‘புதுக்குடியிருப்பு முற்றாக சுற்றிவளைப்பு’ – இராணுவப் பேச்சாளர்

armyvictory.gifபுதுக் குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 66 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை முற்றாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பின் வட திசையில் இருந்து தென் திசை வரையான பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் முழுமையாக சுற்றிவளைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் உள்ள புதுக்குடியிருப்பு முழுவதையும் விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் 58வது, 53வது படைப் பிரிவுகளும், இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படையும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பின் நுழைவாயிலில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் முன்னேற்றங்களை தடுக்கும் முயற்சியில் புலிகள் தம்மிடமுள்ள எல்லா வளங்களை பாவித்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பிரிகேடியர், படையினர் புலிகளின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு புலிகளின் முன்னரங்கு நிலைகளை தகர்த்து, தாக்கியழித்த வண்ணம் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

புலிகள் தங்களுக்குள்ள இறுதித்தளமான புதுக்குடியிருப்பை தக்க வைத்துக்கொள்ளும் இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் ஒரு சில தினங்களுக்குள் பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு நகர் முழுவதையும் விடுவித்து விடுவர் என்று நம்பிக்கை தெரிவித்த இராணுவப் பேச்சாளர், புதுக்குடியிருப்பு நகர் முழுமையாக இராணுவத்தினரிடம் விழும் பட்சத்தில் புலிகளுக்கு புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் உள்ள சிறு சிறு மறைவிடங்கள் மாத்திரமே எஞ்சும் என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • கந்தப்பு
    கந்தப்பு

    //புலிகளிடம் எஞ்சியுள்ள 66 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை முற்றாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில்…//

    எத்தின மாசமாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறியள். அப்பாவி மக்களின் அநியாயச் சாவுகளைத் தவிர்க்கிறதுக்காகத்தான் புலிகள் கடுமையான தாக்குதலை இன்னும் நடத்தத் தொடங்கயில்லை. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விரும்பிற இடத்துக்குப் போன பிறகுதான் இருக்குது. அதுக்குப்பிறகு இந்த வீராப்புகளைக் கதையுங்கோ பாப்பம்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்

    Reply
  • palli
    palli

    இதோடா புலி என்னும் புகைக்கை தொடங்கேல்லையாம். சரி சரி ஆறுதலாய் தொடங்கட்டும் இப்ப என்ன அவசரம்?? ம்…போகுது உயிர்தானே போகுது போகட்டும்.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    பல்லி நீங்கள் இப்பிடி தலைமையையும் போராட்டத்தையும் குறைச்சு மதிப்பிடுகிறதே உங்களுக்கு வேலையாப்போச்சு. எத்தனை தடவைகள் இப்படி குறைச்சு மதிப்பிட்டு மூக்குடைபட்டனியள் எண்டதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ. சுதந்திரப்போர் எண்டது வெட்ட வெட்டத் தளைக்கும். இன்று தமிழ் நாட்டில் எழுந்துள்ள புரட்சிக்கனல் பற்றி உங்களுக்கு உண்மையாகவே விளங்கயில்லைத்தான். நாளை அண்ணன் சீமானின் தலைமையில் தமிழ்நாட்டில் புரட்சிப்போர் வெடிக்கப் போகிறது என்பதுதான் நிதர்சனம். பொறுத்திருந்து பாருங்கள்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்

    Reply
  • accu
    accu

    கந்தப்புவும் பல்லியும் என்ன வடிவேலு பார்த்திபன் கொமேடி போல் போகுது! பல்லி உங்களிடம் இருந்து நிறைய அறியவேணும். எழுதுங்கள். தமிழீழ விடுதலைப் பல்லிகள் என இயக்கம் தொடங்கினால் இணையவும் தயார்.

    Reply
  • vaille
    vaille

    நாளை அண்ணன் சீமானின் தலைமையில் தமிழ்நாட்டில் புரட்சிப்போர் வெடிக்கப் போகிறது // கந்தப்பு
    உண்மையுள்ள கந்தப்பு பெருமாள் தலைமையில் நாளை வன்னி நாட்டில் புரட்சிப்போர் வெடிக்கப் போகிறது என்பதுதான் நிதர்சனம். பொறுத்திருந்து பாருங்கள்

    Reply
  • palli
    palli

    அச்சு பல்லியையும் சுத்தி வளைக்க போறியள் போல கிடக்கு. பல்லி தறுதலை என்னும் பட்டத்தை சுமக்கவும் தயார். ஆனால் இந்த விடுதலை என்னும் கோமாளிதனத்தை கேக்கவே பயமாக உள்ளது. இப்போதைக்கு எமக்கு தேசம் போதும் அதுதானே எமக்கு நக்கீரன்.

    Reply
  • palli
    palli

    கந்தப்பு பல்லி உயிர் போவதை விரும்புவதில்லை ஆனாலும் கந்தப்புவை மகிழ்ச்சி படுத்த பல்லியால் முடிந்த சின்னஉதவி(எல்லோரும் பல்லியை மன்னிக்கவும்) கந்தப்பண்னை அப்படியே ஒரு …………………………… .தமிழ்நாட்டில் தீக்குழிப்பு அடங்கி விடும். சீமான் இப்போது தொண்டை அடைத்து பேசுவதை கணீர்குரலில் வண்னை ஆனந்தன் 1982 மேடைக்கு மேடை பேச பல்லி பலதடவை கேட்டதால் சீமானின் பேச்சின் விபரீதம் தெரிகிறது. வண்னை ஆனந்தன் தனது பிள்ளைகளைகூட இப்போது சத்தம் போட்டு கூப்பிடுவதில்லையாம். புரியுதா?? பல்லியும் பளசல்லே.

    Reply
  • palli
    palli

    கந்தப்பு முக்கியமான வரியை தேச நலன்கருதி தூக்கீட்டாங்க. பரவாயில்லை, உங்களை தனியாக சந்திக்கும்போது சொல்லுகிறேன்.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    பல்லி நான் சொல்லும் விடையங்களை நீங்கள் மிகச் சாதாரணமாய் எடுத்துள்ளீர்கள் என்பது புரிகின்றது. கியூபாப் புரட்சியின் வரலாற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அன்று தோழர் பிடலும் சேயும் முதல் தோல்வியிலேயே துவண்டு பின் வாங்கியிருந்தால் இன்று இருக்கும் உன்னதமான கியூபா என்ற சுதந்திர தேசம் அமைந்திருக்காது. அதுபோலதான் நமது தலைமையும். தற்காலிகப் பின்வாங்கல் நிரந்தரத் தோல்வியல்ல.
    தலைவர் பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புரட்சியும் அண்ணன் சீமான் தலைமையிலான தமிழக விடுதலைப் புரட்சியும் காலஓட்டத்தில் ஒரு புள்ளியில் இணையும்போது மிகப்பெரும் வெற்றியை உலகத் தமிழினத்துக்குப் பெற்றுத் தரும் என்பது திண்ணம்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

    Reply
  • palli
    palli

    கந்தப்பு இப்படிதான் ஜயா 82;83 ல் எமது இனத்தை கெடுதாங்கள். கியுபா புரட்ச்சி, வியட்னாம் கிளர்ச்சி, லெனின் தத்துவம் விடுங்கப்பா இந்த வில்லங்கமான விளையாட்டை.

    Reply
  • santhanam
    santhanam

    கியுபா புரட்ச்சி, வியட்னாம் கிளர்ச்சி, லெனின் தத்துவம் இதை சொல்லிதான் தமிழ் இளைஞர் ரோட்டில் பிணமாக அளைகிறார்கள் சுமார் முப்பது வருடமாக தயவு செய்து அவர்களது தத்துவத்தை விளக்காதீர் கந்தப்பு. காந்தி வந்து அகிம்சையை சொன்ன கேட்பிரா அந்த அந்த தத்துவம் அந்த காலத்துடன் முடிவுற்றது.

    Reply