷ்டவசமான நடவடிக்கைகள், எனினும், எமது புலனாய்வுப் பிரிவு இன்னும் தனது கடமையை செய்து வருகிறது.

மக்களை வாட்டி வதைப்பதற்காக அரசு எந்த சட்டத்தையும் நடைமுறைப்ப டுத்தவில்லை. ஊடக அடக்குமுறை, தொழிற்சங்க உரிமைகளை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நாம் பயன்படுத்தியதில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன்.

நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்திற்கும் எம்மால் அனுமதி வழங்க முடியாது. பொறுப்புள்ள ஒரு அரசு என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது.

அரச விரோத சக்திகளுக்குத் தேவையான விதத்தில் தகவல்களை வழங்கும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பலம்வாய்ந்த நாடுகளும் அமைப்புகளும் இன்று எமது நாட்டுக்கு எதிராக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் புலிகளை பலமடையச் செய்வதற்காக சில குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஜேர்மனியில் இவ்வாறான சிலர் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். வருடக் கணக்காக பின்தள்ளப்பட்டுப் போன எமது நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையை அரசு செய்து வருகிறது.

இவ்வாறான அபிவிருத்திகளுக்கு பலன் கிடைக்கப் போவது எதிர்காலத்திலேயே. வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அவர்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.

மகா சிவராத்திரி தினம்; ஒலிபெருக்கியை பாவிக்க பொலிஸாரிடம் அனுமதி பெறலாம்

மகா சிவராத்திரி தினத்தன்று இரவில் ஒலிபெருக்கியைப் பாவிப்பதற்குப் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள முடியுமென்று அகில இலங்கை இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

சகல இந்து ஆலயங்களும், அமைப்புகளும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு விண்ணப்பித்து, ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமென மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலவே இவ்வருட மஹா சிவராத்திரி தினமான 13 ம் திகதி சனிக்கிழமையன்று சகல இந்து ஆலயங்களிலும் இரவு முழுவதும் ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளையடுத்து, மாமன்றம் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட போது, இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக் கும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

எனவே, சகல இந்து ஆலயங்களும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு, உரிய வகையில் விண்ணப்பம் செய்து இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந் தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது.

இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தீ

நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் இடம் பெறும் பகுதியில் நேற்றுத் தீ விபத்தொன்று இடம்பெற்றதுடன் சில மணித்தியாலங்களில் அதனைக் கட்டுப்படுத்த முடிந்ததாக மின்வலு எரிபொருள் அமைச்சு தெரிவித்தது.

மேற்படி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலையொன்றே தீப்பிடித்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லை யெனவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத் தீவிபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப் பட்டுவருவதுடன் தீ விபத்துக்கான காரணம் பற்றி ஆராய்வதற்காக சீன நிறுவனத்தின் குழுவொன்று விசாரணைக ளில் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 69 மேலதிக வாக்குக ளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன.

பிரதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்புகள் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நடை பெற்றது.

நேற்று சபையிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. க்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களுடன் ஜே. வி. பி. உறுப் பினர்களும்,  ஐ. தே. கவினரும் எதிர்த்தே வாக்களித்தனர்.

அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக தொடர்ந்தும் ஆதரவளித்து வாக்களித்து வந்த ஜே. வி. பி.யினர் முதல்முறையாக எதிர்த்து வாக்களித்தனர். சபைக்குள் மனோ கணேசனுடன் ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

கலைக்கப்பட்டஇலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது

srilanka_parliament_02.jpgகலைக் கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டுகிறார்.
 
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள இன்றைய கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படுவது இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இது இரண்டாவது தடவையாகும்.

பொன்சேகாவுக்கு எதிராக இன்னும் சில தினங்களில் இராணுவ நீதிமன்ற விசாரணை – சிவிலியன் உட்பட 35 பேரிடம் சாட்சியம் பதிவு

sarath_fonseka.jpgகைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு இராணுவத் தளபதியிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:- குறிப்பிட்ட சாட்சியங்களின் தொகுப்பில் 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 இராணுவத்தினரிதும் 7 பொலிஸ் உத்தியோகத்தரினதும் ஏனையவை பொது மக்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய மேற்படி அறிக்கை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்க ப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனை முடிவுற்றதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் படி முன்னாள் இராணுவத் தளபதி மீது ஐந்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும். இராணுவ சட்டத்தின் விதி முறைகளின்படி இராணுவ நீதிமன்றத்தில் வைத்தே அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

சரத் பொன்சேகா மீது இந்த குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டதும் உடனடியாக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகும். 3 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தும். அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இராணுவ தளபதி மேற்படி 3 அல்லது 5 நீதிபதிகளை நியமிப்பார். இந்த நீதிபதிகள் குழுமம் மேற்படி இராணுவ நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி மீது விசாரணை நடத்தும்.

குறிப்பிட்ட இந்த இராணுவ நீதிமன்றம் எந்த இராணுவ முகாமில் இடம் பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும் – அமைச்சர் பாடலி

minister-patali.jpgஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2/3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கெளரவத் துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆராய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க ஐ. நா. செயலாளர் தயாராகி வருகிறார். இதனை ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளினால் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. சகல நாடுகளையும் ஐ.நா. சமமாக நடத்த வேண்டும். ஆனால் இந்தக் கொள்கைளை ஐ.நா. மீறியுள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என ஜனாதிபதி தெளிவாக ஐ.நா. செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அச்சமற்ற தைரியமான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக வார இறுதி நாட்களில் 50 ஆயிரம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு இலட்சம் தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றனர். இந்த சுமூகமான சூழ்நிலையை குழப்ப புலிகளுக்கு ஆதரவான சக்திகள் முயற்சி செய்கின்றன.

சில வேட்பாளர்களுக்கு புலி ஆதரவாளர்களே வாக்குப் பெற்றுத்தர உள்ளனர். ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும். கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் வாக்கெடுப்பில் இலங்கை 2/3 பெரும்பான்மையுடன் வென்றது. சகல ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. ஒரு சில நாடுகளே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.

ஐ.நாவின் எந்த மனித உரிமை விசார ணைக்கும் எமது அரசாங்கம் இடமளிக்காது. ஐ.நா. முன்வைக்கும் விடயங்களுக்கு நாம் பதிலளிக்கத் தயார். ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இடமளிக்கமாட் டோம் என்றார்.