பிரபாகரனின் பிறப்புச் சான்றிதழ் மீட்கப்பட்ட அறையில் இருந்து மேலும் பல ஒளிநாடாக்கள், புகைப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றிடையே தெற்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்களும் உள்ளன. இவற்றை தேர்தலின் பின்னர் வெளியிடவுள்ளோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
உணவை ஆயுதமாகப் பயன்படுத்தினால் புலிகளை 4 நாட்களில் அழித்துவிட முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் அரசாங்கம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தாது. பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் காலை உணவாக சாப்பிடும் தோசை கூட நாம் அனுப்பும் கோதுமை மா மூலமே தயாரிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
இஸ்ரேல் இராணுவம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி பலஸ்தீன மக்களை பட்டினிபோட்டு கொலை செய்ததுபோல நாமும் செய்தால் புலிகளை 4 நாட்களில் ஒழித்துவிட முடியும். ஆனால் நாம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தமாட்டோம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு உறுதி அளித்துள்ளோம்.
பொதுமக்கள் குறித்து கவனிக்காமல் காஸாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கியது போல நாமும் தாக்கினால் 10 நிமிடத்தில் புலிகளை அழித்து ஒழித்து விடலாம். ஆனால் உலகத்தில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாதவாறு பொதுமக்களுக்கு சேதமேற்படாத வகையில் எமது இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வன்னியில் சிக்கியுள்ள 30 முதல் 40 ஆயிரம் வரையான பொதுமக்களை மீட்பதற்கு மிகப் பாரிய மனிதாபிமான நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராகி வருகின்றனர்.
பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் நடமாடுவதை படையினர் கவனித்து வருகின்றனர். வன்னியில் அண்மையில் மீட்கப்பட்ட பீரங்கி செக்கொஸ்லாவாக்கியாவில் இருந்து தருவிக்கப்பட்டது என்பது புலனாகியுள்ளது. இது எவ்வாறு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெளிவு.
மாயா
சேர்ந்து குளிச்சவங்க
நடுக்கத்தோடு
குளிரில்
பல்லி
ஜயோ ஜயோ அந்த கண்கொள்ளா காட்ச்சியை போடுங்கோ. அப்பதான் புலம் பெயர் தமிழர் தமிழரை அழிக்க பணம் கொடுப்பதை நிறுத்துவார்கள். ஒரு விடுதலை போராளி எப்படியெல்லாம் வாழ கூடாது என்பதுக்கு தம்பி பிரபாகரன் எடுத்துகாட்டு. ஒரு போராளி எப்படி இருக்க வேண்டும் என சொல்ல தமிழில் எந்த …………..அருகதை கிடையாது.
84ல் கழகத்தினர் பாடிதிரிந்த பாடல் வரி ஒன்று.
விடுதலைதான் மூச்சென்ற கூட்டம்.
இன்று வெளி(புலம்பெயர்)நாட்டில் உல்லாச ஆட்டம்.