யுத்தத்தை எதிர்க்காத – புலத்து புலி எதிர்ப்பு மையம் : சேனன்

Wanni_Warசிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில் புலம்பெயர்ந்த அரசியல் / இலக்கிய பிதாமக்களின் பிற்போக்குத்தனங்கள் மேல் ஆயிரம் சூரியன் வெளிச்சம் விழுந்துள்ளது. தம்மை இடதுசாரியம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களாகவும் ஒடுக்கப்படும் விளிம்பு மக்களுக்காக கதைப்பவர்களாயும் பினாத்தித் திரியும் பலர் இன்று என்ன செய்கிறார்கள்? பேசுகிறார்கள்? என்பதை உற்று கவனியுங்கள். இவர்கள் தமக்கு மீறிய முற்போக்கு / அரசியல் இலக்கிய போக்குகள் எதுவும் புலத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வதில் இதுவரை மிக கவனமாக இருந்து வந்துள்ளார்கள்.

தொண்ணூறுகளுக்கு முந்திய போராட்ட இரகசியத்தை, குழுகுழுத்து மையங்கள் எழுப்பினரே அன்றி இவர்கள் ‘மாற்றை’ உருவாக்கவில்லை. இவர்கள் ‘போராட்ட இரகசியம்’ வெறும் கழிவிரக்கம் கொண்டவையாகவும் சுயபுலம்பல்களாகவும் இன்றுவரை இருந்துவருகிறது. இவர்கள் கட்டமைத்தவை யாவும் புலி எதிர்ப்பு மையவாதத்தை சார்ந்தவையே. பழைய இயக்க சகவாசம், மக்கள் விடுதலை பற்றிய தெளிவற்ற போக்கு, மார்க்சிய எதிர்ப்பு என்று எல்லாம் பின்னிப் பிணைந்ததுடன் புலி எதிர்ப்பு மையம் சுழல்கிறது.

இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே. உருப்படியாக எழுதுபவர்களும் புலிஎதிர்ப்பு மையத்துக்குள் வலிந்த இழக்கப்படுகிறார்கள். தொண்ணூறுகளுக்கு பிந்திய கொடுமைகள் – மக்கள் பல கோணங்களில் எதிர்கொண்ட கடும் இன்னல்கள் இவர்தம் இலக்கியங்களில் பார்க்க முடியாது.

சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு, முஸ்லிம் மக்கள் பிரச்சினை, சிங்கள பேரினவாதமும் தமிழ் தேசியவாதமும் இன்று கண்டுள்ள புதிய எல்லைகள், மலையக மக்கள் பிரச்சினைகள் எதுவுமே இவர்கள் இலக்கியங்களில் பார்க்க முடியாது. இன்றும் முஸ்லிம் பிரச்சினைகளை முஸ்லிம்களும், மலையக மக்கள் பிரச்சினைகளை மலையக மக்களும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி அண்மையில் கவிஞர் இளைய அப்துல்லா ஒரு கவிதை சி.டி. வெளியிட்டுள்ளது இவர்களில் பலருக்குத் தெரியாது. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. பசீரின் கவிதைப் புத்தகத்தின் உயிர்நாடி பேசப்படவேயில்லை. ஆனால் மிகமோசமாக எழுதும் பலரது ‘புலி எதிர்ப்பு’ கவிதைகள் முக்கியத்துவம் பெறுவதை நாம் அவதானிக்க முடியும்.

அத்துடன் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளில் சுற்றிவர நிகழும் ஒடுக்குமுறைகள் சுத்தமாக கவனிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் நிகழும் பூகம்பங்களும், ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த போராட்டங்கள் எதுவும் இவர்கள் கவனத்தை ஈர்த்ததில்லை. ‘புலி எதிர்ப்பு தமிழ்ர்’ என்ற குறுகிய பண்பாட்டு வலையத்துக்குள் இவர்களின் கற்பனைகள் சுழல்கின்றன. புலம்பெயர் இலக்கியம் வெறும் புலம் ஏங்கும் இலக்கியம் மட்டுமே. புலம்பல் இலக்கியம் என்றும் சொல்லலாம். 83க்கு முந்திய  – சிலசமயம் 90களுக்கு முந்திய – பழைய குட்டைகளையே இன்றும் கிளறிக் கொண்டிருக்கும் இவர்கள், தற்கால தலைமுறை தமிழர்களின் உணர்வலைகளுக்கு ஏற்பனும் நெருங்கி வரமுடியாதவர்கள்.

போராட்டங்கள் நடத்தும் நாடுகளில் இருந்து சிறந்த போராட்ட இலக்கியங்கள் எழுந்துள்ளதை நாம் பார்க்க முடியும். ஆனால் இலங்கை மக்கள் மத்தியில் இதுவரை அவதானத்துக்கு உந்தி நடப்பவை எல்லாம் புலம் ஏங்கும் இலக்கியங்கள் மட்டுமே. யாரும் எழுதவில்லை என்பதல்ல அதன் அர்த்தம். புறவயக் காரணிகளின் ஆழமையான காரணியாக புலம் ஏங்குதல் இருக்கிறது என்பதுமல்ல அதன் அர்த்தம். பல ‘எழுத்துக்கள்’ கவனிக்கப்படவில்லை என்பதுதன் உண்மை.

புலிகள் வளங்கிய ‘துரோக முத்திரை’ என்ற பொதுமையத்தை நோக்கி ஆளுமைகளை விரயம் செய்யும் இவர்கள், இறுக்கமான கதையாடலில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒருபடம் பார்த்தால் பல படங்கள் பார்த்ததற்கு சமன் என்பது போல்தான் புலம்பெயர் இலக்கியமும் போர்முளக்களுக்குள்ளல் இயங்குகிறது. துரோக முத்திரை எதிர்ப்பிலக்கியத்தில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கும் இவர்கள் மடத்தனம்தான் புரியவில்லை.

பல முக்கிய போராட்ட இலக்கியங்கள் அடக்குமுறையுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கவிதைகள் பல எழுதியவர்களின் உயிர்களை போராட்டம் கவ்விக்கொண்டு விட்டது. அவர்களும் அவர்தம் இலக்கியங்களும் மறக்கப்படுவது ‘அதிகாரத்துக்கான அம்புலோதி’ பாற்பட்ட சிந்தனை போராட்டத்திலேயே நிகழ்கிறது.

தற்போது இடதுசாரிகள் மேல் ‘மத்திதர வர்க்க நக்கலை’ வளர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுக்குழு வாதங்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டுவருகிறார்கள். இதை தமிழ்நாட்டுக்கும் கடத்தி தம் சுயவிலாசத்தை நீட்டப் பார்க்கிறார்கள். புலத்தில் தலித்தியம் சார்ந்த விழிப்பு எழுப்பியமைக்கு இந்த மிதாமக்களே காரணம். இன்றும் இவர்கள் பல முட்டுக்கட்டைகளை கட்டமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புலி எதிர்ப்பு இலக்கியம் மட்டுமே புரட்சிகர இலக்கியமாக இருக்க முடியும் என்ற தமது அறிவிலி நிலைப்பாட்டை மோட்டுத்தனமாக இலக்கியவாதிகள் மேல் திணித்துவரும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். குறிப்பாக சமீப காலங்களில் அகதியாக புலம்பெயர்ந்த இளவயதினர் பலர் தமக்கு சம்மந்தே இல்லாத தனக்கு முந்திய போர்முலக்களை பின்பற்ற அழுத்தப்படுவது கேலிக்கிடமானது. அதேபோல் பல இளவயதினர் வலது சாரியத்துக்கு பலிகடாக்களாக்கப்படுவதன் புண்ணியமும் இவர்களையே சாரும்.

இந்த போக்கு இன்று இவர்களை ‘மக்கள் எதிர்ப்பு’ ஸ்தானத்தில் நிறுத்தியுள்ளது. யுத்தவெறி இலங்கை இராணுவத்தின் கொடுமை இவர்களையும் வெளிக்காட்டியுள்ளது. புலிகள் இராணுவ ரீதியாக பாரிய தோல்வியை காணும் இத்தருணத்தில் – தெற்கின் சிங்கள பேரினவாதம் பேயாட்டம் ஆடும் இத்தருணத்தில் – ஆயிரக்கணக்கில் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தல், இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் என்ன செய்கின்றன? தமிழ்நாட்டிலும் உலகெங்கும் மக்கள் லட்சக்கணக்கில் ஒடுக்குமுறைக்கு எதிராக திரளக்கூடிய இத்தருணத்தில் இவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். புலிகள் நசுக்கப்பட்டு போர் ஓயட்டும் என்று காத்திருக்கிறார்கள். இலங்கை அரசைப்போல் போர் முடிதலுக்கு காலவரையறை கணித்து ஆடி ஆவணிக்கு பிறகு கூட்டங்கள்போட திட்டங்கள் போடுகிறார்கள்.

புலி மைய வாதத்தில் புதைந்துள்ள இவர்கள் மக்கள் போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள். தனிநபர்கள் தெனாவட்டைக் காட்டி புகழ் சவாவி காய்கிறார்கள்.
மக்கள் போராட்டம் அவசியமான கட்டத்தில் நீங்கள் எங்கே? ஒடுக்கப்படுபவர்களுக்கான உங்கள் குரல் எங்கே? மக்களை மிரட்சியுடன் பார்த்தேன் ஒதுக்குகிறீர்கள்? சுத்தி நின்று மக்கள் இவர்கள் காதுகளில் ‘உ’ என்று கூவியும் இவர்கள் தூக்கத்தால் எழ மறுக்கிறார்கள். அவர்கள் கருனாவின் – பிள்ளையானின் அதனை வளர்க்கும் பேரின வாதத்தின் மடியில் நிம்மதியாய் தூங்குகிறார்கள். ஒரு சதத்துக்கும் உதவாத உங்களை சரித்திரம் சரிக்கும் காலம் வந்துவிட்டது.

பின்குறிப்பு : அவர்கள் / இவர்கள் என்ற பெரும் சொல்லாடலில் பல முகங்களை – பெயர்களை மைப்படுத்தியிருப்பினும் அவசியமேற்படின் அவற்றை பிரசுக்க எந்த தயக்கமும் இல்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • Thilaxan
    Thilaxan

    சேனன்,
    முக்கியமான விடயத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். நமது அரசியல் நிலைப்பாடுகளைப் பரிசீலிக்கும் கட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஆயினும் இன்றும் பலர் பழைய பல்லவிகள் பாடிக்கொண்டிருப்பது அவர்களது அறியாமையான் பாற்பட்ட விளைவு அல்லது அதிகார விருப்பினாலான நிகழ்வாகும்.

    ஆயினும் உங்களது இக்கட்டுரை ‘கிசு கிசு’ பாணியில் இருப்பது வருத்தம் தரக்கூடியது. நேரடியாகச் சான்றுகள் மூலம் தரக்கூடிய நிலை இருந்தும் நீங்கள் அவற்றைத் தவிர்த்திருக்கின்றீர்கள். இக்கட்டுரை ஒருசிலருக்கு மட்டுமே புரியக்கூடியது. நீங்கள் தக்க சான்றுகளுடன் அதைச் சமர்ப்பித்தால் காலத்தின் தேவை கருதிய இக்கட்டுரை முக்கிய ஆவணமாகும் என அடித்துக் கூற முடியும்.

    அதைச்செய்வீர்கள் என எதிபார்க்கின்றேன்.

    Reply
  • watch
    watch

    //தொண்ணூறுகளுக்கு முந்திய போராட்ட இரகசியத்தை, குழுகுழுத்து மையங்கள் எழுப்பினரே அன்றி இவர்கள் ‘மாற்றை’ உருவாக்கவில்லை. இவர்கள் ‘போராட்ட இரகசியம்’ வெறும் கழிவிரக்கம் கொண்டவையாகவும் சுயபுலம்பல்களாகவும் இன்றுவரை இருந்துவருகிறது. இவர்கள் கட்டமைத்தவை யாவும் புலி எதிர்ப்பு மையவாதத்தை சார்ந்தவையே. பழைய இயக்க சகவாசம், மக்கள் விடுதலை பற்றிய தெளிவற்ற போக்கு, மார்க்சிய எதிர்ப்பு என்று எல்லாம் பின்னிப் பிணைந்ததுடன் புலி எதிர்ப்பு மையம் சுழல்கிறது.//

    தமிழீழம் கிடைக்கும் போது, புலி எதிர்ப்பு மைய நண்பர்கள் தலையை பிய்த்துக் கொண்டு திரிவார்கள் என அடித்துக் கூறுகின்றேன்.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    புலம்பெயர் முற்போக்காளர்கள் இன்று ஏகத்துக்கும் எந்தவித மக்கள் பிரக்ஞையுமற்று மரக்கட்டைபோல் விறைத்துக் கிடக்கிறார்கள். கேட்டால் புலி முடியட்டும் பிறகு பார்ப்போம் என்ற பொருளில் கலாய்க்கிறார்கள். இது சுத்த மோசமான அயோக்கியத் தனம்தான். இன்று சண்டைக்காரர் இரண்டு பகுதியினரிடையேயும் சிக்கப்பட்டுச் செத்துக்கொண்டிருக்கும் சனங்களைப்பற்றிக் கேட்க எந்த நாதியுமில்லை. அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள் “இத்தனை காலமும் சனம் அழியவில்லையோ? இப்ப என்ன புதிசாய் சனஅழிவு எண்டு கதைக்கிறியள்? புலியைக் காப்பாத்தவோ?” இப்படி இன்னொருவகையான பயங்கரவாதிகளாய் இருக்கிறார்கள். அதேவேளை சேனன்:புலியெதிர்ப்புவாதம் எப்படி அரசுக்கு முண்டு கொடுக்கிறதோ அதேபோல் மவுனிகளாகிப்போன மாற்றுக் கருத்தாளர்களை நீங்கள் ஒருதலைப் பட்சமாக விரல் சுட்டுவதும் புலிக்கு முண்டு கொடுக்கும் சேனனாகிப்போகும் அபாயம் உண்டு. அல்லது வெளிப்படையாகவே சொல்லுங்கள்.

    இன்னுமொரு விடையம்: “இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே” என்று நீங்கள் சொல்வதினூடாக ஏதோ புதிதாக இலக்கியப் படைப்பொன்றை வெளியிடுவதற்கான முயற்சியின் முத்தாய்ப்பாகவும் அதற்கான முன்னுரைதான் இந்தக் கட்டுரையின் பல பகுதிகளும்போல் தெரிகிறதே…? அப்படியா? நல்லது. செய்யுங்கள். அள்ளுப்பட்டுச் சரிந்து ஓடும் ஆட்டு மந்தையிடையே உங்கள் ஆட்டையும் நுழைத்தவிட வேண்டும் என்ற “ஆசை” புரிகிறது. அதற்காக ஏற்கனவே மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் வெறும் காய்ந்தபுல் தின்னவே லாயக்குள்ளவை என்ற நையாண்டி எதற்கு நண்பரே?! விரைவில் தங்கள் படைப்பை எதிர்பார்க்கின்றோம். நான்தான் முதல் விமர்சனம் எழுதுவன் சரியோ…?

    சுரேஸ்- டபுள் எம்.ஏ

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    //தமிழீழம் கிடைக்கும் போது புலி எதிர்ப்பு மைய நண்பர்கள் தலையை பிய்த்துக் கொண்டு திரிவார்கள் என அடித்துக் கூறுகின்றேன்.// வோச்.

    திரும்பவும் பாருங்கப்பா… தமிழீழக் கனவிலிருந்து இன்னமும் வோச் மீளவில்லைப் போலிருக்கே. வோச்! விடிந்து விட்டது எழுந்திருங்கள். தமிழீழம்! தமிழீழம்!! தமிழீழம் !!! சரியான தமிழீழப் பிரிவினை என்றால் 72துண்டாகப் பிரிக்க வேண்டும். ஓ.கேவா?

    சுரேஸ்- டபுள் எம்.ஏ

    Reply
  • shangaran
    shangaran

    சேனன் நல்ல ஆக்கம்தான். ஆனா தீடீரென்று ஏன் இந்த மாற்றம்? புகலிடத்தில் தலித்தியம் சரி என்கிறீர்களா? பிழை என்கிறீர்களா? குழப்பமாக உள்ளது. புகலிடத்தில் தலித்தியம் பேசுபவர்கள் அரச ஆதரவாளர்கள்/ இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு பூரண ஆதரவு கொடுப்பவர்களாக எந்த அடிப்படையில் குற்றம் சுமத்துகிறீர்கள்.? இதை வெளிப்படையாக எழுதலாமே. மேலும் “முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி அண்மையில் கவிஞர் இளைய அப்துல்லா ஒரு கவிதை சி.டி. வெளியிட்டுள்ளது இவர்களில் பலருக்குத் தெரியாது.” என்று குறிப்பிடுகிறீர்கள்.இளைய அப்துல்லா இந்த கவிதை சி.டி.யை சுமார் 15வருடங்களுக்கு முன் வெளியிட்டுவிட்டார். புகலிடத்தில்கூட சில வருடங்களுக்கு முன் சேர்மனியில் நடந்த இலக்கிய சந்திப்பு ஒன்றில் இந்த சி.டி வெளியிடப்பட்டு விமர்சன அரங்கும் இடம்பெற்றது.இங்கும் இலங்கையிலும் மிகவும் பேசப்பட்டது. என்ன செய்வது இப்போதுதான் உங்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த துர்ப்பாக்கிய நிலைக்காக நீங்கள்தான் கவலை கொள்ளவேண்டும். சும்மா மற்றவர்களை குறைகூறுவதில் பிரயோசனம் இல்லை. இப்படி சில தவறுகள் இருந்தாலும் உங்கள் ஆக்கம் பிரயோசனமாக உள்ளது. கள்ள மெளனம் சாதிப்பதைவிட இவ்வாறு எழுதுவது எவ்வளவோ மேலானது.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    என்ன சேனன்.. உங்கள் முன்னைய தோழர்களை நோக்கியே சேம்சைட் கோல் போடுறியள். ஆனாலும் உண்மைகுறித்து எழுதியிருக்கிறீங்கோ. கட்டுரையில் நியாயமான காரணங்கள் இருக்கிறது. கீப் இற் அப்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்

    Reply
  • mannavan
    mannavan

    அதென்னவோ சகட்டு மேனிக்கு எல்லாரையும் பேர் போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கிவிட்டு இப்போ மட்டும் என்ன வந்தது? இபப்டி நாசூக்காய் ஒரு எழுத்து. சேனனுக்கு அதற்குத் துணிவில்லை. பிறகு ஒரு சால்யாப்பு. சும்மா விழுந்தபாட்டுக்கு குறி சுடாமல் ஆர் ஆர் என்ன நிலைப்பாடு வைச்சிருக்கினம். அதில என்ன தவறு என்று துணிவிருந்தால் சேனன் எழுதட்டும் பார்ப்பம். அதுக்குப் பிறகு பேசுவம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    வரவேற்கத்தக்க கட்டுரை. ஆனாலும் சில விடயங்களுடன் ஒத்துப் போக முடியவில்லை. கருத்துச் சுதந்திரம் சேனனுக்கும் பொருந்தும் என்பதால் அவர் தன் கருத்தை முன் வைக்கும் உரிமையுடையவர்.

    Reply
  • palli
    palli

    //இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே//– இதில் சேனனும் அடக்கமா??

    சேனனின் கருத்தில் பல்லி முரன்படுகிறது. காரனம் யாரால் என்ன முடியுமோ அதைதான் அவர்களால் செய்யமுடியும். சேனன் சொன்ன குப்பைகளுக்குள்ளும் சில குண்டுமணிகள் உண்டு. அதை இனம்காணுவது கடினம்தான் காரனம் இலக்கிய சண்டியரின் (சேனன் உட்பட) நாட்டாண்மை. 25வருட காலம் தமது கருத்தை தாம் உரிமையுடன் தேசத்திலோ அல்லது வாழவந்த புலம்பெயர் தேசத்திலோ சொல்லமுடியாத எமக்கு சில காலத்துக்கு முன்புதான் தேசம் என்னும் ஒரு புள்ளி கிடைத்தது. அதன் வரவுக்கு பின் சேனனால் சுட்டிகாட்டபட்ட குப்பைகள் (பல்லியும் அடங்கலாம்) அனைத்தையும் துணிவுடன் பல புதுமுகங்கள் தோலுரித்தன. அதிர்ந்து போன சேனன் சொல்லியவர்கள் அடாவடிதனமாக ஒரு 7400பேரை கொண்டு ஒரு பேனை போரை தொடங்கி இன்று புலிகள் போல் சுத்தி வளைக்கபட்டு(பின்னோட்டத்தால்) கிட்லர்போல் காணாமல்போன செய்தி சிலகாலத்துக்கு முன்புதான் சபையேறியதை சேனன் மறக்கலாமா?? ஆக குப்பைசேர காரணம் விமர்சனம் இல்லாமையே. ஆனால் தேசம்போல பல தளங்கள் விமர்சனத்தை தொடங்கி விட்டனர். ஆகவே குப்பைகள் கூட்டபடும். அதில் பல்லியின் பங்கும் கண்டிப்பாக இருக்கும்.
    பல்லி.

    Reply
  • pannaadai
    pannaadai

    //இடதுசாரிகள் மேல் ‘மத்திதர வர்க்க நக்கலை’ வளர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுக்குழு வாதங்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டுவருகிறார்கள்//
    நான்காவது அகிலம் அறிக்கை வெளியிட்டதும் சேுனனுக்கு ஒரு உசார் பிறந்திருக்கிறது.

    ஆனாலும்//மடத்தனம் புரியவில்லை// என்று சேனன் சொன்னது மிகவும் ஓவராய் படுகிறது.

    Reply
  • Suresh.Sundar-MM.A
    Suresh.Sundar-MM.A

    சேனன் குறிப்பிடும் “மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுங்குழு வாதங்களில்…” சேனனும் சிக்கித் திணறுவதை உங்கள் சுய விமர்சனமாய் சேனன் ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் நண்பரே…?!

    //சேனன் சொன்ன குப்பைகளுக்குள்ளும் சில குண்டுமணிகள் உண்டு. அதை இனம்காணுவது கடினம்தான் காரணம் இலக்கிய சண்டியரின் (சேனன் உட்பட) நாட்டாண்மை.//பல்லி.

    1000வீதம் உண்மை பல்லி. பல அற்புதமான படைப்புக்களை தந்த பல இளம் படைப்பாளிகள் இந்த இலக்கியச் சண்டியரின் சண்டப்பிர சண்டத்துள் மறைந்தே போனார்கள். அப்படிச் சொல்வதுகூட தவறு. ஓரங்கட்டப்பட்டு மறைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. பொய்மைகளை உண்மைச் சாயம் பூசி புனைவு இலக்கியம் என்று புலுடா விட்டுக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். விட்டகுறை தொட்ட குறையாக தமது பழைய புலி விசுவாசத்தைக் காட்ட இப்பொழுதும் இருட்டுக்குள் முகம் மறைத்திருந்து கொண்டு பொய்ச்சாட்சி எழுதி புத்தகம் போட்டுக் கொண்டடிருக்கிறார்கள். மேலே நான் குறிப்பிட்ட இந்த நல்ல படைப்புக்களின் இளம் படைப்பாளர்கள் ஓரங் கட்டப்பட்டதின் ஒருபகுதி பங்கு சேனனுக்கும் உண்டென்பதைத் தாழ்மையோடு சுட்டிக் காட்ட வேண்டித்தானுள்ளது.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Thaksan
    Thaksan

    புலம்பெயர் நாடுகளில் இருப்போருக்கே அச்சுறுத்தல் விடும் புலிகள் தளத்தில் இருந்தோரை எங்கே விட்டு வைத்தார்கள்? ராஜனி>செல்வி>பாலா>டொமினிக்(டானியல்)…… உட்பட்ட எத்தனை சாட்சியங்கள். எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? எத்தனை பேரின் குரல்லளை நசுக்கப்பட்டது? எத்தனைபேர் புலம்பெயர வைக்கப்பட்டார்கள்….? தமிழர் தலையில் மட்டுமல்ல தங்களின் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்ட புலிகள் இன்று ஒப்பாரி இலக்கியம் படைப்பவரையே மிச்சம் வைத்துள்ளார்கள். புதுவையின் மிதமிஞ்சிய பிற்போக்குகற்பனை வரிகளிலும் தம் புகழ்பாடும் வரிகளிலும் சுகித்திருந்தார்கள். இலக்கியங்களை மட்டுமல்லாது கர்த்தாக்களையும் அழித்து அழிவு இலக்கியம்(சுயசரிதம்) எழுதினார்கள். இந்த அழிவில் இருந்துதான் வாழ்வுக்கான இலயக்கியங்கள் பிறக்கும்.

    Reply
  • karththi
    karththi

    சேனன் மறைமுகமாக சுட்டிக்காட்டும் பாத்திரங்கள் யாரென எனக்குப் புரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும்படியாக எழுதி எல்லார் பார்வைக்கும் விடுவதில் எதுவும்கைகூடாது. இதைவிட சேனன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாகவே கதைத்திருக்கலாம் அல்லது கடிதம் போட்டிருக்கலாம்.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    சம்பந்ப்பட்டவர்களோடு இப்போதெல்லாம் சேனன் முன்புபோல நேரடியாகக் கதைக்க முடியாது கார்த்தி.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

    Reply