செய்திகள்

செய்திகள்

செய்திகள்

13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

da-de.gifஇலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த கோரியும், அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்க கோரியும் ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரமைச்சரவை அங்கீகாரத்திற்கான பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது போல் வடக்கிலும் விரைவாக மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி தலைவர் விதாரண அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் தெரிவித்திருந்த ஆலோசனைக்கு இணங்க மாகாண சபைகளுக்கான உரிமைகள் நிறைவானதாகவும் உயரிய பயன்பாடுடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுகையில் சர்வகட்சி தலைவர் திசவிதாரண அவர்கள் மேற்குறித்த தீர்வுத்தட்டத்தை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்றும் புலித்தலைமையின் நடவடிக்கைகள் இல்லாதெழிக்கப்பட்ட போதிலும் புலித்தலைமைக்கு சார்பான தமிழ் அரசியல் கட்சிகள் அழிவுப்பாதையிலேயே தொடர்ந்தும் மக்களை இழுத்து செல்வதாகவும் தெரிவித்திருந்ததோடு அரசு இத்தருணத்தில் தீர்க்கமான அரசியல் தீர்வினை விருப்பத்துடன் முன்வைக்க வேண்டும் என்றும் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்: சோனியா

06-sonia.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.

இதனால் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘’காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.  சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள்.   மன்மோகன்சிங்தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர்.

இதில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்று உறுதியாக தெரிவித்தார்

ராகுல்காந்தியும் அமைச்சரவையில் இடம்பெறுவார்: மன்மோகன்சிங்

karunanithi-apalo-hos1.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி. இதனால் இன்று  பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   ‘’சோனியா, ராகுல் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் வெற்றீயை தந்திருக்கிறார்கள். அமைச்சரவையில் ராகுல்காந்தியும் இடம்பெறூவார்.   மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி

india-elc.jpgசிதம்பரம் தனி தொகுதியில் பாமகவின் பேராசிரியர் பொன்னுச்சாமியை வீழ்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார். சிதம்பரம் தொகுதியில், திருமாவுக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் ஆரம்பத்தில் பொன்னுச்சாமி முன்னிலையில் இருந்தார். பின்னர் திருமா முன்னணிக்கு வந்தார். கடும் இழுபறியின் இறுதியில் திருமாவளவன், 99 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

திருமாவளவன் பெற்ற வாக்குகள் – 4,28,516.
பொன்னுச்சாமி பெற்ற வாக்குகள் – 3,29,102.

ஏற்கனவே இத்தொகுதியில் இருமுறை போட்டியிட்டுள்ள திருமாவளவன் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச அழுத்தத்திற்கும் அடிபணியப் போவதில்லை: போகொல்லாகம

Rohitha_Bhogollagamaஎந்தவொரு சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்து கொள்கைகளை அசராங்கம் மாற்றிக் கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தோருக்கு நட்டஈடு வழங்கும் வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சுதேச கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகங்களினது நல் அபிப்பிராயத்தை வென்றெடுக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதுவராலயங்கள் அரிய பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த சில சர்வதேச சக்திகள் முயற்சி மேற்கொள்வதாகவும் ஒருபோதும் இந்த முயற்சி வெற்றியளிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி

tamilnadupolitics.jpgமதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில், 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.

முன்பு சிவகாசி என இருந்த தொகுதி தற்போது விருதுநகராக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாணிக் தாகூரும், கார்த்திக்கும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன் நிறுத்தப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே வைகோவுக்கும், மாணிக் தாக்கூருக்கும் இடையே கடும் இழுபறி இருந்தது. ஓரிரு சுற்றுக்களில் மட்டுமே வைகோ முன்னணியில் இருந்தார். மற்ற சுற்றுக்களில் தாகூர் முன்ணியில் இருந்து வந்தார்.

இறுதியில் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வியைச் சந்தித்தார்.

மண்ணைக் கவ்விய இடதுசாரிகள்

india-elc.jpgமேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இடதுசாரிகளுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலில் இந்த மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று தேசிய அளவில் 54 இடங்களி்ல் வென்ற இடதுசாரிகளுக்கு இம்முறை இந்த இரு மாநிலங்களிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தமே இடதுசாரிகளுக்கு 25 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.

கேரளத்தில் அந்தக் கூட்டணிக்கு கடந்த தேர்தலில் 19 இடங்கள் கிடைத்தன. அது இம்முறை 14 இடங்களை இழந்து 5 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

அதே போல கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களில் வென்ற இடதுசாரிகளுக்கு இம்முறை 16 இடங்களே கிடைத்துள்ளது.

இதன்மூலம் அவர்களது பலம் 25 ஆகக் குறைந்துள்ளது. அந்தக் கட்சிகளால் கடந்த முறையைப் போல மத்திய அரசின் மீது எந் நெருக்குதலையும் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மத்தியில் ஆட்சியமைக்க இவர்களது தயவே காங்கிரசுக்கு தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை, விருதுநகரில் வைகோ பின்னடைவு, காங்கிரஸ் முக்கிய நபர்கள் பின்னடைவு

chitambaram.jpgசிதம்பரத்தில் திருமாவளவன் 22630 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை, விருதுநகரில் வைகோ பின்னடைவு, காங்கிரஸ் முக்கிய நபர்கள் பின்னடைவு
 
பின்னடைவு
தங்கபாலு காங்க்
ஆர்.பிரபு கோவை
ஆர் வேலு பாமக பின்னடைவு
டி.ஆர்.பாலு திமுக பின்னடைவு
வைகோ மதிமுக பின்னடைவு
திருநாவுக்கரசை பாஜக பின்னடைவு

முன்னிலை:
குமார் அதிமுக திருச்சி
சித்தன் காங்க் திண்டுக்கல்
சுகவனம் திமுக கிருஷ்ணகிரி
நாராயணசாமி காங் புதுவை
தாமரை செல்வன் திமுக தருமபுரி
ஆர் எஸ் பாரதி திமுக தென்சென்னை
முக அழகிரி 1
திருமாவளவன் விசி

வெலிக்கந்த பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் 8 பேர் பலி, 27 பேர் காயம்

வெலிக்கந்த பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

இலங்கைப் பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளது – மங்கள

mangala.jpgஇலங்கைப் பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும் இந்த பிரச்சனை முடிவுறாது என்றே கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

கொழும்பிலுள்ள ஐக்கியதேசியக்கட்சியின் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.