ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும் – அமைச்சர் பாடலி

minister-patali.jpgஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2/3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கெளரவத் துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆராய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க ஐ. நா. செயலாளர் தயாராகி வருகிறார். இதனை ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளினால் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. சகல நாடுகளையும் ஐ.நா. சமமாக நடத்த வேண்டும். ஆனால் இந்தக் கொள்கைளை ஐ.நா. மீறியுள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என ஜனாதிபதி தெளிவாக ஐ.நா. செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அச்சமற்ற தைரியமான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக வார இறுதி நாட்களில் 50 ஆயிரம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு இலட்சம் தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றனர். இந்த சுமூகமான சூழ்நிலையை குழப்ப புலிகளுக்கு ஆதரவான சக்திகள் முயற்சி செய்கின்றன.

சில வேட்பாளர்களுக்கு புலி ஆதரவாளர்களே வாக்குப் பெற்றுத்தர உள்ளனர். ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும். கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் வாக்கெடுப்பில் இலங்கை 2/3 பெரும்பான்மையுடன் வென்றது. சகல ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. ஒரு சில நாடுகளே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.

ஐ.நாவின் எந்த மனித உரிமை விசார ணைக்கும் எமது அரசாங்கம் இடமளிக்காது. ஐ.நா. முன்வைக்கும் விடயங்களுக்கு நாம் பதிலளிக்கத் தயார். ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இடமளிக்கமாட் டோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *