இலங்கை உங்களை வரவேற்கின்றது! சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு டிசம்பர் 8 வரை 3.5 லட்சத்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். இவ்வாண்டு 18 லட்சத்து 50,000 பேர் டிசம்பர் 8 வரை இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாண்டு 23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்க அரசு அறுகம்பே பிரச்சினையை வைத்து இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக கிடைக்கும் வருமானத்மை கட்டுப்படுத்த முனைந்திருந்தது. இலங்கை அரசு சுற்றுலாப் பயணத்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடையாமல் போனதற்கு அதவும் ஒரு காரணம்.
ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்னதாக 2018இல் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுவந்தது. இது இலங்கையின் மொத்தத் தேசிய வருமானத்தில் 5 வீதமாகும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாண்டு இதுவரை 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை ஈட்டித் தந்துள்ளது. அடுத்த ஆண்டு இது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களிலும் பார்க்க அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு வருமானத்தை எங்கு எங்கெல்லாம் இருந்து வரவைக்கமுடியும் என்று அதற்கான நடவடிக்கையைத் தூண்டி விடுகிறது. அதே சமயம் பணத்தை எங்கு எங்கெல்லாம் மிச்சப்படுத்தமுடியுமோ அங்கெல்லாம் மிச்சப்படுத்தகின்றது.