பேராதனைப் பூங்காவில் பெரியதொரு ஓர்கிட் மலர் பூத்துள்ளது. மிக நீண்டகாலத்திற்கு ஒருமுறைதான் இது மலர்வதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். இம்மலர் சுமார் ஒருமாதகாலம் வாடாது இருக்கும். பின்னர் மறைந்துவிடும்.
சிலவேளை அடுத்து மலர்வதற்கு 50 வருடங்கள் வரை போகலாம் என அவர்கள் கூறினர். ஆனால் இதன் பூர்வீகமான மலேசியாவில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மலர்வதாக அவர்கள் கூறுகின்றனர். இது “ஜயன்ட் ஓர்கிட் கிரமட்டோபி லுனா இஸ்பிசிசம் மலயா%27 என்ற விஞ்ஞானப் பெயர் கொண்டது.