செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை மீளமைப்பு: இலங்கை – இந்தியா இன்று ஒப்பந்தம்

sri-lankan-railway.jpgமதவாச்சி யில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை மீளமைப்பது தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் இன்று (17) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையிலான 106 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகளை 2 வருட காலத்தில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை இந்தியாவின் இர்கொன் கம்பனி மேற்கொள்ள உள்ளது. இலங்கை சார்பாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவும் இந்தியா சார்பாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளதாக அமைச்சு கூறியது. இந்நிகழ்வு போக்குவரத்து அமைச்சில் நடைபெறவுள்ளது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையி லான ரயில் பாதை புலிகளினால் தகர்க்க ப்பட்டதையடுத்து ரயில் சேவைகள் 1990 ஜூன் மாதத்தில் இடை நிறுத்தப்பட்டது.

ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட உள்ளன. மதவாச்சியில் இருந்து மடு வரை யான 43 கிலோ மீட்டர் தூர பாதை முதல் கட்டமாகவும் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை இரண்டாம் கட்டமாகவும் நிர்மாணிக்கப் படும். இதன்போது 5 பிரதான ரயில் நிலையங்களும், 5 உப ரயில் நிலையங்களும் 4 பாலங்களும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மாதோட்டம், திருக்கேதீஸ்வரம், நேரியகுளம் உட்பட ஐந்து இடங்களிலும் ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்ப ட்டுள்ளது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பாக இந்திய பொறியியலாளர் குழு கடந்த நாட்களில் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்ப தற்காக புலிகளினால் எடுத்துச்செல்லப்பட்டன.  இதனால் புதிதாக ரயில் பாதை அமைக்க வேண்டியுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையும் மீளமைக்கப்பட உள்ளது. வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை நிறைவடையும் நிலையில் உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக் கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்பாடு

மலேசியாவில் வைத்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் திருத்தப்பட்டு தென்பகுதி கடல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் கூறியது.

புலிகளுக்குச் சொந்தமான மேற்படி கப்பல் கடந்த வருடம் மலேசியாவில் வைத்து பிடிபட்டது. இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட இந்தக் கப்பல் தற்பொழுது காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தென் பிராந்திய கடற்படை தலைமையகத்தினால் திருத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்பொழுது கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தென் பிராந்திய கடற்படை கட்டளையிடும் தளபதி கொமடோர் ஆர். டி. பெரேரா தெரிவித்தார்.

மேற்படி கப்பலை துறைமுக பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடந்தவாரம் பார்வையிட்டார். மேற்படி கப்பலில் 3 ஆயிரம் தொன் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியும் எனவும் எதிர் காலத்தில் இதனை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் பெரேரா கூறினார்.

போரின் பின் கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கை செய்யப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.!

Paddy_Fieldsபோரின் பின் மக்கள் மீள்குடியமர்ந்துள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை ஆறாயிரத்து 219 ஏக்கர் நிலத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கமநல சேவைத்திணைக்கள உதவி ஆணையாளர் இ. இதயரூபன் தெரிவித்துள்ளார். எதிhவரும் பெரும்போகத்தில் 48 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேறகொள்ளப்படும் எனவும் கமநல சேவைத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு உரக்களஞ்சியங்கள் புதிதாக அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எற்கனவே புளியம்பொக்கணை, இராமநாதபரம் ஆகிய இடங்களில்  அமைக்கப்பட்டிருந்த உரக்களஞ்சியங்கள் போரினால் சேதடைந்துள்ள நிலையில், இவற்றைப் புனரமைப்பு செய்வதுடன் புதிதாக கிளிநொச்சி. பூனகரி, முழங்காவில், அக்கராயன்குளம், ஆகிய இடங்களில் உரக்களஞ்சியங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர்!

தென்பகுதியிலிருந்து வந்த சிங்கள வர்த்தகர்களில் மூவர் இன்று யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்களினால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை இரவு 7மணியளவில் தலைக்கவசம் அணிந்து, முகத்தைக் கறுப்புத்தணிகளால் மறைத்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 யாழ். கொக்குவில் ஆடியபாதம் வீதி, அம்பட்டப்பாலம் அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தகர்கள் வந்த லொறியொன்று எரிக்கப்பட்டதாகவும். அதனை அவ்விட்திற்கு வந்த படையினர் அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வியாபார போட்டிகள் காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதோடு, அப்பகுதியால் பயணம் செய்வோர் சோதனையிடப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

யாழ். நோக்கிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

Jaffna_HandBag_Shopயாழ்ப் பாணத்தில் நல்லூர் உட்பட பல கோவில்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகியுள்ள சூழலில் தென்பகுதிகளிலிருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகளின் தொகை அதிகரித்துள்ளது. பாடசாலை விடுமுறைக் காலமாகையால் தென்பகுதி சிங்கள மாணவர்களும் தங்கள் பெற்றோர் உறவினர்களுடன் அதிளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

வடக்கில் கிளிநொச்சி இரணைமடுக்குளம், ஆனையிறவு முகாம் பகுதிகள் என்பன தென்பகுதி சிங்கள மக்களின் அவதானத்திற்குரிய முக்கிய இடங்களாகவுள்ளன. வடக்கில் ஏ-9 பாதையின் ஓரங்களில் பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கி ஒய்வெடுப்பதற்கான இடங்கள், அவர்களுக்கான மலசலக்கூடங்கள் என்பன படைத்தரப்பால் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நல்லூர். நாகவிகாரை, காரைநகர் கசோரினா கடற்கரை, கீரிமலை, கந்தரோடை, செல்லச்சந்நதி, நயினாதீவு ஆகிய இடங்களில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளை தற்போது காணமுடிகிறது.

நிதியுதவியை யார் வழங்கியிருக்கக் கூடும்?

son-k.jpgஎம்.வி. சன் சீ கப்பலில் சென்றடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதியுதவியை யார் வழங்கியிருக்கக் கூடும் என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றை நாடத் தீர்மானம்

 sf.jpgஇராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி நிலை, பதக்கங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பனவற்றை நீக்க இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவிருப்பதாக சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி.அநுரகுமார திசாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இராணுவ தளபதியாகவும் அதனைத் தொடர்ந்து கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்து பின்னர் ஓய்வு பெற்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியினரின் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள (தற்போதையை) இராணுவ தளபதியின் பரிந்துரையின் பேரில் முப்படைத் தளபதி என்றவகையில் ஜனாதிபதியினால் இரு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டன.

இதில் இராணுவ சேவையில் இருந்த காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்த 3 குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முதலாவது இராணுவ நீதிமன்றமும் இராணுவ சட்டத்தை மீறி மோசடியான முறையில் இராணுவ உபகரண கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதான 4 குற்றச்சாட்டுகள் பற்றிவிசாரிக்க இரண்டாவது இராணுவ நீதிமன்றமும் நியமிக்கப்பட்டன.

இதன் பிரகாரம் முதலாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகா குற்றவாளியென கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது. இதன்மூலம் அவர் 40 வருட இராணுவ சேவையில் பெற்றிருந்த பதவிநிலை, பதக்கங்கள், விருதுகள் போன்றவற்றையும் அவற்றுடன் அரசாங்கத்தின் ஓய்வூதியம் ஜெனரல் பட்டத்தை பயன்படுத்துவதற்கான உரிமையையும் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுநாள் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தார்.

ஜே.வி.பி. எம்.பிகள் பிணையில் விடுதலை

jvp2.jpgஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினரான நளின்ஹேவகே ஆகியோர் இன்று தலா 200,000 ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனையில் அபூர்வ ஓர்கிட் மலர்

orkit.jpgபேராதனைப் பூங்காவில் பெரியதொரு ஓர்கிட் மலர் பூத்துள்ளது. மிக நீண்டகாலத்திற்கு ஒருமுறைதான் இது மலர்வதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். இம்மலர் சுமார் ஒருமாதகாலம் வாடாது இருக்கும். பின்னர் மறைந்துவிடும்.

சிலவேளை அடுத்து மலர்வதற்கு 50 வருடங்கள் வரை போகலாம் என அவர்கள் கூறினர். ஆனால் இதன் பூர்வீகமான மலேசியாவில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மலர்வதாக அவர்கள் கூறுகின்றனர். இது “ஜயன்ட் ஓர்கிட் கிரமட்டோபி லுனா இஸ்பிசிசம் மலயா%27 என்ற விஞ்ஞானப் பெயர் கொண்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தொடரும் என தெரிவிப்பு!

நிறைவெற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியைத் தவிர்த்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதிவியை ஏற்படுத்தவதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அரசாங்கத்தரப்பிலிருந்தும் எதிர்கட்சித்தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தொடர்ந்தும் நிறைவெற்று ஜனாதிபதி முறையே தொடரும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை எற்படுத்துவதற்கு இரு தலைவர்ளும் ஓரளவிற்கு இணங்கியிருந்தனர். எனினும், சட்டமாஅதிபர் இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை ஏற்படுத்த வேண்டுமானால். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமாஅதிபர் தெரிவத்ததால் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவ தெரிவிக்கப்படுகின்றது.