செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படை – இராமேஸ்வரத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம் !

தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மீனவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

15 நாட்களில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்படாவிட்டால் தங்களது அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரததில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளையும், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும்,தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதை நிறுத்த வேண்டும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பை மீறி பல கோடி மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை வசம் இருந்த மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததை கண்டித்து இன்று ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சென்னை ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து இன்று மாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிiறியல் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதிச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் நோக்கி ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையம் முன்பு தடுப்புகள் வைத்து மீனவர்களை தடுத்து நிறுத்தினர். ஆஅதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரயில் மறியல் போராட்டத்தை iவிடுமாறு கேட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வரும் 15 நாட்களுக்குள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் ஏலமிடப்பட்ட படகுகளை தமிழக மீனவர்களிடம் மீண்டும் திருப்பி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து படகுகளின் உரிமம் மற்றும் மீனவர்கள் இந்திய பிரஜை இல்லை என குறிப்பிடும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கூறி மீனவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இலங்கையில் தமிழ் – முஸ்லீம்களை கூறுபோடும் ஆடைச்சண்டை. – “தமிழ் பெண்கள் அணியும் சேலை தொடர்பில் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ள மௌலவி முபாரக் மஜீத் !

இந்தியாவின் பல பகுதிகளிலும் முஸ்லீம் பெண்களின் ஆடை தொடர்பான விவகாரம் பெரிய பிரச்சினையாக உருமாறியுள்ள நிலையில் அண்மையில் திருகோணமலையிலுள்ள சன்முகா இந்துக்கல்லூரியிலும் ஹபாயா ஆடை ஆணிந்து வந்த ஆசிரியருக்கு எதிராக பாடசாலை சமூகத்தினர் சில போராட்டங்களை முன்னெடுத்ததால் ஆடை விவகாரம் பெரிய பேசுபொருளாகியிருந்தது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி பலர் அரசியல் லாபம் தேட முனைவதாக கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியிருந்தார். மேலும் இது தொடர்பான இணைய – சமூக வலைத்தள வழி சண்டைகளும் ஓய்ந்தபாடில்லை.

இராவணன் முஸ்லிம் மன்னன்; கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இல்லை- மௌலவி அப்துல்  மஜீத் - VTN News

இந்த நிலையில் கல்முனையை சேர்ந்த மௌலவியும், அரசியல்வாதியுமான  முபாரக் அப்துல் மஜீத் என்பவர் தமிழ் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சர்ச்சைக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்,

“இப்பொழுது சேலை என்பது இரண்டு துணியாக மாறிவிட்டது. பின்னால் ஜன்னல் வைத்து கொள்கின்றார்கள். முன்னால் வீ வடிவில் வெட்டி விடுகின்றார்கள். இடுப்பினை காட்டுகின்ற சேலை வரை நாம் காண்கின்றோம். ஆகவே இப்பொழுது இருக்கின்ற சேலை என்பது விழுமியமுள்ள ஆடையாக நாம் பார்க்கவில்லை. சேலை அணியத்தான் வேண்டும். சேலை என்பது எத்தனை முழம் என்பது எமக்கு தெரியும்.

முன்னைய கால நாடகங்கள் நாவல்களில்  சேலையுடன் வருகின்ற பெண்கள் விழுமியங்களை பாதுகாப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் தற்போது உள்ள சேலை ஒழுக்கமில்லாதது.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விமர்சித்துள்ளமையானது இந்த இரண்டு இனக்குழுமங்களிடையேயும் இன்னும் மனக்கசப்பை ஏற்படுத்துமே தவிர பிரச்சினைகளை முடித்து வைக்காது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இலங்கை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை தவிர உலகின் வேறு எந்த பகுதிகளிலும் இந்த ஆடை தொடர்பான விவாதங்கள் இவ்வளவு பெரிய சர்ச்சையாக உருவெடுப்பதில்லை. எவ்வளவு காலமாக ஒரே நாட்டில் வாழ்ந்தும் கூட இன்னொருவருடைய கலாச்சாரத்தை மதிக்க தெரியாதவர்களாகவே நம்மில் பலர் காணப்படுகின்றனர். ஆடை, மதம், உணவு தெரிவு, என்பன அவரவர் விருப்பம் சார்ந்தது. அதை அவரவரிடமே விட்டுவிடுவது பொருத்தமானது. அதை விடுத்து விட்டு கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அடுத்தவர்களிடம் நமது கலாச்சாரத்தை திணிப்பதும் – அடுத்தவர் கலாச்சாரத்தை நகைப்பபுக்குள்ளாக்குவதும் எமது நிலையை நாமே தரங்கெடுத்தி கொள்வதாகும்.

திருகோணமலையிலுள்ள சன்முகா இந்துக்கல்லூரியில் முஸ்லீம் ஆசிரியையின் ஆடை விவகாரம் அது ஆசிரியர்களிடையேயே கலந்துரையாடி ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படம்டிருக்க வேண்டிய விவகாரம். இதில் ஆசிரியரும் அதிபரும் சிறு பிளை்ளைகள் போல சண்டையிட்டு மாவர்களிடையேயும் வன்முறைக்கலாச்சாரத்தை ஊக்குவித்துள்ளனர். இது போக முஸ்லீம் ஆசிரியையின் ஆடையை கண்டித்து ஆசிரியர்கள் செய்த போராட்டத்துக்கு எதுவுமே அறியாத பாடசாலையின் நூற்றுக்கணக்கான மாணவிகளையும் அழைத்து – வீதிக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்தி முடிக்கும் அளவுக்கு அப்பாடசாலை ஆசிரியர்களின் கல்வி நிலை தரங்கெட்டு போய்விட்டது என்பதே உண்மை நிலை.

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பதற்றம்! - அதிபர் - ஆசிரியர்  வைத்தியசாலையில் அனுமதி (video) - தமிழ்வின்

ஆடை விடயம் என்பது அவரவர் உரிமை. இது தொடர்பில் போராடுவதே பெரிய அபத்தமானது. இந்த போராட்டது்துக்கு எதுவுமே அறியாத மாணவர்களையும் தெருவுக்கு அழைத்து போராட வைத்தததன் மூலம் அவர்களிடையேயும் பிரிவினைவாத – மதம் தொடர்பான காழ்ப்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்பதே உண்மை. தமிழ் – முஸ்லீம் சமூகத்தினர் இணைந்து அதிகமாக வாழும் கிழக்கிலங்கை பகுதியில் இனங்களுக்கிடையிலான புரிதலை வளர்த்து சமூக முன்னேற்றத்தையுமு் – சமத்துவத்தையும்  கற்பிக்க வேண்டிய பாடசாலைகளில் இப்படியான செயற்பாடுகள் இடம்பெறுவது அருவருக்கத்தக்து.

 

இந்த பிரச்சினையான நேரங்களில் அரசியல்வாதிகளும் – சமூக வலைத்தளவாசிகளும் எடுத்த வேகத்தில் வன்முறைத்தனமான கருத்துக்களை கக்காது பொறுமையோடு விடயங்களை அணுக வேண்டும். சாதாரணமாக எல்லோர் கைகளிலும் தெலைபேசி புழக்கத்துக்கு வந்துள்ள இந்த காலகட்“டத்தில் மதம் தொடர்பிலும் – இன்னொரு இனம் தொடர்பிலும் – அவர்களுடைய ஆடை பழக்கவழக்ககங்கள் தொடர்பிலும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் தொடர் சண்டைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. 15 வயது தாண்டிய பாடசாலை மாணவர்கள் கூட சமூக வலைத்தளங்களை பாவிக்க ஆரம்பித்துள்ள இந்தக்கால கட்டங்களில் உங்களுடைய வன்மமான – வன்முறையான கருத்துக்கள் எதிர்கால தலைமுறையினரையும் சீழித்து விட்டுவிடும். முக்கியமாக இந்த பிர்சிசனைகளுக்கு தூபமிடாது முளையியேலயே அரசியல்வாதிகள் கிள்ளி எரிய முழுமனதுடன் முன்வர வேண்டும். தங்களது சுயநல அரசியலை விடுத்து தமிழரும் – மூஸ்லீம்களும் ஒரே மக்களே என்ற கண்ணோட்டத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டியது காலத்தின் மிகப்பெரிய கட்டாயமாகும்.

 

பெரும்பாண்மை இனத்தவர்களான சிங்கள அரசியல்வாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுத்து – தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தமிழர் – முஸ்லீம்களிடையே முறையான புரிதல் ஏற்பட்டு ஒற்றுமை வளர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டயாயமாகும். அப்போது மட்டுமே ஓரளவான உரிமைகளை சரி பெரும்பான்மை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தமிழ் – முஸ்லீம்“ தலைமைகளும் – மக்களும்  புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

சவுதி விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு !

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த, சவுதி அரேபியா மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஏமனுக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவின் எல்லை மாகாணங்கள் மீது அடிக்கடி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 17ந் தேதி அன்று அபுதாபியில் கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் மூன்று  தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று சவுதி எல்லைக்கு அருகில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். சவுதிஅரேபிய படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை வானிலேயே வெடிக்கவைத்தனர் அதன்சிதறல்கள் காரணமாக இலங்கையர்கள் உட்பட 12 பேர்காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பங்களாதேஸ் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் காயமடைந்;துள்ளனர்.

 

இதற்கு பொறுப்பேற்பதாக கூறியுள்ள  ஏமன் கிளர்ச்சியாளர்கள், சவுதி இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட விமான நிலையத்தை குறி வைத்ததாகவும், பொதுமக்கள் அத்தகைய தளங்களில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளனர்.

“உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான ரஸ்ய படைகள்.” – அமெரிக்கா குற்றச்சாட்டு !

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு கனிசமானளவு  மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஸ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழலில், உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஸ்யா குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது,

“ கடந்த 24 மணி நேரமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்ய இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன்  எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் எல்லையில் படைகளை அதிகரித்து வருகிறார்.

எல்லையில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர்,  ரஸ்யா – உக்ரைன் இடையே நிலவும் பதற்றத்தை தவிர்க்க, இரு நாட்டு அதிபர்களிடமும் இந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

காவி மாணவர்களின் மிரட்டலுக்கு நடுவில் ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கிய முஸ்லீம் மாணவி – காணொளி இணைப்பு !

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 6 இஸ்லாமிய மாணவிகள் புர்ஹா (ஹிஜாப்)  அணிந்து வந்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. சமத்துவத்தை நிலைநாட்ட மாணவ மாணவிகள் சீருடை அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவை மீறி அம்மாணவிகள் புர்கா அணிந்து வந்ததாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், புர்கா அணிவது எமது உரிமை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு வெளியே தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராகவும் இந்து மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் கல்லூரி மாணவர்கள் பலர் காவி துண்டை அணிந்துகொண்டு எதிர்வினையாற்றி வருவது மாநிலத்தை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சக மாணவிகள் தங்களது உரிமைக்காக போராடி வரும் சூழலில், மத வன்முறையை தூண்டும் நோக்கில் மாணவர்கள் பலர் காவி சால்வை அணிந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்திக்கொண்டு இஸ்லாமிய மாணவியை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஆசிரியர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றிய மாணவர்கள் காவிக் கொடியேற்றும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்க, காவி சால்வை அணிந்து அட்டகாசம் செய்யும் மாணவர்களின் வீடியோவும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அம்மாநில முதல்வர் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளார். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் அமைதி காக்க வேண்டி கோரிக்கையும் வைத்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடகாவில் தீவிரமைடையும் ஹிஜாப் ஆடை விவகாரம் – கல்லூரி மாணவர்களிடையே காட்டுத்தீயாய் பரவும் மதவாதம் !

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

hijab ban: ஹிஜாப் தடை: ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்! - midst a big row over the  ban on wearing hijab there are a few muslims who support the ban | Samayam  Tamil

 

இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.

இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டம் இன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் கூற்றுப்படி, ஹிஜாப் அணிந்து வகுப்பறைகளில் நுழைவதைத் தடை செய்வது, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என தெரிவித்துள்ளது.

கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2)படி, கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது நிர்வாகத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடையை மாணவர்கள் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ” மாணவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அதே சமயம், தனியார் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம். நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடைகளை அணியக் கூடாது” குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலில் உடுப்பி, சிக்மகளூருவில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதனால் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற மக்களவையிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தை ஏற்க மறுப்பதாகக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து கனடாவில் தொடரும் போராட்டம் – அவசர நிலை பிரகடனம் !

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில்  அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லொறி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லொறி ஓட்டுநர்கள் , தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லொரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாலைகளில் விளையாட்டுகளும் விளையாடுகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒட்டாவில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் அருகே உள்ள நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஓட்டாவா மேயர் கூறுகையில், இந்த போராட்டம் வருத்தம் அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு சவாலானது. தலைநகரில் உள்ள போலீசாரை விட போராட்டத்தில் ஈடுபடு பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
இதற்கிடையே லொறி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக கனடாவில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டு – பதவி ஏற்ற ஒரு வாரத்தினுள் பதவி விலகிய பிரதமர் !

தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1-ந் திகதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் அவர் மறுத்தார்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியதாக அந்த நாட்டின் வானொலி அறிவித்தது. அவர் துஷ்பிரயோகம் செய்பவர் என வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என விளக்கினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்து விட்டார்.

மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் மீது அவர் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பிரதமர் ராஜினாமா செய்திருப்பது பெரு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவும் – ரஷ்யாவும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம் !

மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட சீனாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

குளிர்கால ஒலிம்பிக்கிற்கான விளாடிமிர் புட்டின் விஜயத்தின் போது பல சிக்கல்கள் குறித்த அவர்கள் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த நேட்டோ பாதுகாப்பு கூட்டணியை பயன்படுத்துவதாக விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒரே நாட்டவர்கள் என தெரிவிக்கும் புடின் எல்லையில் சுமார் 100,000 ரஷ்ய துருப்புக்களை களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை, உக்ரைனை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நேட்டோ ஒரு பனிப்போர் சித்தாந்தத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. இதேவேளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான அவ்க்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து இரு நாடுகளும் கவலை வெளியிட்டுள்ளன.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் குறித்த ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா கடந்த ஆண்டு அறிவித்தது.

தென் சீனக் கடல் போன்ற சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் பதற்றத்தை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் – விசேட அவதானம் செலுத்தும் பிரித்தானியா !

இலங்கையில் படையினரால், பாதுகாப்பு தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் , இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து பிரித்தானியா ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் ஒன்று தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.