சுடர் ஒளி ஆசிரியர் ந. வித்தியாதரன் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கல்கிசைப் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாக முன்னர் வெளியான செய்திகளை மறுத்துள்ள பொலிசார் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற புலிகளின் வான் தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் உள்ளதாகவே இவர் கைதாகியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
ஒபாமா அமெரிக்க அதிபர் ஆன பிறகு முதல் முதலாக அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது :-அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நட வடிக்கை பலனை கொடுத்து வருகிறது. இதன் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருகிறது.
இன்னும் 2 ஆண்டில் 35 இலட்சம் வேலைகள் உருவாக்கப்படும். அல்லது பாது காக்கப்படும். எனவே அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட வேலை இல்லா திண்டாட்டம் முற்றிலும் நிவர்த்தி செய்யப்படும். பொருளாதாரத்தை மீட்க ஒதுக்கிய பணம் மக்களுக்குத் தான் பயனைத் தரும். வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ இந்தப் பணம் போய்ச் சேரலாம்.
அமெரிக்காவை நாம் மறு நிர்மாணம் செய்கிறோம். சரிவை மீட்கிறோம். இதை எல்லா மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த தீவிரவாதிகளையும் நாம் விட்டு வைக்க மாட்டோம்.
எந்த தீவிரவாதிகளும் இனி அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து வரவிட மாட்டோம்.
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் முற்றி லும் ஒழிக்கப்படுவார்கள். இதற்காக கூட்டணி நாடுகளோடு சேர்ந்து புதிய அணுகு முறையை கையாளப் போகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் எண்ணிக்கை விரிவு படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் தினம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று நண்பகல் 12.00 மணியுடன் இந்தக் கால எல்லை முடிவடைகிறது.
இத்தேர்தலில் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐ.ம.சு.முன்னணி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களில் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த 3 மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களைக் கையளித்தார்.
இதேவேளை ஐ.தே.க. இன்று இம்மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதோடு ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியானதன் பின்னர் தேர்தல் ஆணையாளரினால் இன்று பிற்பகல் மேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு கொழும்புää களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங் கையில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான அவலம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச்சபை விசேட அமர்வைக் கூட்டவேண்டும் என்றும் கொழும்பு அரசாங்கத்துக்கு பொருளாதார உதவி வழங்கும் விடயத்தில் சர்வதேச உதவிவழங்கும் சமூகம் நிபந்தனைகளை விதிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களுக்குப் பொறுப்பான செனட்குழுவில் இலங்கை நிலைவரம் தொடர்பாக சாட்சியமளித்தவர்கள் சிபார்சுகளை முன்வைத்துள்ளனர். அமெரிக்க செனட் குழுவானது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைவரம் தொடர்பாக கவனம் செலுத்தியிருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், செனட்குழு விசாரணையில் சாட்சியமளித்தவர்கள் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கடும் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருதரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுவதாக செனட்டின் வெளியுறவு விவகாரக்குழுவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அன்னா நெய்ஸ்ரற் தெரிவித்திருக்கிறார்.
அகதிகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வலயமென அழைக்கப்பட்ட பகுதிகளில் மோசமான நிலைமை காணப்படுவதாக அன்னா கூறியுள்ளார். “பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் மக்களிடமிருந்து எமக்கு விபரமான விடயங்கள் கிடைத்துள்ளன. இலங்கைப்படைகளின் ஷெல் தாக்குதல்களால் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதை அந்த விபரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது’ என்றும் அன்னா கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளையும் அன்னா கடுமையாக விமர்சித்திருக்கிறார். அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்களை வேண்டுமென்றே புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் வெளியேறும் பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பல சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தியிருப்பதாகவும் அன்னா கூறியுள்ளார். தாக்குதல்களிலிருந்து தமது நிலைகளைப் பாதுகாப்பதற்காக புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்களையும் தாங்கள் ஆவணப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சாட்சியமளித்த ஏனையவர்கள் இலங்கை அரசின் தாக்குதல் தொடர்பாக தமது இணக்கப்பாடின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழர்கள் பலர் கடத்தப்பட்டிருப்பதுடன் இலகுவாக காணாமல் போயுள்ளனர். அரசிலுள்ள சக்திகளாலேயே இந்தத்தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது அதிகளவுக்கு சரியாக இருப்பதையிட்டு கூறுவது கவலையான விடயமாகும். தண்டனையிலிருந்தும் விடுபாடுபெறும் உரிமை முழுமையாக இருப்பதாக தோன்றுகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக எவரும், விசாரணை செய்யப்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜெவ்ரே லன்ஸ் ரெட் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களும் தாக்குதல்களுக்குள்ளாக்கப்படுவது குறித்து லன்ஸ் ரெட் தெரிவித்துள்ளார். இந்த விடயம் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழுவின் ஆசியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் பொப்டயற்சினாலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, இலங்கையில் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சர்வதேச சமூகம் முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும் என்று லன்ஸ்ரெட் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கான பொருளாதார உதவிகள் தொடர்பாக சர்வதேச உதவிவழங்கும் அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்கலாம் என்ற சிபார்சையும் லன்ஸ்ரெட் முன்வைத்துள்ளார். இதேவேளை, இலங்கையின் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண்பது தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புச் சபை விசேட அமர்வொன்றை நடத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்ஸ்ரற் கூறியுள்ளார்.
சுடரொளி பத்திகையின் ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார் என கொழும்பின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் ஒன்றுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நேரத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.
விடுதலைப் புலிகள் அண்மைக் காலங்களில் விமான எதிர்ப்பு மற்றும் உயிரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை சர்வதேசத்திடம் இருந்து கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: குறித்த ஆயுதங்கள் மிகவும் வெப்பமான வெடிபொருட்களைக் கொண்டிருக்கும். அத்துடன், அந்த ஆயுதங்கள் இரசாயனக் கலவை கொண்டதாகவும், அவை மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக் கூடியவையுமாகும். இதற்கான ஆதராங்கள் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்டதில் தெரியவந்துள்ளன. அத்துடன், பதிவுகள் எம்மிடம் உள்ளன. யுத்தம் முடிவடைந்ததும் இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.
சர்வதேச ஆயுத வர்த்தகர்களிடம் இருந்து ஏவுகணைகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதன் மூலம் படையினரை பலமிழக்கச் செய்வதற்கு புலிகள் முயற்சிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். புலிகளுக்கு போர்நிறுத்தம் என்பது தேவையில்லை. மாறாக, அவர்களின் ஆட்பலத்தை மறுசீரமைத்து சிறந்த பலத்துடன் மீண்டும் தாக்குதல் நடத்தவே அவர்களின் தேவையாகவுள்ளது. இதுவே கடந்த காலங்களில் இடம்பெற்றன. புலிகள் விட்டுச்சென்ற 122 மில்லிமீற்றர் ஆட்டிலறியை அண்மையில் படையினர் கைப்பற்றினர். இது போர் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகமான ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய அவர்கள் முயற்சிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும்.
களனி பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் நேற்றும் தொடர்ந்ததையடுத்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றதால் மாணவர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அதில் ஒருவர் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் தெரிவித்தார். மோதல்களை அடக்குவதற்காகக் கலகம் அடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டதுடன் கண்ணீர்ப் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ளோர் இன்று காலை 7 மணிக்கு முன்னர் வெளியேற வேண்டுமெனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடிவிடுவதென நிர்வாகம் கூடி தீர்மானமெடுத்தது. இதனையடுத்து நேற்றுப் பிற்பகலில் பல்கலைக்கழகம் மூடப்பட்டது
பாகிஸ் தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் குறித்து இந்திய அரசு ஆராய்வதாகத் தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசு எடுத்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
“இன்னமும் இது குறித்த தெளிவான தகவல் எதுவும் இல்லை. எனினும் இதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என அவர் ராஜ்யசபையில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுப் பிரிவு தென்னாசியாவின் பல நாடுகளில் செயற்படுவதை தாங்கள் அறிந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்காக விஸாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுக் குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 66 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை முற்றாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பின் வட திசையில் இருந்து தென் திசை வரையான பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் முழுமையாக சுற்றிவளைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் பிடியில் உள்ள புதுக்குடியிருப்பு முழுவதையும் விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் 58வது, 53வது படைப் பிரிவுகளும், இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படையும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பின் நுழைவாயிலில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் முன்னேற்றங்களை தடுக்கும் முயற்சியில் புலிகள் தம்மிடமுள்ள எல்லா வளங்களை பாவித்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பிரிகேடியர், படையினர் புலிகளின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு புலிகளின் முன்னரங்கு நிலைகளை தகர்த்து, தாக்கியழித்த வண்ணம் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.
புலிகள் தங்களுக்குள்ள இறுதித்தளமான புதுக்குடியிருப்பை தக்க வைத்துக்கொள்ளும் இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் ஒரு சில தினங்களுக்குள் பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு நகர் முழுவதையும் விடுவித்து விடுவர் என்று நம்பிக்கை தெரிவித்த இராணுவப் பேச்சாளர், புதுக்குடியிருப்பு நகர் முழுமையாக இராணுவத்தினரிடம் விழும் பட்சத்தில் புலிகளுக்கு புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் உள்ள சிறு சிறு மறைவிடங்கள் மாத்திரமே எஞ்சும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை யில் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பவர் அந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம். தனக்கு வாக்களித்த மக்களை தனியே விட்டுவர மனம் இல்லாதாதால் தான் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவில்லை என்று கூறுகிறார் அவர்.
அவலங்கள் ஏற்பட்ட போதிலும் மக்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் தொடர்ந்து நடத்தப்படும் ஷெல் தாக்குதல்களில் தினமும் சராசரி 30 முதல் 35 பேர் வரை கொல்லப்படுகின்றனர். அவ்வாறு மரணங்கள் ஏற்பட்ட போதிலும் அங்கு வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற விரும்பவில்லை.தொடர்ந்தும் அங்கேயே வசிக்க விரும்புகிறார்கள். முல்லைத்தீவில் தங்கியிருக்கும் அவர் அங்கிருந்து பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே இப்படிக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களிலேயே மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வசிக்கின்றனர். அப்பகுதிகளில் உணவு இல்லை என்றே கூறலாம். ஒரு நாளுக்கு மூன்று லொறி களில் உணவுப்பொருள்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவை போதுமானவையல்ல. இதுவரை 5 லொறி உணவுப் பொருள்களே அனுப்பப்பட்டுள்ளன என்றார் கனகரத்தினம்.
முல்லைத்தீவில் வாழும் மக்களின் நிலை தொடர்பாக பி.பி.ஸி. செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறுகையில்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் போன்ற பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் முன்னர் வசித்தனர். இப்போது இறந்தவர்கள், வெளியேறியவர்களைத் தவிர்த்து 3லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் என்றார்.
விடுதலைப் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர். வெளியேறுவோரை சுட்டுக் கொல்கின்றனர் எனக் கூறப்படுகிறதே எனக்கேட்ட போது அது தவறான தகவல் எனவும் வெளியேற முனைந்த மக்கள் இராணுவப் பகுதிக்கு செல்லும் போது போரின் இடையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை 90வீதம் தாம் நம்புவதாகவும் என்றும் தெரிவித்தார்