எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
கனடாவிலுள்ள இலங்கையர்கள் றாகமையில் அமைந்துள்ள ‘றணவிரு செவன’ நிலையத்தில் பராமரிக்கப்படும் பார்வையற்ற இராணுவ வீரர்களின் பாவனைக்காக மடிக் கனணி ஒன்றையும் பேசும் கடிகாரங்களையும் அன்ளிப்புச் செய்துள்ளனர். இந்த அன்பளிப்புக்களை டொரன்டோவிலுள்ள இலங்கைக்கான கொன்சுயூலர் ஜெனரல் பந்துல ஜெயசேகர, மேஜர் துஸ்யந்த யாப்பாவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்துக் கையளித்தார்.
கனடாவின் டொரன்டோ நகரில் வசிக்கும் நாட்டுப்பற்று மிக்க இலங்கையர்களால் வழங்கப்பட்ட இந்த அன்பளிப்புக்கள் தாய்நாட்டுக்காக தமது உயிர்களையும் அவயங்களையும் இழந்த படைவீரர்களை கௌரவப்டுத்தும் நோக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றது. ஏப்ரல் 8 இந்திய அரசின் யுத்த ஒத்துழைப்பிற்கு எதிரான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்போராட்டங்களை ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற போராட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்களது அரசின் இந்த யுத்த ஒத்தழைப்பிற்கு எதிராக இந்திய மக்களும் சென்னையிலும் பெங்களுரிலும் புதுடில்லியிலும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். மான்ஹட்டன், லண்டன், ரெல்அவிவ், சுவீடன் ஆகிய நகரங்களில் ஒன்றினைக்கப்பட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
லண்டனில் இந்தியா ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ போராட்ட அமைப்பின் லண்டன் கிளை ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் அதன் சர்வதேச இணைப்பாளர் சேனன் இலங்கை யுத்தத்தில் இந்திய அரசின் ஒத்துழைப்புப் பற்றி விளக்கினார். இப்பொராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பலரும் தங்கள் கருத்தக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 4:00 மணிமுதல் 5:30 வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா ஹவுஸ் அமைந்திருந்த சதுக்கத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் சுற்றி வந்தனர்.
அப்போது பிபிசி செய்தி நிறுவனம் அமைந்திருந்த புஸ் ஹவுஸை ஆர்ப்பாட்ட அணி அண்மித்த போது ‘பிபிசி நீங்கள் எங்கே போனீர்கள்’ என உரக்கக் கோசம் எழுப்பப்பட்டது.
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது.
புலி ஆதரவு அமைப்புகள் தமிழ் மக்களை மையப்படுத்தி போராட்டங்களை புலிகளது நலன் சார்ந்து மட்டும் முன்னெடுக்கையில் மக்கள் நலன்களையும் முன்னிலைப்படுத்தி சிறிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லண்டனிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் Committe for Workers International அமைப்பினரும் பாரிஸில் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) தமிழ் மக்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சமூகங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல இளவயதினர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இவற்றுடன் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெறு போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.
பிரிட்டன், அமெரிக்காவில் 7 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதே நேரம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும்,இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவுள்ள அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாமின்றி உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட, நீராகாரமின்றிய இநத உண்ணா விரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது.
இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு இந்தியா துணை போகாது ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தி அமைதியான போராட்டத்தினை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபை வரை கொண்டு வந்ததற்காக மெக்சிக்கோ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
குடா நாட்டுக்கு வரும் வன்னி அகதிகளின் நலன்கருதி கைதடி பனை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 600 தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் கிடைப்பது மிகக் கடினமாகவுள்ள போதும் கிடைக்கும் கிடுகுகளைக் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டு அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தென்மராட்சி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்னி அகதிகள் தற்காலிக குடிசைகளில் தங்கி தாமே சமைத்து உண்பதற்கு விரும்புவதால் இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளையில், நலன் நோன்பு நிலையங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்புப் பிரிவினர் அதிகரித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்துக்கு இதுவரை 4,900 அகதிகள் வந்துள்ள போதும் இவர்களுக்கான சகல வசதிகளும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்நலன் நோன்பு நிலையங்களுக்கு தொலைபேசி வசதியும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகொப் கௌன்பேக்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. தலைவருடன் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி ஜக்குவாஸ் டி மையோவும் இலங்கை வந்துள்ளார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு என்பன தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கில் போர் இடம்பெற்று வரும் சூழலில் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஐ.சி.ஆர்.சி. வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அமைச்சர் ரோஹித பாராட்டுத் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் 536 பேர் புதன்கிழமை புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 230 பேர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் 19 தடவை புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து திருகோணமலை, புல்மோட்டை பகுதிகளுக்கு நோயாளிகள் உள்ளிட்ட வன்னி பொதுமக்களை அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு லிபியாவைச் சென்றடைந்தனர்.
லிபிய ஜனாதிபதி கேர்ணல் கடாபி பிறந்த ஊரில் விசேட அரச தலைவர்கள் வந்திறங்கவென நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘சேர்டி’ விமானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு நேற்று சென்றது. இக்குழுவினரை லிபிய பிரதமர் கலாநிதி அல் படாதி அலி அல் முஹம்மதி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மூஸா முஹம்மத் கோஸா ஆகியோர் வரவேற்றனர்.
இச்சமயம் ஜனாதிபதிக்கு விசேட அரச கெளரவம் அளிக்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையுடன் செங் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இலங்கை அரச தலைவர் ஒருவர் லிபியா வுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
அதனால் இரு நாடுகளுக்குமிடையிலான பல முக்கிய விடயங்கள் குறித்து உயர்மட்ட அரச தலைவ ர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் படவிருப்பதுடன், ஒப்பந்தங்களும் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.
இதனடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபிக்குமிடையிலான இருபக்க பேச்சுவார்த்தை நேற்று மாலை ஆரம்பமானது. இதேநேரம் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு லிபிய பிரதமருடனும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. லிபிய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவுக்கு நேற்றிரவு இராப்போசன விருந்துபசாரமும் வழங்கினார்.
பிரபாகரனின் பிறப்புச் சான்றிதழ் மீட்கப்பட்ட அறையில் இருந்து மேலும் பல ஒளிநாடாக்கள், புகைப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றிடையே தெற்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்களும் உள்ளன. இவற்றை தேர்தலின் பின்னர் வெளியிடவுள்ளோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
உணவை ஆயுதமாகப் பயன்படுத்தினால் புலிகளை 4 நாட்களில் அழித்துவிட முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் அரசாங்கம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தாது. பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் காலை உணவாக சாப்பிடும் தோசை கூட நாம் அனுப்பும் கோதுமை மா மூலமே தயாரிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
இஸ்ரேல் இராணுவம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி பலஸ்தீன மக்களை பட்டினிபோட்டு கொலை செய்ததுபோல நாமும் செய்தால் புலிகளை 4 நாட்களில் ஒழித்துவிட முடியும். ஆனால் நாம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தமாட்டோம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு உறுதி அளித்துள்ளோம்.
பொதுமக்கள் குறித்து கவனிக்காமல் காஸாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கியது போல நாமும் தாக்கினால் 10 நிமிடத்தில் புலிகளை அழித்து ஒழித்து விடலாம். ஆனால் உலகத்தில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாதவாறு பொதுமக்களுக்கு சேதமேற்படாத வகையில் எமது இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வன்னியில் சிக்கியுள்ள 30 முதல் 40 ஆயிரம் வரையான பொதுமக்களை மீட்பதற்கு மிகப் பாரிய மனிதாபிமான நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராகி வருகின்றனர்.
பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் நடமாடுவதை படையினர் கவனித்து வருகின்றனர். வன்னியில் அண்மையில் மீட்கப்பட்ட பீரங்கி செக்கொஸ்லாவாக்கியாவில் இருந்து தருவிக்கப்பட்டது என்பது புலனாகியுள்ளது. இது எவ்வாறு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெளிவு.
வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம், மேற்கொண்டு வருவதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய சட்டமூலம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்தற்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே மேற்படி சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த போதும் அந்த அங்கீகாரம் ஆறு மாத காலத்திற்கே செல்லுபடியாகும். வடக்கில் நிலவும் யுத்த சூழ்ல்நிலை காரணமாக குறித்த ஆறு மாத காலத்திற்குள் மேற்படி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாமற் போனது. வடக்கு மீட்கப்பட்டு வரும் இவ்வேளையில் வடக்கில் உள்ளூராட்சிச் சபை தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் மக்களுக்கான அரசாங்கத்தின் சேவைகள் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிர்வாகங்களை செயற்படுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரிதும் உதவும் என்பதால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரைப் பிரதேசத்தின், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின், வெல்லா வெளி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பீலி ஆறு கிராமத்தில் நேற்று அதி காலை 2.00 மணியளவில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டை உடைத்து பெண்ணைத்தூக்கி முற்றத்தில் வீசி தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு பெண் பிள்ளையின் தாயான ச. ரெத்தினம் (வயது 45) என கிராமசேவகர் என். ராகுலன் தெரிவித்தார். வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.