இலங்கை உங்களை வரவேற்கின்றது! சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு டிசம்பர் 8 வரை 3.5 லட்சத்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். இவ்வாண்டு 18 லட்சத்து 50,000 பேர் டிசம்பர் 8 வரை இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாண்டு 23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்க அரசு அறுகம்பே பிரச்சினையை வைத்து இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக கிடைக்கும் வருமானத்மை கட்டுப்படுத்த முனைந்திருந்தது. இலங்கை அரசு சுற்றுலாப் பயணத்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடையாமல் போனதற்கு அதவும் ஒரு காரணம்.
ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்னதாக 2018இல் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுவந்தது. இது இலங்கையின் மொத்தத் தேசிய வருமானத்தில் 5 வீதமாகும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாண்டு இதுவரை 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை ஈட்டித் தந்துள்ளது. அடுத்த ஆண்டு இது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களிலும் பார்க்க அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு வருமானத்தை எங்கு எங்கெல்லாம் இருந்து வரவைக்கமுடியும் என்று அதற்கான நடவடிக்கையைத் தூண்டி விடுகிறது. அதே சமயம் பணத்தை எங்கு எங்கெல்லாம் மிச்சப்படுத்தமுடியுமோ அங்கெல்லாம் மிச்சப்படுத்தகின்றது.
தெற்கு முதல் வடக்கு வரை பெண் தலைமைத்துவத் தொழிற்சாலைகள்!
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் உள்ள பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பிரித்தானியாவிலுள்ள கொள்வனவாளர்கள் விஜயம் செய்து உற்பத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்டுள்ளனர். இதுபற்றி கருத்து வெளியிட்ட எகஸ்போர்ட் டெவெலப்மன்ற் போட் தலைவர் மங்கள விஜயசிங்கே, இந்த தொழிற்சாலைகளுக்கான விஜயம் நாங்கள் பெண்களைப் பலப்படுத்துகின்றோம் என்பதனைப் பிரதிபலிக்கின்றது. இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தில் நாங்கள் பெண்களை நிலைநிறுத்தியிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
தெற்கில் இருந்து வடக்கு வரை பெண்கள் தலைமைத்துவத்தில் இயங்கும் 59 தொழிற்சாலைகளுக்கு பிரித்தானிய – இலங்கை குழு விஜயம் செய்து பார்வையிட்டது. இலங்கையின் எக்ஸ்போர்ட் டெவலப்மன்ட் போட்டும் இன்ரநசனல் ரேட் சென்ரரும் இணைந்து பிரத்தானிய – இலங்கை வர்த்தகக் குழுமமாக பெண் தலைமைத்துவ தொழிற்சாலைகளுக்கு பயணித்துள்ளனர். சி ரேட்ஸ் கொமன்வெல்த் பிளஸ் புரொகிராம் என்பதன் அடிப்படையில் கொள்வனவாளர்களை பிரித்தானியாவின் வடக்கு மற்றும் மேற்கு யோக்செயர் சம்பர் ஒப் கொம்மேர் மற்றும் கிரேட்டர் மன்செஸ்ரர் சம்பர் ஒப் கொம்மேர்ஸ் இல் இருந்து அழைத்து வந்திருந்தனர்.
இலங்கையனும் இல்லை இந்தியனும் இல்லை – மண்டியிட்டு கதறிய யாழ் இளைஞர்
தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் முழங்காலில் இருந்து கதறிய யாழ்ப்பாண இளைஞன். இலங்கையில் யுத்தம் நடந்த போது ஜோய் கே என்றழைக்கப்படும் இவ் இளைஞன் 8 வயதில் பெற்றோரால் படகு மூலம் தமிழ்நாடு அனுப்பிக்க வைக்கப்பட்டுள்ளார். மண்டபம் வந்தடைந்த ஜோய் அங்கே இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை இந்திய அரசாங்கத்தினுடைய எந்தவித அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
தற்போது 22 வருடங்கள் கடந்த நிலையில் சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கு கூட உரிய அடையாள ஆவணங்கள் வழங்கப்படாததால் தனது பெற்றோர் வசிக்கும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் அந்த இளைஞர் இதுவரை தான் 10க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்டச் செயலக அதிகாரி தன்னை இலங்கைக்கு அனுப்ப மறுப்பதாகவும், தன்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரித்து எந்த ஆவணமும் வழங்கவில்லை என்று தன்னை சமாதனப்படுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிட்டார். இவ்வாறு இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இலங்கைத் தமிழ்மக்கள் 3 தலைமுறை கடந்தும் இரண்டாம் தர பிரஜைகளாகவே தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் குறைந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வாங்கிக் கொடுத்தே தீருவேன் என பிழைப்பு அரசியல் நடத்தும் சீமானும் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளை கண்டுகொள்ளவில்லை.
இந்திய மத்திய அரசாங்கம் திபேத் அகதிகளுக்கு வழங்கி வரும் ஆதரவை அங்கீfhuத்தை இலங்கை அகதிகளுக்கு வழங்கவில்லை. இந்தியா இலங்கைத் தமிழருக்கு தீர்வு பெற்றுத்தரும் என நப்பாசையில் இருக்கும் தீவிர தமிழத் தேசியம் பேசும் கட்சிகளும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
அப்படியிருக்க ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகிய குறித்த காணொலியை பகிர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த இளைஞனை இலங்கைக்கு அழைத்து வந்து அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போரின் விளைவுகளால் இனி எந்த ஒரு இளைஞர் வாழ்க்கையும் எதிர்காலKம் மறுக்கப்படக்கூடாது. தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாமல் கூட வேதம் ஓதும் போது இலங்கைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக காட்டிக்கொள்ளும் நடப்பு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நித்திரையில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே கடற்தொழில் அமைச்சரை சந்தித்ததாக இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயம் தனது எக்ஸ் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பில் மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் எனப் பேசப்பட்டதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர டிசம்பர் 15இல் டெல்லி செல்ல உள்ளார். அப்போதும் இப்பிரச்சினை பேசப்பட்டு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என கடற்தொழிலாளர் சங்கம் கோரிக்கைவிட்டுள்ளது.
தன்னுடைய நாட்டுப் பணிப் பெண்ணை அடிமையாக்கிய இலங்கைப் பெண் ராஜதந்திரிக்கு சர்வதேச தொழில் அமைப்பில் நியமனம்!
அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த ஹிமாலி அருணதிலக்க, தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி தன்னுடைய வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை அடிமையாக வைத்து, வேலை வாங்கியமைக்காக, அவருக்கு 6,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த, அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு குழந்தைகளின் தாயான பிரியங்காவை வேலைக்குக் கூட்டிவந்து அவரை ஒரு நாளைக்கு பதின்நான்கு மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை வாங்கிவிட்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு டொலர் வரையே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பிரியங்கா, ஹிமாலியிடம் 2015 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது அவருடைய கடவுச்சீட்டையும் இந்த ராஜதந்திரி கைப்பற்றி வைத்திருந்தார். சிங்களம் தவிர வேறுமொழி தெரியாத பிரியங்கா வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளார். யாருடனும் பழக அனுமதிக்கப்படவில்லை.
இவ்வளவு கொடுமைகளைப் புரிந்ததற்காக பிரியங்காவுக்கு வழங்க வேண்டிய சம்பளம் அதற்கான வட்டி எல்லாவற்றையும் மதிப்பீடு செய்து, ஹிமாலி அருணதிலக்க 5,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அவரை அடிமையாக தடுத்து வைத்திருந்த குற்றத்திற்கு மேலும் 1,00,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே போன்றதொரு சம்பவம் பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்றது. ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவிலும் இவர்கள் ஒருவரைத் தடுத்துவைத்திருந்து கொடுமைப்படுத்தியது தொடர்பில் பிரித்தானிய பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்து இருந்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. இந்த ராஜதந்திரிகள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டனர்.
அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஹிமாலி அருணதிலக்கவுக்கு எதிராகத் தீர்ப்பளித்த போதும் முன்னைய இலங்கை அரசு அவரை ஜெனிவாவில் ஐக்கியநாடுகள் சபையின் நிரந்தர பிரிதிநிதியாக நியமித்துள்ளது. மேலும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஊழலுக்கு எதிரான அரசாங்கம், நாட்டை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் நேர்மை, ஒழுக்கம் தொடர்பில் கூடிய கவனமெடுப்பதுடன் இவ்வாறானவர்களை அவர்களுடைய பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றது.
வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார்.
உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாள் காய்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Bill & Melinda Gates மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகள், பிரதான பணிப்பாளர் ஹரி மேனன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் போஷாக்கு, விவசாயம், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் மகளிர் பொருளாதாரத்தை வலுவூட்டல் தொடர்பான மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி மேனன் இங்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன் இலங்கையில் விசேடமாக “டிஜிட்டல் விவசாயம்” மற்றும் “டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள்” ஆகியவற்றின் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதி வசதிகள் மற்றும் பொது அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான விடயங்கள் குறித்தான அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி பிரதமர் இங்கு விளக்கமளித்தார்.
இக்கலந்துரையாடலில் Bill & Melinda Gates மன்றத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவுக்கான துணைப் பணிப்பாளர் தனுஜ மீகஹவத்த ஆகியோர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் சமுகமளித்திருந்தனர்.
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று (11) தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருகோணமலை – சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான நபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது விசாரணைகள் முடிவுற்று நேற்று (11) தீர்ப்பு வழங்கப்பட்டபோதே மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா குற்றவாளிக்கு எதிராக 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்குமாறு தீர்ப்பை வழங்கியிருந்தார்.
அத்துடன் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அரச சட்டத்தரணி நசிகேசன் முன்னிலையாகியிருந்தார். சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரினால் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியில் இருந்து மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமி மூன்று முறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் ஒருமுறைக்காக 10 வருடங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் 30 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்ட ஈடாக ஒரு குற்றத்திற்காக தலா ஒரு இலட்சம் வீதம் மூன்று இலட்சம் ரூபாய் நட்டயீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நம்பிக்கை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அல்லது சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.
உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது இலங்கை!
குரங்கின் கையில் தேங்காய்: தேங்காய் அரசியல்!
1) கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: அமெரிக்க ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகல்!
கொழும்பு துறைமுகக் கட்டுமானத்தை அதானி குழுமம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த கால இலங்கையரசை வற்புறுத்திச் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை புதிய தேசிய மக்கள் சக்தி அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா வழங்கி வந்தது. ஆனால் அதானி குழுமம் இக்கட்டுமானத்தை மேற்கொள்ளத் தேவையான 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க வங்கியிலிருந்து கடன்பெற்றே அதனைச் செய்வதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அமெரிக்க நீதிமன்றம் அதானி மோசடியான முறையில் நடந்துகொண்டதாகக் கூறி அதானிக்கும் அவருடைய குழுமத்தினருக்கும் பிடியாணை பிறப்பித்துள்ளதை அடுத்து, துறைமுகக் கட்டுமானத்திற்கான நிதியை வழங்க அமெரிக்க நிறுவனம் மறுத்துள்ளது. தற்போது அதானி குழுமம் தானாகவே கொழும்பு துறைமுகக் கட்டுமானத்திலிருந்து விலகிக்கொள்ள வாய்ப்புள்ளதாக பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இவர்கள் மன்னார் காற்றாலைத் திட்டத்திலிருந்தும் விலக வேண்டும் என இலங்கை மக்கள் குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) எனப்படும் ஆழ்கடல் கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் இயக்கத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (CWIT) ஆகியவற்றின் கூட்டமைப்பினால் CWIT உருவாக்கப்பட்டு ள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மற்றும் ஏழு பேர் மீதுஇ இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக கொடுக்க சதி செய்ததாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம்இ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது. அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்துள்ளது. மேலும் சட்டப்படி இவ்விவகாரம் கையாளப்படும் என தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்திட்டத்திற்கு, அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் 51 சத வீத பங்கை வைத்திருக்கும் அதானி குழுமம் US IDFC இன் நிதியுதவியின்றி திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2. குரங்கின் கையில் தேங்காய்: தேங்காய் அரசியல்!
சடுதியாக தேங்காயின் விலை அதிகரித்துள்ள சூழலில் இதற்கான முழுமையான பொறுப்பும் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் திட்டமிடப்படாத பொருளாதார கொள்கைகளின் விளைவே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். வருடாந்தம் 20 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக, இலங்கையில் அதீதமாக இனவிருத்தியடைந்துள்ள குரங்குகளின் ஒரு தொகுதியை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தி, மரத்தில் புடவை கட்டுதல், தாள்களை தொங்கவிடுதல், நிலத்தின் ஒரு பகுதியை மீண்டும் புல்வெளிக்கு விடுதல் போன்ற நடைமுறைக்கு மாறான தீர்வுகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குரங்குகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இன்னும் வாய்ப்பு இருப்பதால், அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் பின்னர் அதிகரித்துள்ள குரங்குகளின் இனவிருத்தியினால் வடக்கு மக்களை குறிப்பாக வன்னி மாவட்ட மற்றும் தென்மராட்சி மக்களும் மிக அதிகமான சிரமங்களை எதிர்கொள்ளவதாக முறையிடுகின்றனர். கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் குரங்குகள் தேங்காய்களை மட்டுமல்ல, முருங்கைக்காய்கள், மாங்காய்கள், வாழைக்குழைகள் மற்றும் இதர உப பயிர்களையும் சேதப்படுத்தி அழிப்பதாகவும் மக்கள் முறையிடுகின்றனர். இன்று நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இயற்கையும் மிருங்களும் கூட மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன.
இப்பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து சூழலியல் ஆர்வலர்களும் இணக்கமான ஒரு தீர்வுக்கு வர வேண்டும்.
3. அபிவிருத்தியும் இல்லை வேலையும் இல்லை: புலம்பெயரும் இளையதலைமுறை !
உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவதன் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களை தடுக்கலாம் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன். அதற்கு வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைய செய்யும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் டிசம்பர் 11 இல் இடம்பெற்ற பண்பாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்க வேண்டும். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள். அது அன்றைய நிலைமை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்க வேண்டும். எமது உள்ளூராட்சி மன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” எனவும் அறைகூவல் விடுக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபை முறைமைக்கு அப்பால் ஒவ்வோர் பிரதேசங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைகள் அரசியல் கட்சிகளின் கெடுபிடிகளாலும், ஊழல்களாலும் நிறைந்துள்ளதாக பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு மாகாண சபை ஊழலால் கவிழ்க்கப்பட்டதும் கடந்த கால வரலாறு. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்திக்கான கட்டமைப்பானது நாட்டின் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதே போன்றதான ஓர் கருத்தையே ஆளுநர் வேதநாயகன் வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.
4. சர்வதேச அளவில் சாதிக்கும் இலங்கைத்தமிழ் வீரன் புசாந்தன் !
சினிமா தொடங்கி விளையாட்டு வரை தென்னிந்திய ஊடகங்களும், இந்திய ஊடகங்களுமே கதி என இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் பெயர் தெரியுமோ இல்லையோ ஆனால் தென்னிந்திய அரசியலின் அத்தனை அசைவுகளையும் தெரிந்து வைத்திருப்பர். அது போலவே தான் எப்படி இந்தியாவில் கிரிக்கெட் என்கிற விளையாட்டு வணிகமயப்படுத்தப்பட்டு ஏனைய விளையாட்டுக்களும், திறமையானவர்களும் ஊடகங்களின் பார்வையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டார்களோ அதே நிலை தான் இலங்கை தமிழர் மத்தியிலும் நீடிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லை – இது ஓர் இனவாத நாடு என ஒரு தரப்பினர் கூறிக்கொண்டே இருந்தாலும் மறுபுறமாக திறமை உள்ள தமிழ் இளைஞர்கள் தேசிய சர்வதேச மட்டத்தில் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு பளுதூக்கும் வீரர் சற்குணராசா புசாந்தன்.
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Power Lifting) பளு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றிருந்தார். இது இலங்கை விளையாட்டுத்துறையின் பாரிய மைல்கல்லாக அமைந்ததுடன் தமிழ் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளையும் இது திறந்து விட்டிருந்து.
இந்த நிலையில் தற்போது உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்றுவரும் சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட புசாந்தன் 3ம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய வெற்றியை பலரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
5. பணம் செலுத்தி இந்திய மீனவர்கள் வடகடலில் மீன்பிடிக்கலாம் முன்னாள் கடற்தொழில் அமைச்சரின் திட்டத்தை இந்நாள் அமைச்சர் நிறுத்தினார்!
அத்துமீறி இலங்கையில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வாக முன்னாள் கடல்த்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் கைவிடப்பட்டதாக புதிய கடல்த்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
டக்ளஸ் தேவாநந்தா முன்னதாக அரசாங்கத்துடனும் கடல்த்தொழில் திணைக்களத்துடனும் கலந்திரையாடி வடகடலில் கட்டணம் செலுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்திருந்தார். இத் திட்டமானது இலங்கை மற்றும் இந்திய கடல்த்தொழில் பிரச்சணைகளுக்கு நிரந்தர தீர்வாகாது என்றும் கூறும் அமைச்சர் சந்திரசேகர் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிடையேயான நேரடியான கலந்துரையாடல் மூலம் இப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காணலாம் என்கிறார்.
இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணும் வரை கைதுகள் தொடரும். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கிலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
6. உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது இலங்கை!
இலங்கை உணவு உற்பத்தியில் தன்நிறைவை நோக்கி தனது முதலாவது அடியை எடுத்து வைத்துள்ளது. அரிசி இறக்குமதிக்கான வரியை 66 வீதம் வரை உயர்த்தி உள்ளது இலங்கை அரசு. இலங்கையின் உணவுப் பாதுகாப்பையும் போசாக்கு உணவையும் உறுதிப்படுத்தும் அமைப்பு ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இறக்குமதிக்கான வரியை அதிகரித்து அதனை கமக்காரர்களுக்கு வழங்குவதனூடாக உள்ளுர் உற்பத்தியை மீள ஊக்குவிப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு தொன் அரசியை இறக்குமதி செய்ய 65,000 ரூபாய் வரி விதிக்கப்படுகின்றது. உள்ளுர் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்கும் காத்திரமான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. கடந்த அரசுகளைப் போலல்லாமல் உள்ளுர் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற கொள்கையின் அடிப்படையிலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் ஜனவரி யில் பதவியேற்க உள்ள டொனால் ட்ரம் பதவியேற்றவுடன் இறக்குமதிக்கான வரிகளை ரொக்கட் வேகத்தில் ஏற்றப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். டொனால் ட்ரம்மின் இந்த மிரட்டல் வெறும் வாய்ச்சவடால் அல்ல. அவருடைய கடந்த ஆட்சிக் காலத்திலும் இதே போன்ற நடவடிக்கையில் அவர் குதித்து சீனாவோடு ஒரு வர்த்தகப் போரையே நடத்தினார். இம்முறை இவருடைய வர்த்தகப் போர் அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இருக்கும் என்பதையும் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால் ட்ரம் தெரிவித்துள்ளார். தற்போது முதலாளித்து நாடுகளே சந்தைப் பொருளாதாரத்தை ஓரம்கட்டிவிட்டு தங்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் குறியாக உள்ளன.
ஆனால் உலகப் பொருளாதாரச் சண்டியர்களான அமெரிக்காஇ சீனாஇ இந்தியாவுக்கு மத்தியில் குட்டி இலங்கையும் தன்னுடைய பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பதை உள்ளுர் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இலங்கையில் அரிசியின் விலையை நிர்ணயிப்பவர்களாக விரல்விட்டு எண்ணக் கூடிய இறக்குமதியாளர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் லட்சக்கணக்கான கமக்காரர்களின் அடிமடியிலிருந்து புடுங்கி லாபமீட்டுகின்றனர். தற்போது அரசுக்கும் அரிசி மாபியாக்களுக்குமிடையே ஒரு யுத்தம் போய்க்கொண்டுள்ளது. சிறிதுகாலத்துக்கு விலை விடயத்தில் நெருக்கடியைக் கொடுத்து அரசுக்கும் மக்களுக்கும் உள்ள தேன்நிலவுக்கு ஆப்புவைப்பதில் இந்த அரிசிஇ தேங்காய் மாபியாக்கள் தீவிரமாக உள்ளனர்.
7. நிதிமுகாமைத்துவ சந்தை நிபுணர்களை உருவாக்கு யாழ் பல்கலையோடு ஒப்பந்தம்!
இலங்கையின் எஸ்ஈசி – Securities and Exchange Commission யாழ் பல்கைலக்கழகத்துடனான தன்னுடைய ஒப்பந்தத்தை மீளுறுதி செய்துள்ளது. இதன்படி இலங்கையின் அடுத்த தலைமுறையினருக்கான நிதிச் சந்தை நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கு வழங்குவதற்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைந்து செயற்படும் முறையால் கல்வியல் ரிதியிலும் நிபுணத்துவ ரிதியிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிதி முகாமைத்தவத்தில் புதிய சிந்தனைகளைக் கொண்டுவருவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இது வழிகோலும் என எதிர்பார்க்கப்டுகின்றது. இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய பல்கலைக்கழகங்களோடு செய்யப்படுவதால் சிந்தனைப் பரிமாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இது இட்டுச்செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் சீனத் தூதுவர் செய்ய வந்த உதவியைத் தட்டிக்கழித்த யாழ் பல்பலைக்கழகம்இ அதற்குப் பின் இந்தியா வழங்கிய உதவியை கூடிப் பெற்று அதன் படங்களையும் வெளியிட்டுக் கொண்டாடினர். தற்போது பல்கலைக்கழகம் உள்ள கீழ் நிலையிலிருந்துஇ அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகத்திற்குப் பயனுள்ளதாக மாற்றுவதற்கான எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையெனஇ தன்னுடைய உயர்கல்விக்காக வெயிநாடு சென்றுள்ள விரிவுரையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். கலைப்பீடத்தில் உள்ள பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர்இ அண்ணாமலை பல்கலைக்கழக கலாநிதிப் பட்டம் என்றால் அது சபாநயகர் ரத்வலவின் கல்லா நிதிப்பட்டம் போன்றது தான் என்றார்.
8. சந்தை நிலைமைகளும் தேசிய மக்கள் சக்தியுடன் தேன்நிலவில் உள்ளது!
ஜனாதிபதி அனுராவின் அமோக வெற்றியைத் தொடர்ந்தும்இ தேசிய மக்கள் சக்தியின் மிகப்பெரும்பான்மைப் பலத்தைத் தொடர்ந்தும் 12வது வாரமாக சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையின் அரச பங்குகளில் முதலிட்டு வருகின்றனர். கடந்த வாரம் மட்டும் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. கடந்த 12 வாரங்களில் நூறு மில்லயன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பண வீக்கத்தை குறைக்கும் கொள்கைகள் சாதகமான பொருளாதார நிலைமைகளை ஏற்படுத்துதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் வட்டி வீதத்தை குறைத்ததும் அதனை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் ரூபாயின் பெறுமதியை அதிகரிக்கச் செய்துள்ளது.
டிஜிற்றலைசேசன் மூலம் என்ன தேவை என்பதையும் எங்கே பதுக்கப்படுகின்றது என்பதையும் அறியமுடியும்! நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவோம் – அருள்கோகிலன்
அண்மையில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இலங்கையின் டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றதன் முக்கியத்துவம் என்ன..? டிஜிட்டல் பொருளாதாரம் என்பது இலங்கைக்கு ஏன் முக்கியமானது..? அதன் அடிப்படையில் உள்ள வாய்ப்புக்கள் அபிவிருத்தி திட்டங்கள் என்ன..? அனைத்து துறைகளையும் Digitalisationஆக்குவதன் நோக்கம் என்ன என ஆக்கப்பூர்வமான பல விடயங்களை தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவ கலாநிதி அருள் கோகிலன் தேசம் திரையின் இந்த நேர்காணலில் பகிர்கிறார்.